இதோ நான் என் வித்யாவுடன் இந்த கல்லூரியில் தனியாக நின்று பேசி கொண்டிருக்கிறேன்.அவள் மனம் வாடி இருக்கிறது எனக்கு புரிகிறது.என்னை அடுத்த நாள் கல்லூரி வாசலில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வர சொல்லுகிறாள் .ஏன்? தெரியவில்லை.ஆனால் போக வேண்டும்
என்று மனம் சொல்லுகிறது.கடவுளை கஷ்டத்தில் கும்பிடும் சாதரண மனிதன் நான்.அவளை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நான் செல்லவேண்டும் என்று மட்டும் முடிவு எடுத்து கொள்கிறேன்.அவள் என்ன என்னவோ பேசுகிறாள்.அவள் கனவுகளை எல்லாம் கொட்டி தீர்கிறாள்.அவள் கனவுகள் எல்லாம் கவிதை போல் என் முன்னே மலர்கின்றன.காலத்தை அவள் தன் சந்தோஷத்தில் வென்று கொண்டிருந்தாள்.அவள் கண்கள் சில பல ஒளிகளை சிந்தியது என்னை பிரமிக்க வைத்து கொண்டிருந்தது.அவள் பேசுவதை எல்லாம் கேட்டு விட்டு அவளிடம் ஒரு கேள்வியை முதல் முறையாய் கேட்டேன்.
" ஏன் வித்யா உங்க வீட்ல நம்ம இரண்டு பேர் விஷயத்தை ஒத்துக்குவாங்களா ?
அதே கவலையில் இருந்தவள் போல் அவள் உற்சாகம் குறைந்தது.
"தெரியல! ஆனால் கண்டிப்பா எல்லோரும் சந்தோஷமா இருக்கும் போது சொல்லுவேன்.அது குள்ள நீ ஒரு வேலைய வாங்கிரு! வேலை கிடைச்சுடும் இல்ல"
"வித்யா என்ன பேசுற ! நமக்கு கிடைக்காம யாருக்கு கிடைக்கும் சொல்லு."
அடுத்த நாள் காலையில் நான் காலை 6.45 மணிக்கு எழுந்து குளித்து விட்டு கோவில் பக்கம் சென்றேன்.அவள் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.அவள் மிகவும் புத்துணர்ச்சி உடன் தென்பட்டாள்.தலையில் மல்லிகை பூ அசைந்து கொண்டிருந்தது.அவள் அழகை என்னால் மெச்ச கூட முடியாமல் நான் அசந்து கொண்டிருந்தேன்.நான் கோவிலுக்கு போய் கும்பிட்டு விட்டு நின்று கொண்டிருந்தேன்.அந்த கோவிலில் இருந்து கல்லூரி மைதானம் தெளிவாக தெரிந்தது.சில பெண்களும் ஆண்களும் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள் .காலை பொழுது அழகாக இருக்கிறது,நான் காலை பொழுதை ரசிதத்தே இல்லை.அவள் கும்பிட்டு விட்டு கோவிலை சுற்றி கொண்டிருந்தாள்.எனக்கும் அவள் பின்னே செல்ல வேண்டும் என்று தோன்றியது.அவள் திடீர் என்று என்னை நிற்க சொன்னாள்.அவள் கைகளில் உள்ள திருநீற்றை எடுத்து என் நெற்றியில் பூசி விட்டாள்.பல சமயங்களில் அந்த பொழுது என் நினைவில் ஞாபகம் வருவதை நான் நினைத்து பார்க்கிறேன்.
ரயில் சென்னையை நெருங்கி கொண்டிருக்கிறது.எனக்கு எதிரில் உள்ள எல்லோரும் தூங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்,என் மனம் மட்டும் தூங்காமல் விழித்து கொண்டிருக்கிறது.மணி 5,30 .ரயிலில் அந்த காலை காற்று எனக்கு அன்று வீசிய காற்றை ஞாபக படுத்தியது.என் செல் போனை எடுத்து பார்த்தேன்
2 messages received நண்பர்கள் forwarded messages அனுப்பி இருக்கிறார்கள்.அந்த செல்போனை பார்த்தேன்.இது என்னுடைய மூன்றாவது செல் போன்.எனக்கு என் முதல் செல் போன் வாங்கிய விதம் நினைவில் இருக்கிறது.ஏன் வாங்கினேன் என்றும் நினைவில் இருக்கிறது.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அப்பா என்னுடன் நின்று கொண்டிருக்கிறார்.அம்மா என்னை வீட்டில் வைத்து வாழ்த்தி அனுப்பி வைத்து விட்டாள்.அப்பா என்னிடம் 5000 ரூபாய் கொடுத்த உடன் என் மனதில் ஏதோ ஒரு மற்றம் தெரிந்தது.அவ்வளவு பணம் என் செலவுக்கு நான் வாங்கியது இல்லை .நான் அவளுக்கு இதில் தாரளமாக போன் பேசலாம் என்று கணக்கு போட்டு கொண்டிருந்தேன்.என் தந்தை மகன் வேலை தேட ஏதுவாக எனக்கு நம்பிக்கை சொல்லி கொண்டிருந்தார்.என் மனம் கேவலமாக எதையோ நினைத்து கொண்டிருந்தது இன்று வலிக்கிறது.அவர் நம்பிக்கை நினைவாக அவர் எத்தனையோ விதத்தில் எனக்கு விட்டு கொடுத்து எல்லாம் இன்று தான் இந்த மரமண்டையில் தெரிகிறது.நான் அன்று ஏறிய நெல்லை ரயிலுக்கும் இன்று ஏறிய ரயிலுக்கும் எத்தனை வேறுபாடுகள்.ஐந்து வருடங்கள்.இன்று நான் சென்னை வாசி.அன்று நான் சென்னை பார்க்க சென்று கொண்டிருக்கும் காதலில் சிக்குண்ட வேலை இல்லா பட்டதாரி.காலம் உருண்டு ஓடி விட்டது ஆனால் என் மனம் மட்டும் அப்படியே இருக்கிறது,அன்று அவள் இருக்கிறாள் என்று நம்பிக்கையாக இருந்தது,இன்று அவள் இல்லை என்று கவலையாக இருக்கிறது.
June 13 2002
அந்த தேதி நான் சென்னை மண்ணை என் வாழ்வு தேடி மிதிக்கிறேன்.எனக்கு மின்னலே படம் நினைவில் வருகிறது.
அந்த தேதி நான் சென்னை மண்ணை என் வாழ்வு தேடி மிதிக்கிறேன்.எனக்கு மின்னலே படம் நினைவில் வருகிறது.
" என்னதான் பெங்களூர் இருந்தாலும் சென்னை மாதிரி வருமா ?"
கண்டிப்பாக வராது.நான் என் நண்பனுடன் வந்து இருந்தேன்.அவனும் நானும் பாரிஸ் கார்னரில் உள்ள ஒரு மேன்சனை தேடி அலைந்து கொண்டிருந்தேன்.வாயில் புகை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது,என்னை கண்டிக்க யாருமே இல்லை.அந்த மேன்சன் நன்றாக இருந்தது,ஆனால் செல்லும் வழி எல்லாம் மக்கள் தெருவிலே வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார்கள்,கொஞ்சம் நாளில் அதுவும் எனக்கு பழகி விடும் என்று எனக்கு தெரியவில்லை.காலை குளித்து விட்டு நானும் என் நண்பன் யுகேந்த்ரனும் வேலை தேட செல்லலாம் என்று நினைத்து கொண்டிருந்தோம் .அதற்கு முன் வித்யாவுக்கு இந்த மேன்சன் நம்பர் தர வேண்டும் என்று மனம் சொல்லியது.கீழே சென்று அந்த நம்பரை அழுத்தினேன் .இன்று வரை மறக்க வில்லை அந்த எண்கள் 89422.அந்த தொலை பேசி எப்பொழுதும் பிசி யாக தான் இருக்கும்.அம்மாவுக்கு அழைத்து நம்பரை கொடுத்தேன்.அம்மா பேசியது எதுவும் ஞாபகத்தில் இல்லை.
வித்யாவுக்கு மறுபடியும் அழைத்து பார்த்தேன்,கிடைக்க வில்லை.யுகேந்த்ரன் மேலே வந்து என்னை தயார் ஆகும் படி கூறினான்,நானும் மேலே சென்று குளித்து விட்டு கிளம்பினேன் .அன்றைய ஹிந்து நாளிதழை புரட்டினோம் Hindu classifieds ல நெறைய வேலை வைப்பு விளம்பரம் இருக்கும் என்று அப்பா சொன்னது நினைவில் வந்தது.புரட்டினோம் புரட்டினோம் புரட்டினோம் .இல்லை ,இல்லவே இல்லை.சரி Freshers என்ற வார்த்தை இருக்கும் இடத்தில் எல்லாம் போய் பார்க்கலாம் என்று எழுதி வைத்து கொண்டு ,சரவணா பவன் நோக்கி நடையை கட்டினோம்.கையில் தான் காசு இருக்கிறதே .சாப்பிட்டு விட்டு நாங்கள் ஹபிபுல்லா சாலை செல்ல வேண்டும் ,எங்கு இருக்கிறது இந்த சாலை ? தெரியவில்லை .
