எனக்கு என்ன நேர்ந்து விட்டது.நான் நன்றாக தான் இருக்கிறேன்,என்ன சொல்லுகிறது இந்த உலகம் என்னிடம் ? எதுவும் எதிர் பார்க்க வில்லை.நான் இருக்கிறேன் ,நகர்கிறேன் ,சிரிக்கிறேன் ,அழுகிறேன் அதற்கு எதாவது பொருள் இருக்கிறதா ? இல்லை ,எனக்கு மட்டும் தான் விளங்குகிறது.அர்த்தம் மற்றவனுக்கு விளங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை அது விளங்கவும் விளங்காது.அடுத்தவன் கண்ணீரில் ஒருவன் பொருள் கொள்ள முடியாது.என் அழுகைக்கு எவனும் பொருள் கண்டதில்லை.மொத்தத்தில் இப்படி நான் அழுது கொண்டிருந்தால் நான் முட்டாள் .அது எனக்கு விளங்குகிறது.

நான் பறவை போல் ஆகி விட்டேன்,பயணித்து கொண்டிருக்கிறேன்.என் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன .காலம் ,களம் எல்லாம் வேறு பட்டாலும் என் பயணம் நீண்டு கொண்டு தான் இருக்கின்றன .என்ன தேடுகிறேன் தெரியவில்லை.

நான் அன்று பயணத்தை முடித்து விட்டு வீடு திரும்பி இருக்க வேண்டும்.ரயில் சிக்னலில் ஏன் மாம்பலத்தில் அரை மணி நேரம் நின்றது.எனக்கு தெரியவில்லை.நான் சென்னை எக்மோர் வந்து அடையும் போது மணி எட்டு.என்னிடம் சிகரட் தீர்ந்து விட்டது.சுற்றி பார்க்கிறேன் பெட்டி கடை ரோட்டை தாண்டி உள்ளது.நம்ம வீட்டு வசந்த பவன் அருகில் உள்ள பெட்டிகடைக்கு செல்ல வேண்டும் என்று என் மனம் சொல்லுகிறது.இதோ நான் என் பைகளை சுமந்து கொண்டு அந்த கூட்டத்தில் நீந்தி கொண்டு செல்கிறேன்.என்னை மீறி இது வரை நடக்க வில்லை.என் உணர்வுகள் கட்டுபாட்டுக்குள் இருக்கின்றன,நான் சிகரட் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை தவிர.

என் கண்கள் எதையும் தேட வில்லை.தீபாவளி முடிந்து வேலைக்கு திரும்பும் சாதரண இளைஞன் .இதை தாண்டி என்ன நடக்க வேண்டும்.சிலர் என் முன்னே நடக்கிறார்கள்.நான் அவர்களை கவனிக்க வில்லை.பல ஆட்டோ க்கள் என்னை சவாரிக்கு அழைக்கிறார்கள் .நான் அவர்களையும் கவனிக்கவில்லை .சிலர் பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள்.சில புது சினிமா போஸ்டர்கள் தென்படுகின்றன .பயணிகள் கவனத்திற்கு என்ற அந்த பெண்ணின் சப்தம் கேட்கிறது.பலர் மின்சார ரயிலை பிடிக்க காலத்தை மிஞ்சுவதற்கு ஓடி கொண்டிருக்கிறார்கள்.நான் சிகரட் பிடிக்க செல்ல போகிறேன்.

நான் ரோட்டின் அந்த பக்கம் இருக்கிறேன்.இதோ அடுத்த பக்கம் பலர் நடந்து கொண்டிருக்கிறார்கள்.நான் எதை பற்றியும் சிந்திக்கவில்லை.ஒரு சில பேர் பேருந்திற்காக காத்திருக்கிறார்கள்.ஒரு சில பெண்கள் நடந்து செல்கிறார்கள்.அதோ அந்த வெள்ளை சுடிதார் போட்ட பெண் ,அவளுடன் நடுவில் ஒரு மஞ்சள் நிற சுடிதார் போட்ட பெண்.அவள் ,,,,,அவள் .....வித்யா மாதிரியே நடக்கிறாள்.வித்யா மாதிரியே தலை முடி சீவி இருக்கிறாள்.அவள் வித்யவா?
"Someday somewaytogether we will be baby
I will take and you will take your time
We'll wait for our fate cos' nobody owns us baby
We can shake we can shake the rock ."

அட சே !! இந்த பாழாய் போன மனம் அவளை ஏன் நினைக்காமல் இருப்பதில்லை.நான் ஒழுங்காக ரயிலில் தூங்காமல் இருந்ததாலோ !!!தெரியவில்லை.எங்கு பார்த்தாலும் உன்னை தான் தேடுகிறேன்.எதற்கு??? நீ வந்தால் உன் முன் நின்று ஒரு நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டு விட்டு போய் விட வேண்டும்.உனக்கு வலிக்கிற மாதிரி.என் வலியை சொல்லிவிட வேண்டும்.ஆனால் நீ எங்கோ இருகிறாய்.இந்நேரம் நீ தூங்கி கொண்டிருப்பாய்.அப்படி கல்யாணம் ஆகி இருந்தால் தலை தீபாவளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருப்பாய்.இது வேறு யாரோ !!

நான் அந்த பெண்ணை மறுபடியும் பார்க்கிறேன்.கிருஷ்ணா என்ன சொல்ற அது வித்யா என்கிறது என் Neural Networks .என் மனம் பட பட வென்று அடிக்கிறது.ஆம் அது வித்யா !!! இந்த முறை எனக்கு ஏமாற்றம் இல்லை.அவளும் அந்த பெட்டி கடையை நோக்கி தான் செல்கிறாள்.நானும் அங்கு செல்ல வேண்டுமா ? நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.அவளிடம் போய் பேச வேண்டுமா ? தெரியவில்லையே.எனக்கு நாக்கு வறண்டு கொண்டிருக்கிறது.என் கண்கள் அவளை தாண்டி செல்ல வில்லை.நான் அந்த ரோட்டை தாண்டி அவள் அருகில் சென்று கொண்டிருக்கிறேன்.

என் மொத்த ஜீவனையும் ஒரு வட்டத்திற்குள் சிறை வைத்திருக்கும் ஒரு பெண் !!! என் முன்னே நடந்து செல்கிறாள்.நான் வருகிறேன் என்று கூட தெரியாமல் !!!.என்ன நடக்கும் இப்பொழுது .இந்த சந்திப்புக்கு நான் தயாராகி விட்டேனா !!!அவள் என்னை கண்டுகொள்ளாமல் சென்றால் என்னால் அந்த வலியை தாங்கி கொள்ள முடியுமா ? தெரியவில்லையே .அவளை பார்த்த உடன் என் மனம் ஏனோ இயங்க மறுக்கிறது.

அவள் அழகாக இருகிறாள்.கொஞ்சம் மெலிந்து காணப்படுகிறாள்.அவள் கைகளில் நான் கட்டி விட்ட ஒரு கயிறு இன்னும் இருக்கிறது.அவள் முகத்தை நான் பார்க்க வேண்டும்.நான் அவள் நிற்கும் இடத்திற்கு பக்கவாட்டில் நின்று கொண்டேன்.அவளுடன் அவள் சொந்தகாரர்கள் வந்து இருக்கிறார்கள்.அவள் சித்தி பெண்ணை என்னால் அடையாளமும் காண முடிகிறது.

