இன்று என் நண்பன் சத்யாவுடன் சாட் செய்து கொண்டிருந்தேன்.பொதுவான படங்கள் நண்பர்களை பற்றி பேசி கொண்டிருந்துவிட்டு எதோ எங்கள் பேச்சு வாழ்க்கையை பற்றி வந்தது.நான் திடீர் என்று புலம்புகிறேன் என்று உணர்ந்து கொண்டேன்.என்னவோ என்னை பற்றி அவன் கேட்க போய் அது என்னவோ எங்கோ என்று பயணிக்க ஆரம்பித்தது.


இந்த வாழக்கையில் என்ன கிழித்து விட்டோம் என்று யோசிக்கும் போது எதுவும் உருப்படியாக செய்ய வில்லை என்றே தோன்றுகிறது.வாழ்கையை என்னால் கையாள முடியவில்லை என்ற உண்மையை என்னால் பகிரங்கமாக ஒத்து கொள்ள முடியாவிட்டாலும் ,அது ஒரு இடத்தில் உண்மையாக தான் ஒளிந்து இருக்கிறது.இதில் என்ன கோழைத்தனம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.உண்மை கோழைத்தனமா என்ன ?


என்ன சொல்லவருகிறேன்,எல்லோரை போல் இன்ஜினியரிங் படித்தேன்.படிக்கும் பொழுதே எனக்கு தெரியும் நான் ஒரு இன்ஜினியரிங் படிக்க கூடாதவன் என்று .தழும்ப தழும்ப ஒரு பெண்ணை காதலித்தேன்,காதலிக்க பட்டேன்.வேலை இல்லை.பின்பு எம் .பி .ஏ .அதை ஒழுங்காக படித்தேன்,அங்கும் அதே காதல் .காம்பஸ் நேர்முகத்தில் வேலை.பிறகு காதலில் மிக முக்கியமாக தீர்மானங்கள் எடுக்க வேண்டிய கட்டாயங்கள்.காதலில் பிரிய வேண்டிய தருணங்கள் கொடுமையானவை அதுவும் பிரிவு உங்கள் அருகில் இருக்கிறது ,அந்த நாள் வருகிறது என்று எதிர் கொண்டு இருக்கும் நாள் சாவை விட கொடுமையான இளமை கொடுமைகள்.இன்ஜினியரிங் ஏன் படித்தேன்.புரியவில்லை.காதல் ஏன் செய்தேன் தெரியவில்லை.ஏன் வேலை இல்லாமல் சுற்றினேன்.புரியவில்லை.ஏன் இன்று இந்த வேலையில் இருக்கிறேன் விளங்கவில்லை.


எங்கோ அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ந்ததால் என் சம்பளம் அடி வாங்குகிறது.எவனோ திருநெல்வேலியில் குண்டு போட்டதால் இரவு நேரத்தில் படம் பார்த்து வரும் போது TN72 registration ஆனதால் என் வண்டியை ஓரம் நிறுத்தி விசாரிக்கிறான்.எல்லோரும் வீடு வாங்குகிறார்கள் என்று நானும் வீடு வாங்குகிறேன்.எல்லோரும் கல்யாணம் செய்கிறார்கள் அதனால் எனக்கும் பெண் பார்க்கிறார்கள்.எல்லாம் நல்லபடியாக இருக்கிறது அதனால் நானும் நல்லபடியாக இருக்கிறேன் என்று ஏற்று கொள்ளபடுகிறது.ஏன் புரியவில்லை.


