போதும் கண்ணீர் என்று தோன்றியது.இது எனது நூறாவது பதிவு,அனைவருக்கும் நன்றி .
என்னடா !!! இங்க என்ன பண்ற ? என்ற குரல் கேட்டு மாதவன் திரும்பி பார்த்தான்.நானும் மாதவனும் ஒரே ஆபீஸில் மூன்று வருடமாக வேலை பார்த்து வந்தோம்.நான் அந்த ஆபீஸில் இருந்து வேறு வேலைக்கு வந்து விட்டாலும் இன்றும் அவனுடன் சனிக்கிழமை மாலை வேளைகளில் அண்ணா நகர் ப்ளூ ஸ்டார் அருகே டீ கடையில் ஒரு தம் அடித்து விட்டு பழைய ஆபீஸ் கதை பேசி விட்டு இருவரும் ,அரேபியன் நைட்ஸ் பாஸ்ட் புட் கடையில் ஒரு ஷவர்மா என்ற ஒரு அரேபியன் உணவை சாப்பிட்டு விட்டு எதாவது ஒரு புத்தக கடைக்கு சென்று வருவது வழக்கம்.

வழக்கத்திற்கு மாறாக அவன் வெள்ளி கிழமை மாலையே வந்து விட்டதால் எனக்கு கொஞ்சம் புதிராக இருந்தது.

" இல்லடா செம போர் .அதான் வந்தேன்.எங்கயாவது போலாம் மச்சி "

எங்கடா ?

இ .சி .ஆர் போலாம்.பைக் ல போலாம் !

டேய் பைக் ல போனா எனக்கு பின்னாடி கிழிஞ்சிரும் .

டேய் வாடா !! பொண்ணு மாதிரி அலட்டிக்காத !!

சரி இரு !! நான் அயர்ன் பண்ண துணிய மட்டும் கொடுத்துட்டு வர்றேன்

ஹ்ம்ம்

அவன் அடித்து கொண்டிருந்த ஒரு சிகரட்டில் ஒரு இரண்டு இழுப்பு எடுத்துக்கொண்டு நான் துணிகளை கொடுக்க சென்று விட்டேன்.

நானும் வெள்ளிக்கிழமை சீக்கிரம் வந்துவிட்டதால் அவனை சந்திக்க சரியாக இருந்தது.எனக்கும் இந்த ஒரு பிரேக் தேவை பட்டது.அவன் வந்தது எனக்கு நன்றாக தான் இருந்தது.அவன் புது பைக் வாங்கி இருந்தான்.அதனால் ஒரு நெடுந்தூர பயணம் செல்லலாம் என்ற எண்ணம் கூட அவனுக்கு இருந்து இருக்கலாம்.

அவன் தயாராக வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தான்.

டேய் இந்த ரம்யா இல்ல ,அவ சரியான ஆளுடா மச்சி.

ஏன்டா

ஒரே நேரத்தில நம்ம ஆபீஸ்ல ரெண்டு பேருக்கு டக்கால்ட்டி கொடுத்துட்டா.அதுல ஒன்னு நம்ம சீனியர் மேனேஜர் ராம்குமார்.கடைசில நம்ம விஷ்வா இல்ல

யாரு சர்வீஸ் விஷ்வா வா ?

ஆமாண்டா !! அவன் தான் ரம்யாவுக்கு வோட்டு போட்டு இருக்கான் !!

வோட்டா ? என்னடா சொல்ற ?

ஆமாண்டா ,போன வாரம் மஹாபலிபுரம் கூட்டு போயிருக்கான் ,நைட் அங்க ஸ்டே.

ஹோ ஹோ

ஆனா மச்சி ரம்யா செம டா

சீ கருமம் அவ ஒரு மூஞ்சின்னு அவளுக்கு போய் வழியிற பாரு

கோழி குருடா இருந்தா என்னடா ,குழம்பு ருசிய இருக்கும் .

நீ அந்த குழம்ப சாப்பிட்ட மாதிரி பேசுற ?

ஏன்டா குழம்பு ருசி எல்லாம் நான் வாசத்தை வச்சே சொல்லிருவேன்

ஆனால் மச்சி !! எனக்கு என்னவோ இந்த வோட்டு போட்ட மேட்டர் புரியவே இல்ல டா

என்னடா புரியல !! முடிட்சுட்டான் டா !! ரெண்டு பேரும் மெத்தைல உட்கார்ந்து இருக்கிற மாதிரி போட்டோ வேற !!!

ஹ்ம்ம்

நான் தயாராகி கொண்டே அவன் பேசுவதை கேட்டு கொண்டே வந்தேன்.

வேற யாராவது ?

இல்லடா நம்ம ரெண்டு பேர் மட்டும் போவோம் !!!

ஹ்ம்ம் சரி !! என்னடா உன் பிளான்

பிளான் எல்லாம் ஒன்னும் இல்லடா .ஆனால் எதோ போய் நல்ல ஒரு ரிசொர்ட் போய் சரக்கு அடிச்சு மல்லாக்க படுக்கணும்னு தோணுது.

சரி வந்து தொலை.மாச கடைசில உனக்கு ஆசை எல்லாம் வேற !!!

ஹி ஹி ஹி

இருவரும் அண்ணா நகரில் இருந்து கிளம்பும் பொது மணி எழு .இருவரும் ஒரு லார்ஜ் அடித்து விட்டு கிளம்பலாம் என்று நினைத்து இருந்தோம் .

ஆனால் இருட்டி விட்டதால் வேண்டாம் என்று விட்டு விட்டோம்.செக்கிங் இருக்கும் என்று தெரியும் என்ற காரணத்தினால் .

டேய் மாதவா,எனக்கு இந்த தடவை எதாவது ஒரு ரிசொர்ட் ல போய் ஒரு பொண்ணாவது கரெக்ட் பண்ணனும் டா .

பார்ரா!! டேய் என்னடா எதோ பெருசா வித்யாவுக்கு உண்மையா இருக்க போறேன் அப்படி இப்படின்னு சவுடல் விட்ட மாதிரி எனக்கு ஞாபகம் .

அட போடா நம்ம தான் இங்க பெரிய தமிழ் பட முரளி மாதிரி நிக்கிறோம் ,அவ அங்க என்ன பண்றான்னு யாருக்கு தெரியும்

அதுவும் சரி தான்.

மத்ய கைலாஷ் அருகே சரியான டிராபிக் .பத்து நிமிடமாகியது அந்த சிக்னலை கடக்க .திருவான்மியூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது இருவரும் ஒரு டீ குடிக்கலாம் என்று முடிவு எடுத்து கொண்டோம் .

" மச்சி இங்க வேண்டாம் டா ,அந்த காரைக்குடி ஹோட்டல் கிட்ட ஒரு நாயர் கடை இருக்கு அங்க குடிக்கலாம் "

அவனும் வண்டியை செலுத்தினான்.பல பைக்குகள் மாயஜால் தியேட்டேர் நோக்கி செல்வது எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.எல்லா வண்டிகளிலும் பெண்கள் பின் பக்கம் உட்கார்ந்து ,அந்த ஓட்டும் ஆணை எங்கும் தன்னை விட்டு ஓடி விடாதபடி பிடித்து கொண்டு சென்றார்கள்.

' ஏன்டா இவளுக ஏன் இப்படி கட்டி பிடிச்சு க்கிட்டு போறாங்க ?'

அவன் எவளையாவது பார்த்து இவள விட்டுட்டு ஓடிருவான்னு பயந்து தான் !!

நமக்கு வயிறு ஒன்னும் எரியல ! ஆனால் ஏன்டா கடுப்பா இருக்கு ?
ஹ்ம்ம்.அது போய் அவ கிட்டயே கேளு !!

ஏன்டா நீ லவ் பண்ண போது இப்படி தான் பண்ணியா?

ரெண்டு எஸ் பீ டீ ." என்று நாயர் டீயை எங்களிடம் கொடுத்தார்.

சேட்டா மூணு கிங்க்ஸ் பாக்கெட் கொடுங்க !!

சரி பதில் சொல்லு !! நீ லவ் பண்ண போது என்ன பண்ண ?

ஆமாம் டா எல்லாம் முடிஞ்சி வருஷம் ஆச்சி .இப்ப போய் கேளு !

சரி விடு கிளம்பலாம் !!

