நான் தொலைத்த நிஜங்களை எல்லாம் தேடி செல்லும் போது நானும் தொலைந்து போகிறேன்.என் நிலை என்னை செல்லறித்து ஆழிபதற்குள் என்னை வேறு உறவு ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது.என் நினைவுகளின் நிஜத்தை எனக்கு என் மனம் மட்டும் தான் நம்புகிறது.உறவுகள் முறிந்து போகும்போது எப்படி எல்லாம் உண்மை வெளிப்படுகிறது.அது தான் நிஜமான மன நிலை. அன்றும் அது போல் தான் என் மனம் ஏதோ தேடி போய் ஆனால் எங்கோ சேர்ந்து விட்டேன்.
"உள்ள வா"என்றாள்.
அங்கே யாரும் இல்லை.நான் பட பட பில் வெளியே நின்று கொண்டிருந்தேன்.
அவள் என்னை மீறி செல்வது போல் இருந்தது.எனக்கு அது புதிதாக இருந்தது.
அவள் ஒரு காட்ட் ன் புடவை அணிந்து இருந்தாள்அழகா தான் இருந்தாள்.ஓடாத Machines தான் இருந்தது.
"உன்னை பார்த்து இருக்கெனெ? "
"இயர் பொண்ணோட சண்டை போட்டுக்கிட்டு இருந்தே இல்ல?"
"அது என்ன முடிய தொங்க வீட்டுக்கிட்டு இருக்க! அத கட் பன்னிரு"Ragging போல இருந்தது.எனக்குள் இருந்த ரசிகன் குற்றவாளி போல் நின்று கொண்டிருந்தான்.
நான் கஷ்டப் படுவதை உணர்ந்து விட்டு”சும்மா ஓட்டினேன்”. உண்மையில் நான் அவளை நேராக பார்க்க முடிய வில்லையே என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன்
நான் பதில் பேச வில்லை.அவள் எழுந்தாள்.எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.அவள் நடக்கும் போது நான் பார்க்க வேண்டும் என்று ஆசை யாக இருந்தது.ஆனால் பயமாக இருந்தது.அவள் என் பயத்தை உணர்ந்து இருந்தாள்.பெண் பேசும் போது கண்கள் குத்தி கொண்டு கண்களை மட்டும் பார்க்கும் .ஆனால் ஆண் பேசும் போது பெண்ணின் அசைவுகளை அளவெடுக்க ஆரம்பித்து விடும்.முதன் முதலில் ஒரு பெண் என் அருகில் ருந்து பேசும் போது என்னால் அளவெடுக்க முடிய வில்லை.ஆனால் அவள் என்னை ஏதோ கேட்டு கொண்டிருந்தாள் நானும் பதில் சொல்லி கொண்டிருந்தேன்.திடீர்னு ஏதோ உணர்ந்தவன் போல் எழுந்தேன்.
நான் கிளம்பிரேன்"
”ஏன்”
”இல்ல Canteen போகணும் பசிக்குது”
”சரி வா ஒண்ணா போகலாம்”
எனக்கு ஏதோ போல் இருந்தது,ஆனால் நன்றாக இருந்தது,நாம் இவள் உடன் __ சென்றால் என்னவாகும்.
”ம் “
”என்ன “ வா”
அன்று நான் தான் ஹீரொ ....அந்த வழி முழுவதும் அவளுடன் பேசிக்கொண்டே சென்றேன்.ஆனாலும் என் கண்கள் மற்றவர்கள் என்னை பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டு கொண்டிருந்தது.கண்டீ ன் இல் அருகில் உட்கார்ந்த போது எனக்கு ஏதோ போல் இருந்தது.ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.பெண்ணுக்கு தனியாக வாசம் இருக்கிறது.நான் உணர்ந்து இருக்கிறேன்.அன்றும் உணர்ந்தேன்.”சரி நான் வர்றேன்!!” என்று கிளம்பினாள். அவள் ஏன் என்னுடன் பேசினாள் என்று எனக்கு தெரியவில்லை.அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கும் அவளுக்கும் ஒன்றும் பெரியதாக அலைவரிசை இல்லை ஆனால் எனக்கு ஏதோ ஒரு துருவ பத்திரம் நடந்தது போல் இருந்தது,அன்று என் அறைக்கு நிறைய பேர் வருவார்கள் என்று எனக்கு தெரியும்.எல்லோரிடமும் நான் பொய் தான் சொல்லபோகிறேன்.ஆனால் அந்த பொய் எவ்வளவு உண்மையாக இருக்க் வேண்டும் என்பது தான் முக்கியம்,.ஹாஸ்டல் வந்து சேரும் வரை யாரும் என்னை கேள்வி கேட்க வில்லைகண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன்.அழகாய் தான் இருக்க!!! என்று சொல்லி கொண்டேன்.
இரயிலில் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன்.வயசாகி போ ட்சுடா உனக்கு.முடி கொட்டி போட்சுடா” இரயில் மதுரை சந்திப்புக்குள் நுழைந்து விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

5 comments:
Awesome man....the things i like the most is lot of things are stuff I do..probably everyone does...
the ending the kannadi matter ...how true...
awesome
மறுபடியும்... என் கல்லூரி நாட்களை நெனைக்கிறேன்..நன்றி நண்பா..
என்ணக்கும் வயசு ஆயுடுசொ... ஆஹா ஹா
உண்மைகள் இப்போது தான் முதன் முறையாக இனிக்கிறது.... Really good
@karthik
Thanks ...neeyum nanum pannathu than..:)
@Vinoth
VAYASU AYIDTCHU NANBA ,,,VAYASU AYIDUTCHI
Post a Comment