தேடிச் சோறு நிதம் தின்று -
பல சின்னஞ்சிறு கதைகள்
பேசி வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப்
பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ.....!
பல சின்னஞ்சிறு கதைகள்
பேசி வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப்
பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ.....!
எத்தனை முறை ஒடிந்து வீழ்ந்தாலும் ,ஒரு முறை இந்த வரிகளை நினைத்தால்குதிரை போல் எழும்பலாம்.இந்த வரிகளின் வீரியமோ இல்லை இதை எழுதிய முண்டாசு கவியின் சக்தியோ எனக்குள் என்னையே வேறு மனிதனாக நினைக்க தோன்ற வைக்கும்.வார்த்தைகளின் சக்தி மனிதனுக்கு உரைக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் என்றைக்குமே புது உத்வேகமாக கிளம்புவது உண்மை.அதுவும் பாரதி போன்ற மகாகவியின் வார்த்தைகள் என் மீதும் எனக்கு கோபம் வரும் ,என்னையும் என்னை விரும்ப வைக்கும்.
சமுதாயத்தை ,சுற்றத்தை பார்க்கும் போது வரும் கோபம் இன்று எனக்குள் ஒரு இயலாமையாகஆகிவிட்டது உண்மை.முடியாமலும் விருப்பம் இல்லாமலும் ஒரு சில நிலைகளில் நான் என்னை நிறுத்தி கொள்வது கண்டிப்பாக இயலமையே.நெஞ்சில் உரமின்றி ஒரு சில கனம் ஏற்றத்தாழ்வு என்னை புரட்டி போட்டபோது எதிர்த்து நிற்க முடியாமல் தோற்று விட்டு நகராமல் நின்று இருந்த போது தான் தெரிந்தது என் சமுதாய இயலாமையும் ,என் இருக்கையும்.எச்சி இலை நக்கி வாழும் பேடி யரை போலொரு மனித மிருகங்கள் நடந்து கொள்ளும்போது தெரியும் உன் வாழ்க்கை யார் கையில் நீ கொடுத்து அழிகிறாய் என்று. என்னை துரத்தும் போது தான் தெரிந்தது வீழ்ந்து எழும்பும் போது எத்தனை மிருகத்தைகடந்து என் உரிமையை பெற போராட வேண்டும் என்பதை.சக்தி குறைந்து ,சோர்ந்து விக்கி நிற்கும் போது உன்னை இழுத்து செல்லுமே அவை அத்தனையுமே கடவுள்.எத்தனையோ கடவுளை முகம் அறிந்து உணர்ந்துகொண்டாடி இருக்கிறேன்.
முட்டி மோதி ,திக்கி திணறி வாழ்வை செலுத்தும் போது இடையூறுகள் நினைவுகளாய்வரும் போது தேவை உறுதி அல்ல.உன்னை கொண்டு செல்ல ஒரு கடவுள்.நீ தேர்ந்து எடுப்பது உன்னை மீட்கும் கடவுள்.


2 comments:
fantastic karthik.
thanks ..keep visiting
Post a Comment