நல்ல கவிதை என்பது ஒரு தடவை படித்தால் போதும் ,மனதில் நிற்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.என் கவிதை எனக்கு நினைவிருப்பதே இல்லை.என்னை கேட்டால் மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதைகள் அறவேமறந்து விட்டது.யாராவது என்னிடம் என் கவிதையே வாசித்து காட்டினால் எனக்கு விமர்சனம் செய்ய தோன்றுமே தவிர,உரிமை கொண்டாட தோன்றாது.இது எம்மாதிரி நிலை.முதலில் எனக்கு தெரிய வேண்டியது முதல் வரி உண்மையாஇல்லையா?அடுத்தது தெரிய வேண்டியது எனது ,நல்ல கவிதைகள் எனக்கு ! மற்றவருக்கு?ஒரு நல்ல எழுத்து உண்மையாய் இருக்கும் போதுதான் வெளிப்படும்.இதில்எனக்கு முரண்பாடுகள் இல்லை.ஆனால் என்னால் எல்லாவற்றையும் எழுதமுடிவதில்லை.உதாரணத்திற்கு காதல் அழகை எத்தனை விதமாய் கூறினாலும் காமத்தில் கவிதை கொட்டும்.காமம் காதலில் மட்டும் வருவதில்லை.காமம் மனதை பொருத்தது அல்ல.
கண்ணதாசன் சொன்னான்"காதல் ஒரு முறைவரும் என்று யார் சொன்னார் ,காதல் அழகான பெண்ணை பார்க்கும் போதெல்லாம்ஒவ்வொரு தடவை வரும்!!"
எனக்கும் இது பல சமயம் உண்மை என்று தோன்றும் .ஆனால் என்னால் எழுத்துக்கு வெளிக்கொணர முடியவில்லை.நான் செய்தேன் என்று என்று எத்தனை பேர் உண்மையை ஒத்துகொள்கிறார்.நானும் சில சமயம் மாட்டேன்.காமம் மனத்தை பொருத்தது அல்ல ,சூழ்நிலையை பொருத்தது.நான் உணர்திருக்கிறேன்.அனைவரும் உணர்திருப்போம்.ஆம் என்று எத்தனை பேர் ஒத்துக்கொள்வோம்.இது தயக்கம் அல்ல.தடுமாற்றம்.பயம்.நம் நிலையை மற்றவன் பேசிவிடுவானோ என்ற தடுமாற்றம்.
உண்மை கலை பொய் இல்லாமல் தோன்றுவது அரிது.எழுத்துக்களும்அவ்வாறே!நான் எழுத முனைகிறேன் .ஏதோ ஒரு நிலை .தடுக்கிறது.யாராவது வழி சொன்னால் யோசிக்கலாம்.


1 comments:
This time i have got lot of discrepancies with your thought process..Lemme Pen Down
1. U have said that "Only nice poems can be remembered in a single read" i strongly disagree. Bharathiyar poems are the BEST of the BEST.. but could you remember the full set of poems.. i still love those poems.. but can remember bits and pieces of those..
2. You have said "real art is bringing out the truth thru words".. again i strongly disagree..
Even u know thar-kurip-erru-anni in tamil Lits.. these are not truth but still we loe those.. also i feel true art is showing everyones inner heart thru ur words..like a mirror..
But one thing i still love in ur poems is "Way u deliver".. too good buddy..
Post a Comment