என்னை பற்றி அல்ல என்று சொன்னால் நம்புவார்களா?
நம்புங்கள் என்னை பற்றி அல்ல! .நான் காதல் நோய் வாய்பட்டவன் அல்ல.



மதுரை செல்லும் வழி எல்லாம் என் நினைவுகள் ஏனோ அத்தனை முறை

ஒரு கோட்டைபோய் தொட்டு விட்டு வந்தது.அந்த கோடுகள் எனக்கு கோட்பாடுகள் ஆகிவிட்டதுஎன்னவோ உண்மை.சில நேரம் நாம் நினைக்கும் வெற்றிகள் சிக்காத போது வெற்றி
பெற்றவனை குறைத்து பேச தூண்டும் .சில நேரம் அல்ல.எல்லா நேரமும்.
என்னை விட எந்த விதத்தில் அவன் விளங்கி விட்டான்?"என்ன ஒரு கொடூரமான சிந்தனை.
மனிதம் விளங்க இந்த comparision இல்லாமல் இருந்தால் சிறக்கும்.
கொஞ்சம் நேரம் என் கண்கள் அடுத்த ஸீட் பக்கம் சென்றது.விடுமுறை முடிந்து
சென்னைக்கு செல்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்.இது நவெஂம்பர் மாதம் ,
ஸெமெஸ்டர் மாதம்.கூத்ூகலிக்கலாம்,கூத்தாடலம்,கொஞ்சம் படிக்கலாம்
நிறைய தம் அடிக்கலாம்,கடிகாரத்தை தேடலாம்,service (Xerox)செ ன் ட் ர் போய் கடலை போடலாம்.எனக்கு மேற்கூறிய எல்லாம் வாய்த்தது. கடைசியாய் சொன்னது தவிர

எனக்கு வாய்த்த கல்லூரி எல்லோருக்கும் வாய்த்தது போல் தான்.நேசித் தேன் நேசிக்க பட்டேன்.
கொஞ்சம் அல்ல நிறைய திமிர் உடன் திரிந்தேன்.எனக்கு அதற்கெல்லாம் விளக்கம் தெரிய வில்லைஆனால் திமிர் ஒரு அழகான உணர்ச்சி.கோபம் அதன் கூடவே வரும்.திமிரும் கோபமும் உள்ளவனை எத்தனை எதிர் பால் நேசித்து விடும்.திமிருக்கு இருக்கும் ஆங்காரம் ஒரு அலங்காரம்.ஸெமெஸ்டர் முடிவுகள் வந்திருந்தது.அனைவரும் நோடீஸ் போர்டில் பார்த்துக் கொண்டிருந்தார் .எனக்கு Fourier transform சுத்தமாக வராது.ரிஸல்ட் உம் வரவில்லை.சூப் பர் மார்க் வாங்கி பெயில் ஆகி இருந்தேன்.யாரும் ல்லாத போது மார்க் பார்க்கலாம் என்று நின்று கொண்டிருந்தேன்.யப்பா 18 மார்க் பிளிறிட்ட போ " என்று நினைத்துக்கொண்டேன்.பிளிரி என்பது அப்பொழுது என் கல்லூரியில் இருந்த ஒரு சொல் "கலக்கி ட்ட போ" என்பது அர்த்தம்.
என்ன அச்சு ?
குரல் கேட்டு திரும்பினேன் "ஏன்?"
அவள் வேறு டிபார்ட்‌மெஂன்ட் மாணவி.நல்ல வழித்து சீவி பெரிய போட்டு வைத்திருப்பாள்.என்னவொரு முன்னுரை ஒரு பெண்ணுக்கு..அவள் என் டிபார்ட்‌மெஂன்ட் இல் உள்ள ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்க வருவாள்.ஏதோ கண்ணை நோட்டம் விட்டு கொண்டேஇருப்பாள்.
"ஏன்ன் நா ?சும்மா தான்! "
இந்த பதிலைநான் எதிர்பார்க்கவே இல்லை.industrialvist போய் கொஞ்சம் பொண்ணுங்காளை அதிகமாக பேச விட்டுட்டாங்க ன்னு தோன்றியது.
"ஏன் நீ வந்து எழுதி தர போறியா ? போ !"என்றேன்.
நான் கொஞ்சம் முரடன் மாதிரி தான் தெரிந்தேன்.அவள் முகம் சிறுதது போனது.
நான் அதை ரசித்தேன்.
ஒரு நாளும் ஒரு பெண்ணுடன் சரிக்கு சமமாக பேச இடம் தர கூடாது என்று முடிவாய் இருந்த காலம் அது.என் டிபார்ட்‌மெஂட் பெண் என்னிடம் அன்று மாலையே வந்தாள்.
அவளிடமும் நான் பேசியது இல்லை.
"உங்க கிட்ட நான் பேசலாமா?" என்றாள்
"ம்"
"கீதா பேசினத்துக்கு hurt பண்ணீங்கலாமே?
எனக்கு அந்த மரியாதை பிடித்து இருந்தது.என்ன சொல்வதுமுட்டாள் மாதிரி பதில் " அப்பிடியா _____ தெரியலையே!"அவள் முறைத்தது தெரிந்தது.
நான் ஏதோ நினைத்தவன் போல் என் நண்பனுடன் செல்ல ஆரம்பித்து விட்டேன்.
அய்யோ ஏனப்பா என்னை இவ்வளவு சிக்கல்ல உடுறீங்க?எனக்கு பேச தெரியல!
அதனால நான் என்னை அப்பிடி கட்டிகிறேன் என்று நினைத்துக்கொண்டேன்.எத்தனையோ பேர் அப்படி திரிந்துகொண்டிருந்தார்,ஆசையை அடக்கி வெளிக்காட்டாமல்.
நான் பெரியதாக ஒன்றும் ஆசை படவில்லை பொறாமை தான் மேலோங்கிவழிந்தது.
நான் படிக்கும், போது இருந்த பொறாமைக்கு முற்று புள்ளி வைத்தாள்..
"குரு "இந்த சொல் எனக்கு அன்று நினைவில் வரவே இல்லை.எனக்கு அவள் குருவாக தெரிந்தால் ஆனால் வேறு விதத்தில்.

2 comments:

Vinoth Pradeep said...

I think even this time its early to comment
நண்பா.. நீ உன் கவியை முடி.. பின் என் காமெஂட்ஸ் தொடரும்...

Karthik said...

machi this post was suppose to be a short post now i am planning to make it a serial post...enna solra..so u will enjoy...for sure