பேருந்து எல்லாம் நிரம்பி வழிந்தது.பொறுத்து விட்டு ஒரு ஆட்டோ பிடித்தோம்.150 ரூபாய் கேட்டான் படு பாவி.பேரம் பேசுகிறேன் பேர்வழி என்று என்னால் பத்து ரூபாய் தான் குறைக்க முடிந்தது.ஹபிபுல்லா சாலை ,தி நகரில் இருக்கிறது ,அங்கே GR.V Consultancy போக வேண்டும் எங்களுக்கு.தேடி கண்டுபிடித்து விட்டோம்.உள்ளே நுழைத்து நான் தைரியமாக "___""_________'
"________""___________"
"________""___________"
ஒரு பெண் எங்களிடம் ஒரு நேர்முகம் வைத்து விட்டு இரண்டு நாள் கழித்து எங்களை அழைப்பதாக கூறினாள்.எனக்கு ஆங்கிலம் தடுமாற்றம் இல்லாமல் பேச முடிந்தது,யுகேந்திரன் கொஞ்சம் தடு மாறி விட்டான்.மீண்டும் பாரிஸ் கார்னர் பயணம்,அன்று இரவு வேறு ஏதாவது சாப்பிடலாம் என்று இருவரும் கொஞ்சம் நடந்தோம்.மணி இரவை தாண்டி கொண்டிருந்ததால்,ஆள் நடமாட்டம் பாரிஸ் கார்னரில் குறைந்து காணப்பட்டது.
" ஹே என்ன ?"
ஒரு பெண் எங்களை பார்த்து அழைப்பதை கேட்டு திரும்பினோம் .சீவி சிங்காரித்து பாக்கு போட்டு கொண்டிருந்தாள்.அவள் அருகில் இருந்த பீடா கடைக்காரன் அவளை பார்த்து
" ஹே சும்மா இருக்க மாட்டே? அவங்க சின்ன பசங்க ! நீங்க போங்கப்பா !'
இது தான் விபச்சரமா ? இவள் தான் கவிதையில் எல்லாம் நான் பார்த்த விபச்சாரியா ? அழகாக இருக்காளே ? எப்படி ? அவள் ஏன் பாக்கு போடுகிறாள் ? எனக்கு பல கேள்விகள் வெளியே வர துடித்து கொண்டிருந்தது,யுகேந்திரன் என்னை பார்த்தான்,
என்னடா ?
இல்ல கேட்டு பார்க்கலாம் டா
சும்மா இரு வேண்டாம் என்று தடுத்தேன்
டேய் ஒண்ணும் ஆகாது !!
அப்படிங்கற சரி கேளு !
யுகேந்திரன் அவள் அருகில் நெருங்கினான் ,அவள் ஒரு மாய புன்னகை வீசி கொண்டு நடந்து வந்தாள்.எனக்கு கொஞ்சம் உதறியது,
" என்னப்பா வெளி ஊரா "
"இல்ல இந்த ஊரு தான்!!! எவ்வளவு "
ஒருத்தரா இல்ல இரண்டு பேரா ?
அவன் என்னை பார்த்தான் ! நான் சமதிக்காமல் வேண்டாம் என்று தலை ஆட்டினேன்.எனக்கு சத்தியமாக ஆச்சரியம் தோன்றியதே தவிர ஒரு ஆசை தோன்றவில்லை.
"இரண்டு பேர்" என்றான் .
யாரை கேட்டு சொன்னான்.,நான் போகிறேன் அவள் 800 ரூபாய் என்று சைகை செய்கிறாள்.அவன் தன் பாண்ட் பையில் பணத்தை தொட்டு பார்க்கிறான்.நான் வெகு தூரம் நடந்து வந்து விட்டேன்.சில வக்கீல்கள் என் முன்னே நடந்து வருகிறார்கள்.இந்த அவலம் நடந்து கொண்டிருப்பது மாண்புமிகு உயர் நீதி மன்றம் எதிரில்.
அந்த ஒரு நிமிடம் .........!!!
அந்த ஒரு நிமிடம் .........!!!

4 comments:
SUMMA SOLLAKKODATHU...
SEMMA POST!!!
~B
what do u mean ? B
WHAT S THIS IDENTITY b
thanks for visiting
Meant to say,I enjoyed reading this particular chapter among all!!
Very well written!!..
Reminded me of my alltime fav K.B's "Varumayin niram sigappu!" :)
P.S-Does a BE graduate have to hunt for a job so much??!!!!
What happened to those campus selections!!!??
the story runs in 2000 -2007 Krishna completed his BE in 2002 the period when US recession completely wiped the Indian market in IT.sufferers were Freshers.
and it was the scenario of tough times.Unlucky Krishna :(
Post a Comment