காற்று கொஞ்சம் பலமாக வீசிகொண்டிருந்தது.வீசிய காற்றுக்கு இணையாக என் மனமும் பறந்து கொண்டிருந்தது.அந்த பொழுதில் எனக்கு தம் அடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது.எவ்வளவு உயரிய எண்ணம்.
பொழுது சாய்ந்து நித்திரை முட்டுகிறது என்பது,ரயிலில் விளக்குகள் அணைந்தததை பார்த்தால் தெரிந்தது.என்னிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம்,அந்த குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் எவ்வளவு தோல்வி அடைந்தாலும் மீண்டும் போருக்கு கிளம்புவது போல் வீறு கொண்டு செல்வது தான்.


இரண்டு கழிவறைகளும் மூடியே இருந்தது,ஒரு கழிவறையில் சிகிரெட் வாசம் அடித்தது.

"அட பாவிங்களா முந்தி கிட்டீங்களேய்" என்று தோன்றியது. எப்படியும் கதவு திறக்க நேரம் ஆகும் என்பதால் நான் ரயில் வழியோரம் சாய்ந்துகொண்டேன்.
அந்த ஜோடிகளை போல் எனக்கும் ஒரு காலத்தில் Camp ரொம்ப முக்கியமாக பட்டது.

நானும் NSS Camp சென்று இருக்கிறேன் வாழ்க்கையில் பல வற்றை முதலாக அனுபவித்தேன்.பலவற்றை பலமாக ரசித்தேன்.இன்று திரும்பும் போதும் தோன்றுகிறது "முதல் மழையும் முதல் முத்தமும் தரும் இன்பம் இணை இல்லாததது".அந்த உணர்வுகள் நடை பெறும் சமயம் யதார்த்தம்.வாழ்க்கையை புரட்டி போட்ட camp அல்ல அது.ஆனால் வாழ்க்கையை புரட்டி போட்ட காரியங்கள் செய்ய தூண்டிய எண்ணங்களுக்கு விதை போட்ட camp .

ஒரு சிலவற்றுக்கு விளக்கம் தேவை இல்லை.காரணமும் தேவை இல்லை.அது போல் தான் எனது NSS CAMP .எதற்கு கல்லூரியில் NSS CAMP ஏற்பாடு செய்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.ஆனால் முந்தி கொண்டு பல மாணவர்கள் பெயர் கொடுப்பார்கள்.நானும் கொடுத்து இருந்தேன்.எனக்கு அது இரண்டாவது வருடம் NSS CAMP செல்வது.இந்த முறை நான் NSS CAMP சீனியர் என்பதால் தைரியமாக சென்றேன். ஒரு கிராமத்தில் ,ஒரு காட்டில் சமூக சேவை என்ற பெயரில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் எல்லோரும் கூட்டமாக சேர்ந்து பத்து நாட்கள் சேவை செய்வார்கள்!!!!!!பகலில் பாதைகளை மாற்றி அமைப்பார்கள்,குப்பை அள்ளுவார்கள்,கழிவை சுத்தம் செய்வார்கள்.மாலையில் பாட்டு பாடி மக்களை மகிழ்விப்பார்கள்.இரவில் அதே பாதையில் பாட்டில்களையும்,சைட் டிஷ் களையும் போட்டு அசுத்தம் செய்வார்கள்,நடு நிசி இரவில் பாட்டு என்ற பெயரில் பாடி மக்களிடம் கொடுத்த மகிழ்ச்சி எல்லாவற்றையும் திரும்ப வாங்கி கொள்வார்கள்.அது தான் எதற்கு இந்த சேவை என்ற விளக்கம் என்று கேட்க கூடாது.


ஆனால் ஒவ்வொரு மாணவனும் செல்ல வேண்டிய பயணம்.வேகமாக சுழலும் உலகத்தில் இருந்து கொஞ்சம் விடுபட்டு எல்லாமே கொஞ்சம் நிதானமாக செல்லும் உலகத்தை ரசிக்க வேண்டும்.அங்கே தொலை பேசி இருக்காது.பாதி தொல்லை கிடையாது.பெப்ஸி ,கோக் கிடையாது.சிகரெட் கிடையாது. இருந்தாலும் சிஸர் தான் .அங்கே ஹோட்டல் கிடையாது.அங்கே கிடையாது களை போல் இருப்பதும் அதிகம். அனுபவம் வழிய வழிய கிடைக்கும்.நான் சென்ற NSS CAMP மூன்று பிரிவுகள் .அதற்கு பெயர் எல்லாம் வைத்து இருந்தார்கள்.நான் Senior என்பதால் எனக்கு ஒன்றும் பெரியதாகவேலை இல்லை.ஜாலியாக அமர்ந்து வெட்டி நியாயம் அதிகம் பேசினோம்.எங்கள் பிரிவுக்கு அந்த இளம் டீச் சர் தான் தலைவி!!!!! அவள் பெயர் சௌபர்ணிகா.என்ன பெயரோ .எனக்குள் அந்த பெயர் அழகா தான் தெரிந்தது.அவளிடம் அடிக்கடி சென்று என் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.இதில் இந்த Third இயர் மாணவர்கள் வேறு.உரிமையுடன் பழகி வந்தார்கள்.எனக்கு ஏதோ போல் இருந்தது.ஒரு முறை தான் அவளிடம் பேசி இருந்தேன் ,ஆனாலும் எனக்கு ஏதோ சொந்தம் கொண்டாடுவது போல் தோன்றியது.அவளிடம் போய் பேசி அசிங்க பாட என் மனம் ஒப்பவில்லை.ஆனால் எனக்கு அந்த பசங்களை பார்க்கும் போது கோபம் வந்தந்து.பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் .முதல் நாளே இப்படி போட்டு தாக்கு றாங்களே என்று தோன்றியது.அவள் என்னை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை.கொஞ்சம் முரட்டு பார்வை கொடுத்தேன்.மசியவில்லை.எனக்கு கொஞ்சம் தாமதமாய் தோன்றியது"நீ மாணவன் அவள் ஆசிரியை ,நீ எதிர் பார்க்கும் எதுவும் நடக்காது" என்று.


அன்று மாலை கலை நிகழ்ச்சி நடந்தது.நான் தூரமாக அமர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் செய் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்ப அப்ப மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எல்லாம் நாங்கள் இது எல்லாம் நிறைய பார்த்து விட்டோம் என்பது போல் பாடிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு எரிச்சலை மூட்டியது.நானும் என் நண்பன் சிராஜூதினும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தோம்.என் நண்பனுக்கு பொறுமை இல்லை,

" டே நான் டாம்(Dam) கிட்ட போறேன் வர்றியா?"

"இப்பவா "

ஆமாண்டா இப்ப தான் நல்ல காற்று வீசும் வா!"

சரி நான் அந்த ஃபர்ஸ்ட் இயர் ரூபா பாடி முடிட்ச உடனே வர்றேன்!!!!

என்னுடன் என் சக மாணவர்களும் இருந்தனர்.அவர்களும் அதையே ஆமோதித்தனர்...


"தூ நீங்க திருந்த வே மாட்டிங்கே"


" ஆமாம் இவரு திருந்தி பொண்டாட்டி ய கும்பிட போறாரு" என்றது ஒரு குரல்.


பொண்டாட்டி ய கும்பிட ...என்ன ஒரு கற்பனை.


