பெண்களை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டது போல் தோன்றுகிறது.சில நேரம் நம் வாழ்வில் எல்லாம் முடிந்து விட்டதா என்று நினைத்து இருந்த காலங்கள் உண்டு.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிவது ,மாற்றம் ஒன்றே மாறாமல் இருப்பது.ஒரு அத்தியாயம் முடிந்தால் மற்றொன்று என்ற கணக்கில் தான் எல்லோர் வாழ்வும் செல்ல வேண்டும், சினிமாவை போல் .

சினிமாவும் வாழ்க்கையும் ஒன்று படுத்தி கூற முடியாது,சினிமாவில் இருக்கும் கதாபத்திரங்களை போல் நாம் நடந்து கொள்ள ஆசை படலாம்.ஆனால் அது மிக மிக ஒரு அலங்கரிக்கப்பட்ட ஒரு பொய்யாக தான் உண்மையில் நம் நெஞ்சில் தங்கி விடும்.அதற்கு பல உதாரணங்கள் இருக்கும்.இருந்த படிக்கே நாம் பழைய நிலைக்கு மாறி விடுவோம்.

சென்ற வாரம் பல நாட்கள் கழித்து ஒரு பெண்ணை நான் பார்த்தேன்.அவளிடம் அதிகம் பேசியது இல்லை என்றாலும் அவளும் நானும் பல நாட்கள் கழித்து பார்த்து கொண்டதால் வெகு சுலபமாக சரளமாக பேசி வந்தோம்.அவள் தன் வேளையில் ஆரம்பித்து பேச ஆரம்பித்தாள்.அவளை பார்த்து ஒரு ஐந்து வருடங்கள் இருக்கும்.அந்த ஐந்து வருடத்தில் அவள் வெகுவாக மாறி இருந்தாள்.அந்த மாற்றத்திற்கு அவள் உருவம் வெகுவாக வெளிகாட்டி கொண்டிருந்தது.உண்மையில் அவளிடம் பேசுவது பிடித்து இருந்தது.அவளும் என்னை அதே நிலையில் வைத்து பார்த்து கொண்டிருந்தாள்.ஆனால் எங்கள் பேச்சுவார்த்தை அதிகமாக நீடிக்காமல் ஒரு ஐந்து பத்து நிமிடத்தில் முடிந்தது.எங்கள் செல்போன் நம்பர்கள் பறி மாறி கொண்டன .


இரண்டு நாள் கழித்து என் நண்பனுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது அவள் அழைத்து இருந்தாள் .என்னால் பேச முடியவில்லை.மறுபடியும் அவளை நான் மறுநாள் அழைத்தேன்.எதோ பேசி கொண்டிருந்து விட்டு அவளிடம் திடீர் என்று
" Probably we should grab a coffee some time "என்று சொல்லி வைத்தேன்.அவளும் அதற்கு ஆம் என்று சொன்னாள்.


நேரம் குறிக்கப்பட்டு அவளை சந்திக்க நான் சென்றேன்.நான் ஏன் அப்படி கேட்டேன் என்று பார்த்தால் என்னை மிக சரளமாக பேசுபவன் போல் காட்டி கொள்ள ஆங்கில படத்தில் வருவது போல் One night stand மாதிரி ஒரு முயற்சி எடுத்து இருந்தேன்.அதுவும் ஒத்துழைக்கவே அவள் வந்ததும் எனக்கு வெற்றி அளிப்பது போல் நான் உணர்ந்தேன்.ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருந்தது.


எனக்கு பாரிஸ்டா ரொம்ப பிடிக்கும்.ஒரு உணர்வு பூர்வ பிடித்தம் உண்டு.மற்றும் "A lot can change over a coffee "என்ற வாக்கியத்தில் மிக நம்பிக்கை உண்டு.அந்த பொழுதில் நானும் ஒரு வித எதிர்பார்புகளுடன் அவளை சந்தித்தேன்.அவளும் என்னை எதிர்நோக்கி இருந்த விதமும் அப்படியே சொல்லியது.ஆனால் அவளிடம் அதிகம் இதற்கு முன் பேசியது கிடையாது.அன்று பேசியது ஒரு மூன்றாவது முறையாக கூட இருக்கலாம்.அவளை பற்றி எதுவும் தெரியாது.என்னை பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது.நான் எப்படி பட்டவன் என்று கூட தெரியாது.


சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலை பற்றி பேச ஆரம்பித்தோம் .பிறகு அவளுக்கும் பாரிஸ்டா பிடிக்கும் என்று கூறினாள்.நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை பற்றி பேசினேன்.அவளும் அவள் வேலையை பற்றி கூறினாள்.அவளுக்கு சினிமா விருப்பம் இல்லை என்று தெளிவாக சொன்னாள்.புத்தகம் படிப்பது அபூர்வமாம்.Fivepoint some one படித்து இருக்கிறேன் என்று கூறினாள்.இசை கேட்பாளாம் Himesh reshmaiya என்றால் உயிராம்.எனக்கு அந்த இசை அமைப்பாளரை பிடிக்காது.ப்ளாக் சுத்தம் வாசமே கிடையாது என்று கூறினாள்.என்ன பேசுவது.அவள் இந்த முறை சென்னையில் பியுடீ பார்லர் சென்றது பற்றி பேசினாள்.அவள் தாய் தந்தையை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறினாள்.நானும் தலை ஆட்டினேன்.சில நேரம் காபி யை ரசித்து குடித்தோம்.முதல் முறையாக ஒரு காபி ஷாப்பில் காபியை ரசித்து குடித்தேன்.பக்கத்தில் இருக்கும் பெண்ணை ரசிக்காமல்.


என்ன பேசுவது தெரியவில்லை.எனக்கு உண்மையில் தடுமாற்றத்தை தாண்டி என் எதிர்பார்ப்புகள் இந்த சந்திப்பில் என்னவாக இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.அவளிடம் நான் தந்து பெற போகும் விஷயங்கள் என்ன என்று அசை போட ஆரம்பித்து கொண்டிருந்தேன்.ஒரு ஐந்து நிமிட மௌனத்திற்கு பிறகு நான் மெதுவாக சென்னை வானிலையை பற்றி பேச ஆரம்பித்தேன்.


"When you have nothing to speak ,then speak about the weather". திடீர் என்று என் மண்டையில் உறைத்தது.ஒரு முறை நண்பர் ஒருவர் இதை என்னிடம் கூறினார்.உண்மை என்னிடம் இந்த பெண்ணிடம் பேச எதுவும் இல்லை,என் வெற்று மாலை வேலையை ஒரு பெண்ணுடன் கழிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அதில் ஒரு வித உந்தூதலும் இல்லை.அவளுக்கும் அதே நிலை.அவள் உலகம் வேறு என் உலகம் வேறு.ஒட்டு போட நினைக்க முடியாது.ஒரு சில மயக்கத்தில் சந்தித்து விட்டேன்.ஆனால் அங்கே ஒரு நிமிடமும் எனக்கு ஒரு யுகம் போல் நகர்ந்து கொண்டிருந்தது.பரிஸ்டா சென்றால் யாரும் காப்பி முடிந்தால் கிளம்ப மாட்டார்கள்.அன்று கிளம்ப தோன்றியது.கிளம்பி விட்டோம்.அவள் என்னிடம் Bye சொல்லிவிட்டு ஆட்டோ வில் கிளம்பினாள்.

இன்று வரை ஒரு அழைப்பும் இல்லை.நானும் அழைக்க வில்லை.எதுவும் தோன்றவில்லை.சில நேரங்களில் நிகழும் உண்மை நமக்கு புரியும் பொழுது எவ்வளவு தெளிவாக மனம் செயல் படுகிறது என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.அதுதான் அன்று நடந்து.மனதிற்கு ஒப்பாத செயல் அல்ல அது,அங்கே ஒரு அலைவரிசை இல்லை.அது வேறு ஒரு அலைவரிசை .அந்த பெண் அழகாய் இருந்தாலும் அவளிடம் எனக்கு இந்த ஒரு விஷயமும் பேசி கொள்ள இல்லை.அவளிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லை.அவள் ஒரு பயணி நான் ஒரு பயணி.சந்திகொண்டோம்.அவ்வளவே.சினிமாவில் வரும் One night stand சினிமாவிற்கே .அதை செயல் படுத்துவது எனக்கு அது முட்டாள்தனம்.அந்த பெண்ணை நான் குறை சொல்ல வரவில்லை.என்னையும் குறை சொல்லவில்லை.It was a good experience.

4 comments:

Aslam said...

America cinema athigam parthathil vantha thaakam...

it happens :)

Karthik said...

dei...athan unmaiya othukkitene...:)

Chriz said...

change is teh only constant.. organised lie...

it was good to see the tamil trans for these words....

and pudhu poo pooookudhunu ninaikurein..

Karthik said...

@ Chris
டேய் இது காய்ந்த மரம் இதுல கோடாலி தான் சிக்கும்.பூ பூக்காது .