கொட்டிவாக்கம் ,பாலவாக்கம் நீலாங்கரை எல்லாம் தாண்டி சென்று கொண்டிருந்தோம்.இடையில் செக்கிங் கொஞ்சம் பலமாக தான் இருந்தது.

மச்சி எங்க டா போலாம் சொல்லு

ஒ__ நீ தானே எங்கயாவது போலாம் ன்னு கூப்பிட்ட ,அப்புறம் என்ன கேட்குற ?

சரி ப்ரீ யா விடு .ஸ்வீட் பிங்க் போலாம் !!

அது என்னடா அது.நம்ம கானத்தூர் தாண்டி இருபது கிலோ மீட்டர் !!

டேய் ரொம்ப தூரம் டா !!

வாடா அங்க நம்ம ஸ்டெல்லா மாரிஸ் 2004 பாஸ் அவுட் எல்லாம் இன்னைக்கி கெட் டுகதர் .

உனக்கு இப்படி மவனே தெரியும்

நான் நேத்து ராஜ்குமார் சாரோட மெரிடியன் ஹோட்டல் போயிருந்தேன் .அங்க அந்த பொண்ணுங்க சில பேர் பேசிகிட்டு இருந்தாங்க !!

அட பாவி .இது தெரிஞ்சா எங்க போகலாம்ன்னு கேட்ட?

ஹி ஹி ..அங்கேயே ஒரு குட்டிக்கிட்ட பேசிட்டேன்,அது நல்ல தான் பேசிட்சு.ஆனால் கொஞ்சம் திமிரு ,தலைக்கு மேல ..மாமு நம்மள விட மூணு பங்கு அடிக்குதுங்க பிசாசுங்க !! ராஜ்குமார் சர் மிரண்டுடாறு.

இரவு நேரம் ஆனதால் மாதவன் கொஞ்சம் பைக் ஓட்ட திணறி கொண்டிருந்தான்.நானும் அவனுக்கு பேட்சு கொடுத்து கொண்டே சென்றதால் அவனும் பிரெஷ் ஆக வே இருந்தான்.

மாயஜாலை தாண்டி சென்று கொண்டிருந்தோம்.இருவரும் ஒரு டீ மட்டும் குடித்து இருந்ததால் பசி எங்களை தின்று கொண்டிருந்தது.அங்கு சென்று பார்த்து கொள்ளலாம் என்று வண்டியை செலுத்தினோம்.

ஸ்வீட் பிங்க் வந்து சேரும்போது மணி பத்து .

மச்சி இங்க பாரு ! அதே கார்

யாரு காருடா?

அதான் டா ! காமினி !!

என்னடா பேரே ஒரு மாதிரி இருக்கு

ஆமாண்டா கஜகாமினி !!:)

ஹ்ம்ம்

உள்ளே போய் ரூம் புக் பண்ணலாம் " என்றேன்

ஹி ஹி ...ரூம் எல்லாம் புக் பண்ணியாச்சு !

என்னடா நாதரி ,,,எதுவுமே சொல்லல ?

சர்ப்ரைஸ் ..

உள்ளே நுழைந்தால் முழுவதும் பெண்கள்.பெண்கள் பெண்கள் பெண்கள்.
என்ன செய்ய வேண்டும் இப்பொழுது என்று தெரியாமல் பல்லை காட்டி கொண்டு நின்றோம்.சுற்றி பார்க்கலாம் என்று நினைத்து ரிசொர்ட் இன் வலது புறம் வழியே சென்றோம்.

நீச்சல் குளம் .
Babes,Babes Babes and ofcourse there was a smell of grass coming our way.

4 comments:

vinoth said...
This post has been removed by the author.
vinoth said...

mamu unnaku mattum enga da entha mathiri frnds maturan????

Anyways i always loved to have these kinda life..

But do u remember when i was supporting marraige?? but these kinda stuffs are a strict no after marriage.. probably a feature not a bug :P

Karthik said...

hmm...intha friends thane enakku kalam kalama mattuthu...remember the xii std lover girl when i was in tenth standard...Me and devanathan...kind of the same...he he he ...lots of stories to tell

vinoth said...

machi i still remember those days.. do u still have that carziness for manisha???