ப்ரியா என்னடி இப்படி சொல்லிட்ட ?

என்ன சொன்னேன் அப்படி ? அவன் கூட தான் நான் இரண்டு வருஷமா தங்கி இருக்கேன் தெரியுமா !! அது தெரிஞ்ச நீங்க எல்லோரும் உடைஞ்சி போயருவீங்கன்னு தான் நான் சொல்லலை.

அப்ப நாங்க உடைஞ்சி போற அளவுன்னா ,அது தப்புன்னு உனக்கே தெரியுது இல்ல!!

தப்பு சரி எல்லாம் எனக்கு இப்ப தெரியாது.இது என் லைப் ,அண்ட் ஐ ஹவ் ஆல் ரைட்ஸ் டு சூஸ் ஹொம் ஐ அம் கோயன் டு மாரி ( I have all rights to choose whom I am going to Marry )

சந்தானம் அப்படியே இடிந்து விழுந்து அமர்ந்தது அவள் கண்களுக்கு தெரியவில்லை.ராஜேஸ்வரி மட்டும் அவளிடம் விவாதம் செய்து கொண்டிருந்தாள்.

இப்ப என்ன சொல்றீங்க ?

நீ செய்றது எதுவும் பிடிக்கல ! எங்க பிரியவா நீ எப்படி மாறுவ ?

நான் ஏன் மாறனும்! அதுவும் உங்க பிரியவா ? நான் எப்பவும் ப்ரியா தான் !! அதுல உங்க ப்ரியா எப்ப வந்தது தெரியல எனக்கு

சந்தானம் இதை கவனிக்கிறாரா என்று கூட அவள் பார்க்க வில்லை.அவள் உலகம் அவளுக்கு முக்கியமாக பட்டது,இந்த விவாதங்களை அவள் பல நாட்களாக எதிர்நோக்கி இருந்தாள்.இன்று வந்ததும் அவள் தயாராக இருந்தவள் போல் அவள் தன் பதில்களை ஏவியது சந்தனத்தை தடுமாற வைத்து விட்டது.

நீ அவன் கூட எதாவது கர்ப்பம்?

இல்ல

அப்ப அதுவாவது ஒழுங்கா இருந்தேயே

இல்லைனா நாங்க செக்ஸ் வைக்கலைன்னு சொல்ல வரல ,குழந்தை இப்போதைக்கு வேண்டாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்ன்னு சொன்னேன்

படுபாவி ஏண்டீ எப்படி பேசுற !! உன்னைய படிக்க வச்சு வெளிஊர்ல வேலைக்கி அனுப்பி எங்களுக்கு பெயர் வாங்குவன்னு பார்த்தா...............................?

ப்ரியா அவளை பேச விடவில்லை,வெளியே கிளம்பி விட்டாள்.சரியாக இரண்டு வருடம் ஓடி விட்டது .ஓடி என்ன பலன் ,நான் மட்டும் இப்படி நகர முடியாமல் இருக்கிறேனோ என்று தோன்றுகிறது.

மனோவை நான் காதலித்து குற்றமா இல்லை கல்யாணம் செய்தது குற்றமா எதுவும் புரியவில்லை.என்னை பற்றி நான் அறிந்து கொள்ள எனக்கு இருபத்தி ஏழு வருடங்கள் ஆகி இருக்கிறது.இதில் நான் மற்றவர்களை அறிந்து கொள்ள எனக்கு எங்கே சந்தர்பங்கள் கிடைக்கின்றன ?

மணி இரண்டை தாண்டி விட்டது.அந்த வீட்டில் இப்பொழுது யாரும் இல்லை,.மனோவின் சில பழைய செருப்புகள் இன்னும் அந்த வீட்டு முகப்பில் இருக்கின்றன.அந்த வீடு அவன் நினைவுகளை தாண்டி திசை மாறி தனிமை என்ற கொடூரமான ஒரு நிலைக்கு அவளை தள்ளி கொண்டிருந்ததை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள்.

