நான் சென்னைக்கு திரும்ப வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.வந்ததில் இருந்து கடற்கரை பக்கம் நான் செல்லவே இல்லை என்பது நேற்று தான் தெரிந்தது.கடல் அலைகளுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பது பார்த்த உடனே தெரிகிறது.நேற்று நான் சென்னையை தாண்டி பல மைல் தூரம் சென்று இருந்தேன்.பல விஷயங்களை பின்னே தள்ளி வைத்து விட்டு பல புதிய அரிதாரத்தை பூசி கொண்டு இந்த வாழ்க்கை எவ்வளவு அழகாய் செல்கிறது என்று தோன்றியது .அழகு என்பது மனதை சார்ந்து இருக்கிறது என்பது புரிகிறது.எண்ணங்கள் அலைகளை போல் எழுந்து அடங்குவதும் அது ஏதோ கரையை தொட்டு கொண்டு மீண்டும் இழுத்து கொண்டு செல்வதும் கடல் அலைகளை பார்த்தால் தான் தெரிகிறது.கடல் அலைகள் சொல்லும் கதைகளுக்கு ஆதாரம் மனிதனின் வாழ்வில் தான் தேட முடியும்.
கடலும் அதன் அலைகளும் அழகானவை என்பதை விட அவை ரகசியமானவை .கடல் ஏன் எப்படி எங்கே என்று எத்தனை கேள்விகள் கேட்டாலும் கடலும் அதன் அலைகளும் தரும் ஒரே பதில் அதன் பிரம்மாண்டம் .முன்னே நின்று பார்க்கும் பொழுது எல்லா கடலும் எல்லா அலைகளும் ஒரே அளவு தான் .

காதல் சொட்டுகிறது,சோகம் வழிகிறது,தென்றல் வீசுகிறது,தனிமை வாட்டுகிறது, கேள்விகள் விடை பெறுகின்றன ,கண்கள் ரசிக்கிறது,மனம் நனைகிறது ,உண்மை தெரிகிறது,பொய்கள் காணாமல் போகிறது, கவிதை பிறக்கிறது,வலிமை புலப்படுகிறது ,நேரம் கழிகிறது .அலைகள் முன்னே அமர்ந்தால் எல்லாம் நடக்கிறது.

என் உடன் அமர்ந்து இருந்த பெண்ணும் என்னை மறந்து கடலை ரசித்து கொண்டிருந்தது எனக்கு நிம்மதியை தந்தது.எங்களுடன் வந்து இருந்த ஒரு ஜோடி எங்கோ ஒரு தொலை தூரத்தில் தங்கள் கால்களை நனைத்து கொண்டிருந்தார்கள். அலைகள் ஓயாமல் இருக்கும் பொழுது மனதில் என்னை அறியாமல் ஒரு கவித்துவம் எழுந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.சத்தமாக பாட தோன்றியது.திடீர் என்று அந்த பெண் என்னை திரும்ப பார்த்து சிரித்து கொண்டு அவளும் பாட ஆரம்பித்தாள். Nothings gonna change my love for you என்ற பாடல் ஆரம்பித்த பொழுது என் குரல் ஆங்கில பாடல்களுக்கு எதுவாக இருக்காது என்று தெரிந்தும் என் மனம் பாடி கொண்டிருந்தது .Ghar se Nikalthey hi என்ற பாடல் அழகாய் முடிந்தது.கடலோர கவிதைகள் பாடல்கள் அழகாய் பாடி அரங்கேற்றம் நடந்தது.

மனம் மிக மிக இளசாக இருந்தது.என் மீது சாய்ந்து இருந்த பெண் " ஏன் கார்த்திக் ஒரு உண்மைய பார்த்தாயா ? " என்று கேட்டாள் .

கடல் முன்னே நாம் அமரும் பொழுது நமக்கு முன்னே இருக்கும் உலகில் நாம் மட்டும் தான் இருக்கிறோம் .எல்லோரும் நம் பின்னே தான் இருக்கிறார்கள் .நம் உலகம் நம் முன்னே எப்படி விரிந்து இருக்கிறது ! இந்த உலகத்தில் இந்த நொடியில் யாரும் என்னை தவிர இல்லை என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது !" என்று ஒரு கவிதையை மிக சாதரணமாக சொல்லிவிட்டாள்.

நான் பதில் எதுவும் சொல்லாமல் அவளை ஒரு முறை பார்த்தேன். அணைத்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது ,ஆனால் அதை மீறிய ஒரு சிந்தனை அவள் சொல்லிய வார்த்தைகளால் ஏற்பட்டது.எவ்வளவு ஆழமான சிந்தனைகள் அந்த அழமான கடலில் இருந்து கிளம்பி அவள் மனதில் தோன்றி இருக்கிறது என்று நினைத்து கொண்டு ஒரு புன்னகையில் அவளை ஆமோதித்தேன்.எத்தனை முறை இந்த கடல் அலைகளை நான் பார்த்து இருப்பேன் ஆனால் ஏன் சிந்தனைகள் வேறுபடுகின்றன என்று தோன்றும் .இந்த முறை மிக அமைதியாக எண்ணங்கள் சீராக செல்வது நன்றாக இருந்தது.

கற்பனை உலகம் எதுவும் விரித்து கொள்ளாமல் உண்மையில் நடை பயில்வது புத்துணர்ச்சி தருகிறது.
கடல் அலைகள் -
கவிதைகள் -
பெண்- தனிமை -
வேறு என்ன வேண்டும்
ஒரு மாலை வேளையில் .

4 comments:

Vinoth Pradeep said...

welcome back :P... Got any new roads to heaven?

naveen said...

கார்த்திக்,

நேற்று நானும் கடற்கரைக்கு சென்று இருந்தேன்...

நானும் கொஞ்சம் இது போல நினைத்து இருக்கிறேன்....

//.கடல் அலைகள் -கவிதைகள் - பெண்- தனிமை - வேறு என்ன வேண்டும் ஒரு மாலை வேளையில் .//

மிக மிக அருமையான வரிகள்.......

நூறு பக்க அளவில் எழுத வேண்டியதை ..... ரொம்ப சாதரணமா சில வரிகளில் சொல்லிட்டீங்க....... ...

Karthik said...

@ Vinoth

There are always passing clouds for u....where ever you go...:)

Karthik said...

@ Naveen
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி,

நீங்களும் என்னை போல சிந்தித்து இருப்பதை கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் மாலை வேளை பற்றி எழுதி இருந்தது உண்மை தானே ,வேறு என்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு.அதற்கு எதற்கு நூறு பக்கம் .:)