என் மனம் அவளை தவிர யாரையோ தேடுகிறது.அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதா ? அவள் தலை வகிடில் பொட்டு இல்லையே !!! அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும்.அவளுக்கு கல்யாணம் ஆக வில்லை என்று என் மனம் சொல்லியது.இன்னும் என்னை அவள் பார்க்கவில்லை.அவள் கவனத்தை திருப்பவேண்டும் என்று நினைத்து கொள்கிறேன்
" அண்ணா ஒரு கிங்க்ஸ் கொடுங்க !!!"

அவள் எதோ பேசாமல் நின்று கொண்டிருக்கிறாள்.என்ன செய்ய வேண்டும்.அவள் குரல் எனக்கு கேட்கவேண்டும்.அவள் பேச வேண்டும்.நான் காத்திருக்கிறேன் !!
" நக்கீரன் ஒன்னு கொடுங்க !!!" என்கிறாள் " நக்கீரன் எனக்கு பிடிக்காது " அவள் சித்தி பெண்

" எங்களுக்கு பிடிக்கும் !! இரண்டு மணி நேரம் இருக்கு இல்ல , எதாவது படிக்கணும் "அவள் குரல் எனக்கு கொஞ்சம் தோய்ந்தது போல் கேட்டது.ஆனாலும் ஒரு புதிய உணர்வு தெரிந்தது.அது சத்தியமாக சந்தோஷம் இல்லை.வருத்தமும் இல்லை.ஒரு விரதத்தை முடித்த உணர்வு.கொஞ்சம் ஒரு மெல்லிய தென்றல் விசியது போல்.ஒரு பயணம் முடிந்தது போல்.ஒரு கூட்டத்தில் நின்று சினிமா டிக்கெட் வாங்கி வெளியே வரும்போது வரும் உணர்வு போல்.மத்திய உணவிற்கு பிறகு புகைக்கும் போது வரும் உணர்வு.

அவள் இரண்டு மணி நேரம் எங்கு செல்கிறாள்.திருப்பதியாக இருக்கும்.யாருடன் செல்கிறாள்.அவள் குடும்பமே வந்து இருக்கிறது.அவள் அம்மா அப்பா வரவில்லை.அவள் கவனத்தை எப்படி திசை திருப்புவது.

அண்ணா ஒரு Business today கொடுங்க

வித்யா என்னை பார்த்து விட்டாள்.அவளால் என்னை மறந்தாலும் என் குரலை மறக்க முடியாது,அவள் காதுகளில் அதிகம் ஒலித்த குரல் எனதாக தான் இருக்க வேண்டும்.அவள் என்னை பார்க்கிறாள்,சிரிக்க முடியவில்லை.அவளை ஏக்கத்துடன் பார்க்க தான் முடிகிறது.என் கண்களில் பார்வையில் ஒரு வேண்டுதல் அவளை நோக்கி செல்கிறது.அவள் அதை வாங்க மறுக்கிறாள்.அவள் கண்களில் தொலை தூரத்தில் கூட ஒரு கனிவு தெரியவில்லை.என்னால் அவள் கண்களை வாசிக்க முடியவில்லை.அவள் உதடுகள் துடிக்கின்றன ,அவள் முதலில் என்னை பார்த்து இருந்தால்,என் கண்களில் தென்படாமல் இருந்து இருப்பாள் என்று நன்றாக தெரிகிறது.

என் தோளில் சாய்ந்து கனவு கண்ட வித்யா இன்று ஒரு அடி தூரத்திலும் எனக்கு மிக தொலைவாக தெரிகிறாள்.அவளுடன் ஓடிய நிமிடங்கள் அந்த நொடிகளுக்குள் நினைவில் தெரிகிறது,அவளுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.அந்த இடைவெளியில் இருந்தவர்களை தள்ளி விட்டு ,நான் அதிகாரம் கொண்டு அவளை அணைக்க வேண்டும் என்று மனம் மன்றாடுகிறது.அவளுடன் ஓடிய வாழ்க்கை தொலைத்த இன்பங்களை அவளிடம் நான் என் கண்களால் வேண்டி கொண்டிருக்கிறேன்.அந்த நொடி செத்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவள் இன்று புதிதாய் பெற்ற சந்தோசத்தை பறிக்க வந்தவனை போல் அவள் கண்களை மூடி கொண்டு திரும்பி கொள்கிறாள்.அவள் அங்கு தான் நின்று கொண்டிருக்கிறாள்.நானும் அவளை பார்த்து கொண்டிருக்கிறேன்.அவள் கால்களில் மெட்டி இல்லை.இப்பொழுது எதற்கு இது???