விவாகரத்து ஆனா நாள் கூட அவள் கலங்க வில்லை.அவள் தெளிவாக தான் இருந்தாள்.அவள் போராட்டம் எல்லாம் கை மீறி போகும் போது தான் அவள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு அதற்கு முனைந்தாள் என்று அவளுக்கு தெளிவாக தெரிந்து இருந்தது.

Premarital செக்ஸ் தப்பில்லை என்று அவளுக்கு தெரியும்.Flirting எல்லோரும் செய்வது தான்.அவள் அவனை ஒன்றும் கட்டுபாட்டுக்குள் வைக்கவும் இல்லை.அவளே அவளது முதல் முத்தம் யாரிடம் தந்தாள் என்பதை அவனிடம் சொல்லி இருக்கிறாள் .இதில் பெரிய அளவில் ஒன்று அலட்டிக்க விஷயம் இல்லை.ஆனால் கல்யாணம் ஆனா பிறகு ஒரு கட்டுப்பாட்டில் இல்லா விட்டாலும் ஒரு கோட்பாட்டில் இருப்பது அவசியம் மட்டுமல்ல அது ஒரு Virtue.

இந்த இரண்டு வருடத்தில் அவள் கண்டது மனோவை அல்ல அவன் பசியை ,அவள் பார்த்தது செயல்களை அல்ல அவன் சுதந்திரம் என்ற பெயரில் செய்த அத்துமீறல்களை.அவள் அவனை ஒரு நாளும் சந்தேகப்பட்டது கிடையாது.சந்தேகம் என்பது மனதளவில் நேரும் போது நிகழ்வது,புத்திக்கு வந்து விட்டால் அது வாய்வழியே கேட்டு விடும்.அவள் அதை தான் செய்து இருந்தாள் அவனது செயல்களுக்கு விளக்கம் கேட்காமல் அவன் செயல்களை அவன் வாய் வழியே கேட்டு தெரிந்து கொள்வாள் .அது அவனுக்கு தரும் சுதந்திரம் என்று பல நாள் நினைத்தும் கொள்வாள் .இன்று அந்த சுதந்திரம் அவளை எப்படி எல்லாம் அழித்து விட்டு ஒரு புளுவை போல் நெளிய விட்டு விட்டது என்று அவளுக்கு தெரிந்து இருந்தது.

அவள் மனோவை வெறுக்கவில்லை,அவனை காதலிப்பதை வெறுத்து விட்டால்.அதற்க்கு மேல் அது செல்லுபடி ஆகாது என்று அவளுக்கு தெரிந்து இருந்தது.மனோ தன்னிடம் ஏன் இவ்வளவு இருந்தான் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.ஆனால் ஒன்று தெரிந்தது இனி எல்லாம் மாறி விட்டது என்று.விவாகரத்து ஆகி ஒரு வாரம் ஆகியும் அவள் வெளியே செல்லும் பொழுதோ அல்ல வீட்டின் உள் இருக்கும் பொழுதோ அவளது எதிர் காலம் என்ன ஆகுமோ என்று கவலை கொண்டது இல்லை.அவள் எதிர் காலம் என்பது அவள் கையில் என்பது தெரிந்து தான் அவள் அன்று வீட்டை விட்டு வெளி ஏறினாள் ,கல்யாணம் செய்தாள்,விவாகரத்து செய்தாள் ,இன்று தனித்தும் இருக்கிறாள் .அவள் மீது அவளுக்கு நம்பிக்கை இருக்கும் பொழுது அவளுக்கு தெரியும் ஒரே Threat அவள் வயது .அவளை நிலை இல்லாமல் செய்து கொண்டிருக்கும் ஒரே விஷயம்.

2 comments:

Ashok said...

It is going interesting Karthik ! :-)

A small suggestion - Some spell checks necessary.

Karthik said...

ashok....atlast u are here...thanks man...i will correct them...