நான் இந்த செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறைய மாற்றங்களை எதிர்பார்த்து இருந்தேன்.ஆனால் எதுவும் மாறவில்லை.இப்பொழுதெல்லாம் செங்கல்பட்டும் சென்னை வட்டத்திற்குள் வந்து விட்டதால் இன்கமிங் அழைப்புகள் எல்லாம் இலவசம்.இந்த வசதியை பெறுவதற்கு ( வேலை இல்லாததால் மற்றும் அவளிடம் பேச வேண்டும் என்பதால்- வேறு எந்த முட்டாள் காரணமாக இருக்க முடியும் ) சைதாபேட்டை யில் இருந்து செங்கல் பட்டிற்கு ரயிலில் ஏறி வந்ததை எல்லாம் இன்று நினைத்து பார்க்க தோன்றுகிறது.சூர்யா காக்க காக்க படத்தில் அகரம் சேதுவை என்கௌண்டேர் செய்ய அமர்ந்து இருந்த இடம் தான் எனது ஆஸ்தான இடம் .அங்கு நான்கு மணிக்கு போன் பேச ஆரம்பித்தால்,ஆறு மணி வரை பேசி முடித்து விட்டு ஆறு மணி ரயிலை பிடித்து கிளம்பி விடுவேன்.அவள் பல கதைகளை பேசுவாள்,அவளிடம் சில சண்டைகள் கிளம்பும்.ஆனால் எங்கள் வாழ்க்கை அமைந்து விட்டது போல் பேசுவாளே தவிர வாழ்கையை எப்படி அமைப்பது என்பதை பற்றி பேச தெரியவில்லை அவளுக்கு.அவள் வீட்டிற்கு பயந்து கொண்டிருந்தாள் .என் செல்போனில் அவள் குரல் ஒலிப்பது எனக்கு பூரிப்பை கொடுத்தாலும் அவள் அருகாமையில் இல்லாதது எனக்கு வலித்து கொண்டிருந்தது.நான் தினமும் போன் பேசுவதை பார்த்த ஒரு கடைகாரர் தான் துறை அண்ணாச்சி .

"என்னப்பா தினம் வர்ற இரண்டு பால் சாப்டற போன் பேசுற கிளம்பி போய்றா "

"ஆமாம் ங்க"
'எந்த ஊரு "
'சென்னை தான்"
"ஹ்ம்ம்"
"என்ன எதாவது லவ் மாட்டேர் ?"

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லன்னா !!'

