இது
என் சமுதாயம்

நம் சமுதாயம்

இங்கு
பகுத்தறிவும் பிதற்றல்

பக்தியும் போலி

பாலம் கட்ட

ராமனும் விரும்புவான்

அவன் ஏன் விரும்ப வில்லை!

பக்தியாம்!
முதலில் பாலம் கட்ட

ராமனுக்கு

ஏன் BE பட்டம் கொடுத்தான்

பகுத்தறிவாம்!

இவன் அணிந்திருக்கும்

மஞ்சள் உடைக்கு

விளக்கம்

பகுத்தறிவு!

கோயில் கட்ட

மசூதியை இடிப்பது

அவன் பக்தி!

உண்மையும்

அறிவும்

சேருவது பகுத்தறிவு

அன்பும்

ஆத்மாவும்

சேருவதுபக்தி!

இதில் உண்மை எங்கே?

அதில் அன்பு எங்கே?

இது மூடத்தனம்

அது குரோதம்!

உனக்கும்

எனக்கும் புரியும் !

ஆனால் மாற்றம்

நமக்கு புரியாது!

அரசியல் சாக்கடை!

அதில் நீயும் நானும் கழிவு நீர்!
கவிதை எழுத தோன்றும்

கோபம் வோட்டு

போடும் போது
எனக்கு நினைவு இருக்காது!

எனில்....இதுஎன் சமுதாயம்!

இதில் வாழ்ந்து பழகிவிட்டேன்!

பழி சொல்பவனும்

நான் தான்!

எனக்கு தாலாட்டு பாடுவதும்

நான் தான்!