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.அவளிடம் பேச முடியவில்லையே.பயமா ? இல்லை குற்ற உணர்ச்சியா ? என்ன நடக்கிறது.இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாதே.கிருஷ்ணா அவளிடம் போய் பேசு !!! என்கிறது என் மனம்.நான் பேசலாமா என்று நின்று கொண்டிருக்கிறேன்.அவள் என்னை ஓர கண்களில் பார்ப்பது தெரிகிறது.எங்கள் மனம் பேசி கொண்டிருக்கிறது.அவளுக்கும் எனக்கும் தெரியாமல்.!!! அவள் இல்லை என்று இப்பொழுது மறுத்தாலும் ,என் மனதிடம் அவள் மனம் நலம் விசாரித்து கொண்டிருந்தது.அது எங்கள் உடலை தாண்டி அந்த நினைவுகளில் நடந்து கொண்டிருந்தது,நானும் உணரவில்லை.எங்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒரு அலைவரிசை காலத்தின் பிரிவை மீறி வெற்றி கொள்ள போராடி தோற்று விட்டது.நான் ,அவள் ,எங்கள் இடையே இருந்த ஒருமை ,இன்று இல்லை .அவளிடம் இல்லை ,அவள் தூக்கி எரிந்து விட்டாள் ,நான் தொலைத்து விட்டேன்.அது தான் வித்தியாசம்.எங்களை மீறிய ஒரு தயக்கம் இருவருக்கும் தெரிந்து கொண்டிருந்தது.நான் பேசி இருக்க வேண்டுமோ ? இல்லை அவள் என்னை பார்க்க விரும்பவில்லை.

இதோ மூன்று வருடம் கழித்து வித்யாவும் கிருஷ்ணவும் பார்த்து கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.எங்கே போனது அந்த நாட்கள்.என்னை துரத்தி துரத்தி விரும்பியவள் இன்று என்னை வேண்டாம் என்று நிற்கிறாள் .என் எதிரே உள்ள பெண்ணிடம் நான் வாழ்கையை வாழ்ந்து இருக்கிறேன் இன்று அந்த கடை காரனிடம் சொன்னால் அவன் எனக்கு பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவான்.
அவள் என்னை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை என்று சொல்ல மாட்டேன்.அவள் வாழ்க்கை என்னை தாண்டி எங்கோ சென்று விட்டது.நான் தான் திசை தொலைத்த பட்டம் போல் இன்னும் பறந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு அது புரியவில்லை.அவள் செல்கிறாள்.அவள் என்னை பிரிந்து செல்கிறாள்.மறுபடியும் ஒரு பிரிவு.இந்த பிரிவிற்கு காரணம் கிடையாது.அந்த பெண் யாரவள் ? ஏன் என் மனம் அவளிடம் மன்றாடி கொண்டிருக்கிறது.ஏன் நான் இப்படி பழியாய் அவளிடம் சரணடைந்து கிடக்கிறேன்.அவள் ஏன் என்னை இப்படி வெறுக்க வேண்டும்.இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் !!! எங்களுக்குள் நேர்ந்த பிரிவு இத்தனை கேள்வி கேட்க தூண்டுகிறது.

அவள் நடந்து சென்று கொண்டிருக்கிறாள்.நான் அவளை பார்க்க தான் முடிகிறது.இன்னொரு சிகரட்டை பற்ற வைக்கிறேன்.அவள் திரும்ப மாட்டாள்.அவள் சென்று கொண்டிருக்கிறாள்.அவள் கொஞ்சம் கொஞ்சமாக புள்ளியாய் மறைந்து கொண்டிருக்கிறாள்.அவள் ஒரு ஹோட்டலில் உள்ளே நுழைகிறாள் .ஒரு வாகனத்தில் ஏறுகிறாள்.அந்த வாகனம் கிளம்புகிறது.முன்பு ஒரு நாள் சென்னையில் இருவரும் இருந்த போது அவள் கிளம்பிய போது அவள் பின்னால் ஆட்டோவில் ஓடிய முட்டாள் கிருஷ்னவை போல் என்னால் ஓட முடியவில்லை.அவள் என்னை தெரியாது என்று சொல்லிவிட்டால்? எனக்கு அன்று கல்லூரியில் அவள் பிரிந்து போன ஞாபகம் தான் வந்தது,அதை விட இது சாபமாக இருந்தது.இது தற்செயலாக நடந்ததாக ஏன் மனம் எடுத்து கொள்ள முடியவில்லை.வலியை தாண்டி என் மனம் ஒரு உணர்ச்சியை பெற்று கொண்டிருக்கிறது.அது வலியை விட கொடூரமாக இருக்கிறது.பிரிவு,கண்ணீர்,எல்லாம் சேர்ந்து தூர் வாருகிறது.அது தான் என் இயலாமை !! குற்ற உணர்ச்சி.அவளை இழந்த பொழுதுகளின் இழுவை. அந்த உணர்வை விட்டு வெளியே வர முடியவில்லை.எனக்கு என்னவோ தொலைத்து விட்டு வாழ்கையை வாழ மறுப்பவன் போல் நான் தென்பட்டேன்.

யாரோ ஒருவர் கையை வைத்து தட்டுவது போல் இருந்தது.
டேய் கிருஷ்ணா ?இங்க என்னடா பண்ற ?

கிருஷ்ணாவின் நண்பன் கார்த்திக்.பாலிய சிநேகிதன் !!!!

கிருஷ்ணா கார்த்திகை திரும்பி பார்க்கும் போது கிருஷ்ணாவின் கண்களில் கண்ணீர் இருந்தது.யாரிடமாவது அழவேண்டும் என்று கிருஷ்ணா வுக்கு தோன்றுகிறது.ஆனால் அவன் அழ மாட்டான்.அந்த உறவு எல்லா உணர்ச்சிகளையும் கிருஷ்ணா விடம் இருந்து எடுத்து கொண்டு விட்டது.
பிரித்து பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதும் முகமன்றிப் பிறிதொன்றுமில்லை
சிரித்த ஒலியினில்
உன் கை விலக்கியே திருமித் தழுவியதில்
நின் முகம் கண்டேன்

***************முற்றும்************

19 comments:

Anonymous said...

Aruntha pattam...thisai ariyamal parakalam....aanal....yetho oru thisayil payanikkum....

Krishna apdi payanpattu irukirana...thisai ariyamal sellalam...kaalam avanai engho iluthu selgirathu??!!! enge pogiraan Krishna....???

Avan mana ootangal mariyagi vittatha???

Egmore vaasalil pulliyai maraintha Vidhya....meendum arugil nijamai vara saathiyam irukkuma?? Irukalame!!! Krishna thodarbu kolvana???

Pathil ????

Karthik said...

AK

u are toooo smart...and u know one thing...there will be a post soon read it ..and it will tell u why?
its in the hands of vidhya now and not krishna.this time krishna will not mess up/
krishna thodarbu enbathu nadakkum...nadakka vendum..krishnavukkum vazha vendum endru assai irukirathu...athu nadakkum...vazhvathu mukkiyam

Anonymous said...

In the last episode you have cleary taken the second mind into true picture as the narrator
expressing his failure in trying to convince the human nature of accepting a loss..Kudos to you..

Karthik said...

thanks yaar..we need to accept the reality which is a loss

Anonymous said...

karthik,
IT was an amazing journey all along...I would say the success of a writer is to make a reader feel that the journey should never end....the success of any experience is that...and you have won hands down....the journey of krishna was one ofa kind...we laughed whith him...cried with him and were able to exactly feel what he was going through....I really hope vidhya gets krishna ...all the best...keep writing...
Karthik Sankaran

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Estabilizador e Nobreak, I hope you enjoy. The address is http://estabilizador-e-nobreak.blogspot.com. A hug.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Tênis e Sapato, I hope you enjoy. The address is http://tenis-e-sapato.blogspot.com. A hug.

Karthik said...

@Karthik,

Thanks for ur motivation and support all along this journey,Hope Vidhya joins Krishna :::)))!!!????

Anonymous said...

Gr8 show Karthik,

I liked the way it was finished with lot of qs wide open. The End part is very nicely narrated. And, It never failed to bringout the pain of our showman Krishna. Some haw i felt the pain while readin the final episode, donno why, may be bacause for quite some time, I had travelled with Krishna.

I would not say that mistake is only with Krishna, Pass.........!! Everyone makes mistakes. It is for good that you allow yourself to the imperfections, rather than feeling guilty about it and repenting on it. The sooner you exhaust them, the better.

Hats off to you for such a wonderful display thro' out the 24 episodes. Hope, very soon you will come up with yet another mind blowing story.

Last but not the least,, we, your blog readers, found a good writer in you.

Wishing you Good Luck!!

Cheers!!
Hussain

Karthik said...

Thanks Hussain.

U know it was a big journey for me too.Yeah the pain is there in the last part and It would certainly ooze out for a close follower like you.Thanks for ur support and motivation to make a complete story.
I am certainly thinking to write another story and this time its not abt Love :)

Thanks again for all the support


Cheers

Anonymous said...

What can I say about this ending ?Its simply superb and feel like meeting the character Krrishnaa .I can not understand why the character took all the blame on himself.My analysis shows he has taken because if by chance Vidhya reads it,he wants to impress her.Come on .i am not taking it personal.Lets take it by any side right?The distance part between Krishhnaa and Vidhya in the petty shop was beautifully said and i felt so heavy and couldnot stop the tears flowing from my eyes.I can read from the comments as many related to your story.If it was you I am sorry I didnt enjoy a bit of it.Because I feel sorry you are wasting your talent !!!Karthik its painful to read and I had travelled with Krishnaa and Vidhya and ur Soubarnikaa too but every travel has a itenary and there is an end.Keep a full stop for this if you feel its not worth it .if Krishnnaaa meets Vidhya i would be one of the happiest person ,as I see many expressing the same wish here



SriVidhya

Karthik said...

Thanks SriVidhya for ur comment.I think u are right ,My inner feelings also says the same about Krishna,It might be a drive.

Thanks for ur support and keep reading the future post.
Its not my story :P

mathi said...

I read this episode -24 - i haven't really kept tab with the entire thread.Been reading it more often than not.The last episode was good.Well written, i have been reading AP and Woohaa, I think tamizh is your forte man.You rocketh!.Ur expression of emotions is almost close to reality.Well written.

Karthik said...

Hey Mathi,,,
Atlast u are here in AP..
Thanks for ur support man...

Anonymous said...

I know I'm late here..
but really donno what to type/comment here Karthik!..

Hugs!..

for a Very Bright n Promising future.. is what a well wisher like me can offer ..

Lots of Love
~B :)

Karthik said...

Thanks yaar...
Its ur support,it made me to finish good.And BTW well wisher for
Krishna or Me...:D

Anonymous said...

Rendum than..(yikes!):)
~B

Karthik said...

@~B

Thanks .....:)

Karthik said...
This comment has been removed by the author.