அவர் இந்த உரையாடல் நடக்கும் முன்னவே அவர் என்னிடம் சகஜமாக பேசுவார் ஆனால் என்னை பற்றி அன்று தான் விசாரித்தார்.அவர் ஒரு நடிகர்.ஆம் காக்க காக்க படத்தில் அவர் அந்த கடையின் முன்பு நின்று கொண்டிருப்பார்.அவரை திரையில் பார்த்த போது எனக்கு ஏதோ அவரிடம் போய் அழ வேண்டும் என்று தோன்றியது,அவரிடம் சில நாட்கள் மனம் விட்டு நான் எதற்கு வருகிறேன் ,ஏன் இங்கு வந்து போன் பேசுகிறேன் என்று சொல்லுவேன்.அவரும் நிதானமாக கேட்டு விட்டு என அப்பா அம்மா பற்றி கேட்க ஆரம்பித்துவிடுவார்.அப்பொழுது லேசாக வலிக்கும்.ஆனால் காதல் என கண்ணை மறைத்து இருந்தது.எப்பொழுது குருடாக்கி விட்டது.
" அண்ணா ஒரு பால் கொடுங்க !!!"
" அண்ணா நீங்க அன்னைக்கே சொல்லும் போது நான் கேட்கலை ! இன்னைக்கி தினம் கஷ்டப் படுறேன் !!!" என்று அவரிடம் புலம்ப வேண்டும் என்று இருந்தது,ஆனால் அவருக்கு என்னை ஞாபகம் இல்லை.அவரிடம் ஞாபகபடுத்தினால் கண்டு பிடித்து விடுவார்.அடுத்த கேள்வி அவரிடம் வித்யா என்ன ஆச்சு என்பார் .எனக்கு மீண்டும் அந்த பொழுதுகளை நினைவில் கொள்ள சக்தி இல்லை.ரயில் ஏறி விட்டேன்.ரயில் ஏறும் போது பலர் முழித்து இருந்தனர்.பல கல்லூரி மாணவர்கள் தென்பட்டார்கள்.
நான் மீண்டும் கல்லூரிக்கு படிக்க சென்றேன்.அவளும் அதே கல்லூரியில் சேர்ந்தாள்.நான் அந்த கல்லூரியை தேர்வு செய்ய ஒரே காரணம் அவள் விண்ணபித்த ஒரே கல்லூரி அது ஒன்று தான்.நான் பல கல்லூரிகளை ஒதுக்கி விட்டு மதுரை வந்து சேர்ந்தேன்.எனக்கு இந்த படிப்பு தான் உகந்தது என்று எனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.ஒன்று எனக்குள் இருந்த வேகம் இரண்டு ஒரு உற்சாகம் ,இவை இரண்டுமே அந்த கல்லூரிக்குள் நுழையும் போது எனக்கு இருந்தது.அவளுடன் இருக்க போகிறோம் என்ற குதூகலம் .
இரண்டு வருடப் படிப்பு.முதல் நாள் .பெற்றோர்களை அழைத்து செல்ல வேண்டும்.அவளும் வருவாள்,பெற்றோருடன்.நான் அப்பாவுடன் சென்றேன்.மதுரைக்கு நான் வந்து இருக்கிறேன் ,ஆனால் தங்கியது இல்லை.எனக்கு தெரியவில்லை அன்று இந்த மதுரை நகரத்தில் நான் காலி செய்து விட்டு போன பிறகும் என மனம் அங்கே தங்கி விடும் என்று!!! எத்தனை உறவுகள்,,எத்தனை சந்தோஷம் ,எத்தனை மாற்றம்,ஏமாற்றம் ,நட்பு,பகை ,பயம்,பொறாமை ,வெற்றி,தோல்வி எல்லாம் பார்த்து விட்டேன்.மிஞ்சியது மனம் நிறைய வலிகள் தான்.மதுரை என் மனதிற்கு என்று அருகில் இருக்கும் என்று இப்பொழுது புரிகிறது.வாழ்கையில் ஒரு வயதை தாண்டிய பிறகு தான் சில பொழுதுகளின் அர்த்தம் விளங்குகிறது.அன்று புரிந்து கொள்ளும் அளவிற்கு மனநிலையும் இல்லை ,நிதானமும் இல்லை .எனக்கு அந்த கல்லூரி நினைவுகளை அதிகம் அசை போட ஏனோ என் மனம் மறுப்பு சொல்லுகிறது.மறுப்பை மீறி மனம் நினைக்கும் போது தான் என் கட்டுபாடுகள் கேள்விகுறியாகிறது !!!
அவள் வண்டி எண் 9696 இல் வந்து இறங்குகிறாள்.அன்று வந்த வண்டியின் வருகைக்காக நான் இரண்டு வருடம் தினம் தினம் காப்பது என் பழக்கமாக இருந்தது. புது நண்பர்கள் முதல் நாளே உருவாகி கொண்டிருந்தார்கள்.அவர்கள் யாருக்கும் தெரியாது வரும் பெண்ணிற்கும் எனக்கும் உள்ள நிலை பாடுகள் பற்றி.வழக்கம் போல் பெண்களை பற்றி பேசி கொண்டிருந்தார்கள்.நான் அவளை பார்க்கும் போது அவள் ஏதோ விசாரித்து கொண்டிருந்தாள்.அவள் என்னை ஆறு மதம் கழித்து பார்க்கிறாள்.அவள் கண்களில் தேடல் இருந்தது.ஆனால் ஏக்கம் இல்லை.என்னால் அவளை நெருங்காமல் இருக்க முடியவில்லை.ஆனால் கட்டுப்படுத்தி கொண்டேன்.முதல் நாள் அப்பா கிளம்பியவுடன் நான் வகுப்பறைக்கு சென்றேன்.என்னடா இது பெண்களும் ஆண்களும் அருகில் அமர்ந்து இருக்கிறார்கள் ? என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன்.அவள் அருகில் ஒருவன் உட்கார்ந்து இருந்தான் .எனக்கு இடம் கடைசியில் தான் இருந்தது.மொத்தம் 64 பேர்.பல நிறங்கள் பல சப்தங்கள்.எனக்கு அமைதி காக்க வேண்டும் என்று தோன்றியது.ஒரு கூட்டமாக Proffessors வந்தார்கள்
இது மனேஷ் ,Dean Management studies
" Welcome to ASM ,You are one of the previlaged batches to be get moulded as the Managers of tomorrow.From the day one we expect Dedication,Inquisitiveness,Sincerity ,Smartwork .For which you will be rewarded in the end through Placements.Please put ur efforts and you can reap the benefits when you are out to this corporate world.Two years are going to be hectic and we expect good level of performance from your batch.All the best.The mobile numbers of all the faculties are available in the NB.Welcome to ASM ."



அவர் ஒவ்வொரு Proffesorஐயும் அறிமுகம் செய்து வைத்தார்.ஏதோ நிம்மதியாக இருந்தது மனம்.ஒரு சாதனை போல் தோன்றியது.அவளிடம் அன்று பேச வில்லை.அவளும் என்னக்கு போனில் அழைக்க வில்லை.இரண்டு வருடம் இருக்கிறதே என்று விட்டு விட்டோம்.ஒரு வாரம் ஆனால் அவள் பேசவில்லை.கஷ்டமாக இறந்தது.நான் அருகில் சென்றாலும் விலகி நடந்தால்.அடுத்த வாரம் அவள் அருகில் வந்து நிற்கிறாள்.எனக்கு அவளை பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் நான் முகத்தை திரும்பி கொள்கிறேன்.அவள் என்னை சகஜமாக தொடுகிறாள் .என் கைகளை பிடித்து என்னை திசை திருப்புகிறாள்.இங்கு இருந்து வந்தது வித்யாவுக்கு தைரியம்.என்னால் என் போய் கோபத்தை நிலைக்க வைக்க முடியவில்லை .

சுவற்றில் சாய்ந்து கொண்டேன்
' ஹ்ம்ம் சொல்லு "
"என் எப்படி ஹேர் கட்டிங் ?"
"எடுத்த உடனே ????"

"இல்ல கிருஷ்ணா நல்ல இல்ல !!" அவள் உரிமையுடன் கூறினாள்.மதியம் சாப்பிட உணவு எடுத்து வந்து இருந்தாள்.
'வித்யா சாப்பாடு இங்கயே கிடைக்கும் நீ ஏன் எடுத்துட்டு வந்த ?"

இப்படி தான் இருந்தது எங்கள் முதல் ஒரு வருடம் .அதிகம் யோசிக்கவில்லை.சுலபமாக காதலித்தோம் .ஒரு மாதம் அந்த கல்லூரியின் கட்டுபாடுகள் பழகிவிட்டன.எங்கள் இருவரை பற்றி பரவி கொண்டிருந்தது.எங்கள்ளுக்கு Freshers party நடக்கிறது.

0 comments: