உனக்குள் மாற்றங்கள்

விரும்பாத சுமை உன் வயிற்றில்

நீ உலகம் ரசித்தாய்!

வாழ்ந்து முறிந்தாய்

கலகம் பூண்டாய்

உன்னை கடவுளாக ஆக்கி

என்னை படைத்தாய்

எனக்கு புரியாத உறவு கோலங்கள்

நீ ஏது செய்கிறாய்

நான் உன் மஞ்சள் காட்டை

ரசித்தது இல்லை.....ரசிக்க வேண்டும்

நீ வளர்த்த அரச மரத்தில்

என் அண்ணனுடன் தொங்க வேண்டும்

உன் கையில் உணவு வேண்டும்

எல்லாம் வேண்டும்

நான் பெண்ணாகி போனதால்

என்னை ஆழிப்பாயோ!

நேற்று இரவு

என் வளரா காதுகளில் ஒலித்தது

உன் துவாரம் வழியே......

நீ வாழ்ந்த வாழ்வை நானும் வாழ வேண்டும்

என்னை கொன்று விடாதே அம்மா .....!

0 comments: