என் நண்பன் அஸ்லாம் அவனது GTALKல் இந்த கவிதையின் முதல் மூன்று வரிகளை CAPTION பண்ணி இருந்தான்.ஏதோ ஒரு நிமிடம் நாம் மூன்று காலங்களையும் சேர்த்து பார்க்கும் நேரம் தான் இந்த கவிதை.என் நண்பன் மதியின்கவிதை"நிலவின் நினைவுகள்"ம் இது போலவே நேரத்தை குறிக்கும்.நான் நேரத்தை விட்டு அதன் களத்தை யும் உணர்ச்சியையும் சேர்த்து உள்ளேன்.அந்த முதல் மூன்று வரிகள் யார் எழுதினார் என்று தெரியாது.அதை உரிமையுடன்எடுத்துக்கொண்டேன்,


கடந்தததையும் கடக்க போவதையும்

நினைக்கின்ற பொழுது

நடந்து கொண்டிருப்பவை

தூரத்திலிருந்து நோக்கும்

ஒரு புள்ளியாய்

மன்றாடிக் கொண்டிருக்கிறது


பெய்தததையும் நனைந்தததையும்

உணர்கின்ற பொழுது

மறைந்திருந்தெல்லாம் ,

ஏது மற்றுவறுமை யாய்

தள்ளாடிக் கொண்டிருக்கிறது


கற்பனையையும் கனவையும்

கண் திறந்து சுகிக்கன்ற பொழுது

சுமக் கின்ற நிஜம்

ஒரு பாரமாய் கனக்கின்றது


ஆசைகளும் சபலமும்

ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்

பொழுது இழந்தவை எல்லாம்

ஏளனம் செய்து கொண்டிருக்கின்றது

0 comments: