உன்னோடு நானும் போகின்ற பாதை
அது நீளாதோ தோடு வானம் போலவே!
எவ்வளவு அழகான வரிகள்.அனுபவித்தால் தான் ஆசையும் புரியும் ஆண்மையும் தெரியும்.காதலுக்கும்ரயில் தாண்டவாளததிற்க்கும் என்ன உறவு என்று நான் எத்தனையோ முறை மூளையை பிழிந்திருக்கிறேன்.பிடி பட்டது இல்லை.ஆனால் இரயிலில் ஜன்னல் ஓரதிலோ அல்ல அந்த நாற்றம் பிடித்த toilet அருகிலோ நின்று அந்த ஓடும் காட்சிகளை பார்த்து ஒரு சோக பார்வை விட்டு பாருங்கள்.கவிதையும் கொட்டும்நினைவுகளும் வழிந்து ஓடும்.யாரும் இதில் முரண் பட முடியாது.
என்றோ ஒரு முறை ஜூனியர் விகடனில் "காதல் படிக்கட்டுகள்" என்று ஒரு தொடர் வெளிவந்திருந்தது.இன்றிலிருந்து சரியாக பத்து வருடங்கள் முன்னர்.அதில் பாடலாசிரியர் பழனி பாரதியின் ஒரு கவிதைஎன்னால் என்றும் மறக்க முடியவில்லை.
நான்
நீ
ஒற்றை ரோஜா
இரயில் தண்டவாளம்.
என்ன சொல்கிறது இந்த கவிதை.முழுவதுமாக ஒரு பொருளை கொள்ள முடியாது.அது தான் இரயில் தாண்டவாளத்தின்வீரியம்.புலவர்களுக்கு எப்பொழுதுமே விரியத்தின் மீது பிரியம் அதிகம்.கல்லூரியின் நினைவுகள் முடிந்த பாடில்லை.
எந்த ஒரு பெண்ணையும் அருகில் இருந்து ரசிக்காத தருணங்கள்.கொண்டாடி போவான் என்று சொல்வார்களே அது தான் எங்கள் அனைவரின் நிலையும்.சுற்றியும் நண்பர்கள் கூடி கூத்து ரகளை என்று திரிந்தாலும் எனக்குள் ஒரு தனிமை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது.அது தனிமை என்று சொல்ல கூட தெரியாத பருவம்.வாழ்க்கையை முழுவதும் ஒரு பெண்ணுடன் மட்டும் ஒப்படைக்காமனம் சம்மதித்து இருந்த நிலை.சிரிப்பு வருகிறது.ஆனால் உண்மை கடந்து போகும் போது பாடம் ஆகிப் போகிறது.
அன்றைய மாலை பொழுதின் காற்று எனக்கு பழக்கப் பட்ட காற்று போல் நலம் விசாரித்துகொண்டிருந்தது.ஒரு சீனியர் எதிரில் வந்துகொண்டிருந்தான்.
"என்னடா இவ்வளவு லேட் ? "
நீயும் ஆரம்பிட்சு டீ யா
எதை என்று விளங்க வில்லை.
"எத? " என்றேன்.
"உங்க ப்லாக் ல தான் க்லாஸ் முடிஞ்சா என்னவோ நடக்குது ன்னு கேள்வி பட்டேன். "
அடப்பாவிகளா !!! இவ்வளவு சுலபமா இது? என்று தோன்றியது.
"இல்லீங்க கொஞ்சம் ரெகார்ட் சைன் வாங்கிட்டு வந்துட்டு இருக்கேன்! "என்றேன்
அவன் நம்பாமல் சென்று போனது எனக்கு உறுத்தவில்லை.என் கவலை எல்லாம் அந்த ப்லாக் இல் என்ன நடக்குது என்பதை என்றது தான்.என் ப்லாக் ஐ பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் வித்தியாசமாய் தோன்றியது.திரும்பி போய் பார்க்கலாம் என்று நினைத்து கொண்டு திரும்பினேன்.என் க்லாஸ் பக்கம் சென்ற போது கொஞ்சம் சத்தம் கேட்டது.ரொம்ப சாதாரணமாய் நுழைவது போல் நுழைந்து விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
" நான் தான் சொல்றேன் இல்ல அது முடியாது"
அப்ப என்னைய விட்டுடு" அது பெண் குரல்
எத்தனை தடவை உனக்கு?_______________???????
அவளுக்கு என்ன ? என்று கேட்பதற்குள்
"ஹெலோ இங்கே என்ன பண்றே!"என்ற குரல் கேட்டு திடுக்கிட்டேன்.
" இல்ல i left my record not here "
அது ஒரு மேடம்.காலேஜ் முடித்த உடன் மேடம் ஆக வேலைக்கு சேர்ந்து விட்டார்.ஆனால் வந்த உடன் ரொம்ப பிரபலம்.
எல்லோரையும் படு பயங்கரமாக கிண்டல் செய்யும் இளமையான குரு.என்ன செய்வது என்னை விடமூன்று வயது மூத்தவர் எல்லாம் எனக்கு பாடம் எடுத்து நான் இன்ஜினீயர் ஆக போகிறேன்.இந்த உரையாடலில் அந்த பையன் "எத்தனை தடவை உன்னை ____" ங்க்ர அந்த முழு உரையாடல் கேட்காமல் போனது.
அதுக்கு என் திருடன் மாதிரி ஒளிஞ்சு கிட்டு தேடுற?
என் மனம் எல்லாம் எத்தனை தடவை அவன் ,அவளிடம் என்ன செய்திருப்பான் என்பதிலே இருந்தது.
ஹெலோ எங்கே இருக்கே?
"இல்ல எத்தனை தடவை நான் இங்கே !!!"
"என்ன பேசுற நீ "
"உன் பேர் என்ன??"
"என் பேர் தெரியதா? மனததுக்குள்ளே நினைத்துக் கொண்டேன்.
என் பேர் எத்தனை பேருக்கு தெரியும்,எப்பிடி தெரியும்,தெரியும் அளவுக்கு என்ன சாதித்து விட்டேன்.கூட்டத்தில் தோன்றும் ஒரு சாதாரண மாணவன் போல நானுமா? இல்லை....! நான் "நான்"...... எனக்கு நிகர் யாரும் இல்லை.எனக்கு அப்பொழுது தெரியவில்லை. இந்த கர்வம் என்னை அழித்துகொண்டிருந்ததுஎன்று.ஆனாலும் என் தலை நிமிர்ந்து தான் இருந்தது.
"இல்ல உள்ள?"
"உள்ள என்ன?"
"உள்ள சத்தம் அதான் மெதுவா! "
"ம் அங்க ராஜேஷும் ராகவியும் ரெகார்ட் எழுதுறாங்க!"
என் கையில் உள்ள ரெகார்ட் ஐ பார்த்து விட்டாள் அவள்.கொஞ்சம் சந்தேகமாக பார்த்து விட்டு "நீ hod room க்கு வா"
HOD தான் இல்லையே ! பின் எதற்கு!எனக்கு தெரியவில்லை.என் மனதில் அவள் நுழையவே இல்லை அந்த அறைக்குள் நான் நுழையும் வரை
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

3 comments:
டே நண்பா... விசயம் ரொம்ப ஸூபர்.. சீக்கிரம் அடுத்த ரிலீஸ்
aga aga
:)
Konjam wait madi...
Post a Comment