இது நான் செய்ய வேண்டிய வேலைகள் அல்ல அது மட்டும் நன்றாகவே விளங்குகிறது.வாழ்கையில் சில நேரங்களில் சில கட்டுபாடான தீர்மானங்கள் எடுக்க பட வேண்டும்.அதை நான் தவற விட்டு விட்டேன் என்று தான் நினைக்கிறேன்.இனி இந்த வேலையில் இருந்து அடுத்த வேலை ,அப்புறம் கல்யாணம் அப்புறம் ஒரு கார் ,குழந்தை,அப்புறம் அதற்க்காக ஒரு வாழ்க்கை ,அதே சக்கரத்தில் தான் நானும் சுற்ற போகிறேனா.என்ன சக்கரமோ தெரியவில்லை . எனக்கும் இடமளித்து பயணிக்க வைக்கிறது.ஆனால் என் நிலை ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறது என்பது மட்டும் எனக்கு தெளிவாக தெரிகிறது.எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை.எனக்கு இந்த நிலை பிடிக்கவில்லை.


என் வாழ்வில் 25% நேரம் பெண்ணுடன் இருந்து விட்டேன்.அது முறிந்து போன பிறகு என் வாழ்கையில் அவ்வபொழுது பெண்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.என்ன செய்வது ஒரு Comparative factor வந்து கொண்டு என்னை முன்னேற விடாமல் தடுக்கிறது.பெண் என்னும் ஒரு விஷயம் மிக மிக Demanding அதற்கு மனம் இடம் கொடுக்க வில்லை என்று சொல்ல மாட்டேன்.அதை என்னால் Handle செய்ய முடியவில்லை.பெண் அழகான விஷயம் தான் ஆனால் புளித்து போய்விட்டதோ என்று தோன்றுகிறது.என்ன பார்த்து விட்டேன் என்று சந்தேக படுபவர்கள் ,ஏளனம் செய்பவர்கள் இருக்கலாம் அதற்கு சத்தியமாக என்னால் கூறு போட்டு சொல்ல முடியாது.பெண்ணை என்னால் இதற்கு மேல வைத்து கொண்டாட எனக்கு பலம் இல்லை.


இப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணுடன் பேசி அவளுடன் ஊர் சுற்றுவதை விட ஒரு படம் பார்ப்பது பிடிக்கிறது,அந்த நேரத்தை ஒரு புத்தகம் வாசிக்க செலவழித்தாலும் எனக்கு சம்மதம்.பெண் என்னை தேடி எங்காவது வந்து நின்றாலும் எனக்குள் ஒரு வித கலக்கம் தான் ஏற்படுகிறது.மிக சுலபமாக பெண்ணை எதிர் கொள்ளும் மானிடன் எனக்குள் மறைந்து ,வயதடைந்து போவதை நான் உணர்கிறேன்.


சொந்தஊரை விட்டு ஏதோ ஒரு மூலையில் பகிர்ந்து கொண்டு வாழ்வது ஒரு வழக்கம் தான்.எனக்கு சொந்த ஊரையும் பெற்றோருடனும் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.அங்கு ஏதோ ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்தாலும் சுகம் தான்.யார் தடுக்கிறார்கள் .போ நாளைக்கே என்ற குரல் கேட்கிறது.ஆனால் சத்தியமாக போக முடியாது.நான் கிறுக்கன் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவேன்.Peer pressure.


மின்சார ரயிலிலும் ஆள் இல்லாத பேருந்துகளிலும் போவது இப்பொழுதெல்லாம் நிம்மதியை தருகிறது.கதைகள் கிடைக்கிறது.என்னால் என்னை உணர முடிகிறது.உண்மையில் என் வாழ்கையை மாற்ற கூடிய நபர்களை தவிர்த்து இருப்பது மாறு வேடத்தில் இருப்பது போல் நிம்மதியாக இருக்கிறது.ஒவ்வொரு பொழுதிற்கும் ஒவ்வொரு மணி துளிக்கும் நான் இனி வரும் காலத்தில் நான் பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கு நன்றாக உரைக்கிறது.ஆனால் அந்த வீணடிப்புக்கு எல்லாம் நான் Accountable ஆக என் மனம் வெறுக்கிறது.


என் பத்து வருட எதிரியாக இருந்தாலும் இன்று என்னை பார்த்து பேசினால் எனக்கு ஒரு வித தயக்குமும் இல்லாமல் ஏற்று கொள்வேன்.ஏனில் உண்மையில் எனக்கு என்னை பற்றிய குழப்பமே தீரவில்லை அவன் செய்த காரியங்களை எல்லாம் மறந்து போய் விட்ட நிலையில் தான் இருக்கிறேன்.சில கற்பனைகள் சில உண்மைகள் இது தான் அனைவரின் கனவுகளும். கனவுகள் எல்லாம் நிஜமாய் போனால் வாழ்க்கை பொய்த்து விடும் என்று ஒரு நாளில் நம்பி இருந்தேன்.ஆனால் கனவுகளில் மட்டும் தான் நான் நினைக்கும் வாழ்கையை வாழ முடிகிறது.


கற்பனைகளை பெரிது படுத்தினால் ஒரு மாய உலகம் தெரிகிறது.அதில் என்ன ஆண் பெண்ணா எதுவும் தெரிவது இல்லை.ஆனால் என் கற்பனைகள் எல்லாம் என்னை தாண்டி இருப்பது என் இயலாமை என்று கூட சொல்லலாம்.அதற்கு ஒன்றும் செய்ய இயலாது.கற்பனைகள் கொண்டு வருவதும் ஒரு வித திறமை.


இங்கு நான் எனக்கு திறமை இல்லை,எனக்கு வசதி இல்லை ,எனக்கு காதல் வாய்க்கவில்லை என்று புலம்பவில்லை.என் நிலை வேறு எனக்கு இந்த Routine பிடிக்க வில்லை .I dont want to be defaulted,But some how I get defaulted in the system..இன்று இருக்கும் நிலையில் நான் வெற்றி கரமாக தான் இருக்கிறேன்.வசிக்கிறேன்.ஆனால் அது ஒரு வித கட்டாய நிலை கட்டாய கோட்பாடுகள்.


வாழ்கையில் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் சுகம் தான்.ஆனால் அது எங்கு கொண்டு போய் என்னை சேர்க்கும் என்று கூட எனக்கு தெரியாது.எது எப்படியோ வெகு விரைவில் ஒரு சில மாற்றங்கள் சில ஆச்சர்யங்கள் என்னை எதிர் நோக்க காத்து இருக்கின்றன.


இந்த இடுமையில் ( பதிவு) எந்த வித தீர்மானமும் கொண்டு வர நான் முனையவில்லை.அதற்கு அவசியமும் இல்லை.நான் என்ற இந்த நிலை எல்லோரும் தான் என்று நினைக்கிறேன்.யோசித்து பார்த்தால் உண்மை விளங்கும். இந்த பதிவு இருக்கும் வரை தான் நானும் இதை பற்றி யோசிப்பேன் ,படிக்கும் வரை தான் நீங்களும் யோசிப்பீர்கள் ஏனில் நாளைய பொழுது நானும் வேலைக்கு செல்ல போய் விடுவேன்,சந்தர்ப்பம் நேரும் போது பேசி விடுவோமே , before I get in to the system,Routines and Defaults.

விவாதம் கொள்ள விரும்புவர்களை நான் வரவேற்கிறேன்.

18 comments:

prabukarthik said...

அருமையான பதிவு.

சரி. விஷயத்துக்கு வரேன்.

>>இந்த வாழக்கையில் என்ன கிழித்து விட்டோம் என்று யோசிக்கும் போது எதுவும் உருப்படியாக செய்ய வில்லை என்றே தோன்றுகிறது.

நானும் இப்படி எல்லாம் யோசித்திருக்கிறேன். இப்போவும் யோசிக்கிறேன் ஆனா யோசிக்கும் தருணங்கள் கம்மி ஆகிகிட்டே வருது.

இதை பத்தி பேசறதுக்கு முன்னாடி 'உருப்படி' ன்னா என்ன ன்னு பேசணும். இது அவரவருக்கு மாறுபடும்.

'என்னால் ஒரு மண் புழு வைக் கூட மாற்ற முடியாது' ன்னு எப்போவோ எதிலோ சுஜாதா சொன்ன மாதிரி தான் வாழ்க்கை.

இந்த canvas தான் நமக்கு ன்னு Accept பண்ணிட்டா, painting a ஸ்டார்ட் பண்ண முயும். கான்வாஸ் இல் ஒரு மூலையில் ஒரு சின்ன விஷயம் நமக்கு பிடிச்ச மாதிரி பெயிண்ட் பண்ணினால் ஒரு திருப்தி வரும், மேலும் புதிதாக பண்ணனும் ன்னு தோணும். கான்வாஸ் ல வரையறதை பார்த்து, காலம் நமக்கு வேற ஒரு கான்வாஸ் குடுக்கும்...

இந்த கான்வாஸ் பிடிக்கலை ன்னு உட்கார்ந்து இருந்தா ஒன்னும் நடக்காது.

நெறைய பேருக்கு இந்த கான்வாஸ் கூட கேடைப்பதில்லை என்கிற உண்மை நாம் மறந்துடுறோம்.

கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு உண்மை விளங்கும். நல்லா பெயிண்ட் பண்ண தெரிஞ்சவனுக்கு கான்வாஸ் ஒரு மேட்டர் இல்லை ன்னு...

இதான் எனக்கு இப்போதைக்கு இருக்கும் தெளிவு.. கொஞ்ச நாள் கழிச்சு மாறினாலும் மாறும். Absolute ன்னு Life ல எதுவும் இல்லை.. ன்னு தான் தோணுது...

priyums said...

Very nice though provoking..- Nijamma sandhoshama illamal manasu kulley etho kuzhapangalai vechirukara pola irukku.

Sandhoshama irukalamey mudinja vangalai sandhoshama vekkalame....athu pothumey..enna kizhikanum??

Ethukku thevai illa aaraichi?

Vinoth Pradeep said...

Think you started worrying about present past and future, which happens to all guys (All who could get some free time to think :).. they really do this)

Everyone has their own view point on how to live?, what did i do to make others live? What did i achieve today?.. so on and so forth... Now you have got a chance.. you have achieved something, on which guys are still dreaming about...

So You have lost nothin. You gained, You are gaining and You will gain as well.. This stands true for all in one way or other :P

Chriz said...

a good post.. certain details are personal for you.. futurela indha blog padikkumbodhu vearu vidhamaaga eduthu kolla vaaipu ulladhu..

Sivaram said...

Good writeup for being frank and i will agree with what Chris said ..:) but every thing happen in life.

Karthik said...

@ Prabu Karthik

Thanks prabu,

எனக்கு புரிகிறது,,மண் புழுவை மாற்ற முடியாது என்று.எனக்கு மறுத்தாலும் புரிகிறது அதனால் ஏற்படும் மாற்றங்களும் புரிகிறது.அது என்னை ஆட்கொள்வது தான் எனக்கு இடறுகிறது.உண்மையில் சொல்ல போனால் நீங்கள் சொல்லியது போல் இது தான் நமக்கு என்ற நிலை வர தேவை படுவது காலம்,ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் சில நேரம் ஏன் இதை நாம் செய்கிறோம் என்ற ஆராய்ச்சி நேருவதை சத்தியமாக தடுக்க முடியவில்லை.என்னை களைப்படைய செய்து விடுகிறது.என்னை தாண்டி போன சிந்தனைகளாக இதை எடுத்து கொள்ளலாம்.

நீங்கள் சொல்லியது போல் எல்லாம் சரி பட்டு வரும் பொழுது புதிய கான்வாஸ் வந்து நிற்கும்.நம் பாஷையில் சொன்னால் "Requirement ",அது தான் சுழலும் நம்மை சுற்றி ,மாறும் நம்மை மாற்றி .நாம் அதே இடத்தில் யோசித்து கொண்டு தான் இருப்போம்.

Karthik said...

பிரியா ,

தங்கள் வருவுக்கு மிக்க நன்றி

சந்தோசத்துக்கு எல்லாம் குறைச்சலே இல்லை.பலவிதமாக பலதரப்பட்ட ஆனால் என்ன செய்வது உண்மை இது தானே ,அது போலி தானே .

Karthik said...

Yeah Vinoth,

thanks for ur encouraging words,I could take it as a encouragement if I am down...But to be very frank I am not down,,its that I am thinking abt the reality which is some times unacceptable to me even..I agree for all this happens.But to be very frank I dont think abt the present past and future.Where ever I am ,I can be good atleast I have to confidence,But credibility to me is what I am thinking....

Karthik said...

dei chiris

adi vanga porey ,,,nera sollu ,,,ithu enna personal to me...Ulagam arintha kathaiya thaan sollirukken..

Karthik said...

@ Sivaram,

enna chris oda kootu podraiya...

Thanks atlast u have commented in my blog...

Sabhari Nath said...

Good one Karthik. But just like the first comment goes, one has to become content with certain basic principles, and if we are taking too much to decide on it, as you said we WILL be in the DEFAULT pool.

I am in agreement with some parts of the post, but the one about women, I am not in total agreement. You getting older can definitely not be the reason for ignoring them, probably something else. I might be wrong, but you too introspect.

Everyone will have this thought as to "What did I really want to become, and what the F... am I doing?" It is a vicious cycle that we all fall prey to, and "peer pressure" as you rightly mentioned is the only reason for it. But at the same time, you might be labelled an idiot, polaikka theriyaadhavan, etc. if you follow your instincts, but at the end of the day "Success" for you and in your eyes is measured in a different way, that is primarily what matters for you.

Never ignore your instincts, and DO NOT ever stop doing something that satisfies you, probably you are going to live the life that you wanted at a later point in time, provided you do that...

Just my thought

Karthik said...

hi sabs....I guess I got u right yesterday when i was leaving abt the email i used to send u :)))))))

Yeah now...Thanks for the comment man...I agree that we cant introspect too much...Even we know that we can think abt this when we are forced to do that...Instincts ???? those are dead man!!!i dont want to ignore my instincts basically ,,,every one does nt want but it gets ignored....I dont know whether there is a soln for this...But my friend ashok when he was discussing told me //its like we need to end up or conclude that there is no answer or question///ITS just a intellectual obsession for reasoning ...Some times thats also true....

Women? pothum machi...:(

Aslam said...

இந்த வாழக்கையில் என்ன கிழித்து விட்டோம் என்று யோசிக்கும் போது எதுவும் உருப்படியாக செய்ய வில்லை என்றே தோன்றுகிறது

Vaalkai....itha epdi na define panringa??

ippa ungaluku 27 vayusu..ithula neenga sonthama valnthathu ethana varusam????

poranthom...appa schoola serthu vitaru...valarom..appa itha padi nu solrar..padikrom...mudiyalai na nadikrom..

Adolosence...yaaru kelvi keta pudikatha vayasu...appa amma nalla scholl, college la sethu vithalum...oru ponna pathathum...ellathayum maranthu suthurom....irunthalam 'Appa/amma' avanga kudukra kaasula valrom..

23 24 vayasula veli la varom...velai thedrom...kudave past love feelings..thanni..dum...nimmathi ya irukom nu nenachu kitu ..polutha kalikrom...

neenga college ah vitu velila vanthu 3 varusathukula " valakaila la onnum kilikanum nu avasiyam illa" .... sakaram suthi kite thaan irukum...namalum poi kite thaan irupom...ithe blog la...50 vayasuku apuram post pannunga appa enna kilichirukom nu papome..


Valkai ...ennoda definition "Daily oru manusan nimmathiya irunthu nimathiya santhosama thoonganum" kalyanam kolanthai...veedu...yellam thana vanthukite thaan irukum...vaalkai sakaram...nimathiya thedi alairom...keduchutha....atha thaan valkaila kilichutom....nimathiya sagurom...

'Ithuvum Kadanthu Pogum'...nimathi thaana valkai...ellam kadanthu poi kite thaan irukum....palasa nenacha nimathi kedaikathu....varungalatha nenacha...thookam varathu....namaku ippa irunkura antha nodiya epdi nimathi ya kalikanum nu parunga...appa thairiyam sollalam..naan valkaila kilichuten nu...

Karthik said...

Daaaaaaai Aslam,

///oru ponna pathathum...ellathayum maranthu suthurom///

Appadinna enna aslam....Ponnu pinnadi ellam suthuveengala neenga ...chey :(

Ok coming to the comment.

College mudichu 3 varushathula ethuvum kizhikka vendamnu solriya...Enna man pesura....nee panra velaiye nee kizhikirathu thaan,..unakku computerla interest undu athanala nee computer field la erukka!
Naan urupadiya seiyalannu sonnathu ovvorutharukkum maarum...atha maranthutta...Urupadingrathu ennaiya santhoshapaduthikira vishayam ella...ennai munnara vaikkira vishayam..ennai ooka paduthura vishayam...

50 vayasula post pottu enna prove panna solra...Blog will be in a different mode by thatt.Till i am able to write I will write..I know that...Because this is one thing which I love and write..

Pazhasa ninaitchu manasa ellam keduthukkala man...It so happens its a irony that it comes in my mind some times...


But Still I can agree someof the parts of ur comments ....and thanks for commenting on one line of the blog ....

Sriram said...

நண்பா கார்த்திக்
இந்த படைப்பு மிகத்தெளிவான குழப்பம். அமைதியாக படித்து பார்த்தால் புரியும் இந்த உண்மை. பலமுறை என் நிலை நிலையாமையை தொட்டதுண்டு. ஆனால் உனது நிலை பெண்மையை தொன்மையாக, சலிப்பான பண்டமாக பார்ப்பது உனது மாயையின் வடு (சாயல்)......மாயை---- இது பேதையை போதையாக பாவிக்க, மாதுவை மதுவாக பாவிக்க தூண்டும் திரவியம். ஆழ்ந்து சிந்தித்து பார். மாயை மீழ்ந்து உண்மை புலப்படும்.

Karthik said...

நண்பா நீ நான் எழுதி இருப்பதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கொண்டு பேசுகிறாய்.அதில் மிக தெளிவாக பெண்ணை பற்றி எழுதி இருக்கிறேன்.மேலும் அதில் ஒரு பகுதி மட்டுமே பெண்ணை பற்றியது.பெண் என் வாழ்வில் வந்தார்கள் சென்றார்கள் கதை தான் அதற்கு நான் என்ன செய்யவேண்டும்.பெண்ணிடம் எனக்கு ஒரு பெரிய அளவில் பயன்களோ அல்ல பயணங்களோ ஏற்பட வில்லை.நிரந்தரமான விஷயங்களை பேசி கொண்டிருக்கிறேன்.எல்லாம் பாதியில் முறிந்தவை.அதனால் நான் அவ்வாறு சொல்லி இருக்கிறேன்.

Anonymous said...

pennaipatri neenga ezhuthinathai parthen - siriya mana varutham - en oru nerudalnu kooda sollalam. You would be truly benefitted if you start looking for what you really want from women/woman. ungal penn -sigularity of the entire women on earth - a generic version makes me want to tell you pengalai patri ezhuthareengale - muyarchi seythal thane purinjika mudiyum. Some part of men and their male ego does not allow them to acknowledge that they did truly learn from women and for some reason - I feel that you have gotten yourself into that trap. You can share the world that women live in, get the best in women's lives and still be as isolated as you are from women. I do pity you man - there is an ocean of learning from women - Try, it will make a human out of you

Karthik said...

@ Anonymous.

same reply as the one for " three cigrattes of my life "