நான் சென்ற வழியும் என் நண்பன் சென்ற வழியும் வேறாக இருந்தது .நானும் டாம் ஐ அடைந்திருந்தேன் அவன் முன்னவே சென்று இருந்தததால் வெகு தூரம்
சென்று இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இருட்டாக இருந்ததால் வெளிச்சம் அதிகம் உள்ள கெஸ்ட் ஹவுஸ் பக்கமாக ஒதுங்கினேன் .அங்கே தான் எங்களது மேடம்கள் எல்லாம் தங்கி இருந்தார்கள் என்று எனக்கு தெரியும்.எல்லோரும் தான் குல்ட்சுரல்ஸ் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே என்ற
நினைப்பில் நான் அந்த கெஸ்ட் ஹவுஸ் பக்கம் கதவை திறந்து பார்த்தேன்.நான் ஏன் பார்த்தேன் என்று எல்லாம் தெரிய வில்லை ஆனால் அங்கே என்ன இருக்க வேண்டும் என்ற ____ திறந்து பார்த்தேன்.

அறைகள் முழுவ்தும் சுத்தமாக இருந்தது .ஏ / சி வேறு மாட்டப்பட்டிருந்தது .ஒரு அறை சுத்தமாக காலியாக இருந்தது.மற்றொரு அறை பின் பக்கம் இருந்தது .அங்கு துணிகள் எல்லாம் சிதறி கிடந்தது.அங்கு கிடந்த பச்சை நிற சூடி தார் எனக்கு எங்கோ பார்த்தது போல் இருந்தது .இத நான் எங்கயோ பார்த்து இருககேனே என்று நினைத்து அந்த ஜன்னல் திண்டில் இருந்து இறங்கினேன் .
நாம் எதோ வேண்டாத காரியம் செய்கிறோம் என்று தோன்றியது.அங்கு இறங்கிய போது அங்கு காய்வதற்கு சில துணிகள் தொங்கிகொண்டு இருந்தன .
அப்பொழுது அந்த பச்சை நிற துப்பட்டா எனக்கு அருகில் தொங்கி கொண்டு இருந்தது .


"இது சௌபர்ணிகா வுடையது "

அருகில் காய்ந்து கொண்டிருப்பதும் அவளுடையதாக தான் இருக்க வேண்டும்.என்ன செய்வது ஒரு சில பருவத்தில் ஆடைகள் கூட உணர்வுகளை தூண்டும்.அது
கேவலமான எண்ணம் என்று ஒதுக்கி விட முடியாது.
எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது ,வெளிய வந்து பார்க்கலாம் யாராவது தெரிகிறார் களா" என்று பார்க்க கிளம்பினேன்.

இருட்ட இருட்ட என் எண்ணங்கள்ளும் இருட்டி கொண்டே சென்றது,சிராஜ் மற்றும் ஏன் நண்பர்கள் யாரையும் நான் தேடுவதாக இல்லை.
யாரும் வருவது மாதிரி இல்லை ,தூரத்தில் "ஏதோ ஒரு பட்டு ஏன் கத்தில் கேட்கும் " என்று ஏதோ ஒரு பெண் பாடி கொண்டிருந்தாள் .

"யாரும் இல்லை " என்று நினை துக்கொண்டு திரும்பிய போது நான் பார்த்த முகம் சௌபர்ணிகா .ஒரு நொடி என் மூச்சு நின்று விட்டது.என்ன செய்வது என்றும் தெரியவில்லை ,என்ன பேசுவது என்றும் தெரியவில்லை .அவள் என்னை மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ,மறுபடியும் அவளிடம் ஒரே மாதிரியே மாட்டிக் கொண்டோமே என்று பயந்து இருந்த பொழுது

" இங்க நல்ல காத்து வருது இல்ல?

"? "

"என்னடா எப்ப பார்த்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே இருக்க ?"

"இல்ல நான் காத்து வாங்க வந்தேன் ! செமையா காத்து வருது இங்க "

அந்த இருட்டில் என் முகம் அவளுக்கு தெளிவாக தெரிய வாய்ப்பில்லை ,ஆனால்
அவள் முகம் வடிவை கூட்டி கட்டியது.இருள் ஒளியை அழகாய் காட்டுவது இயல்பு
தானே .அவள் ஆச்சர்யமாய் அமைதியை தெரிந்தாள்.ஆனால் என் மனம் தான்
பேர் இரைச்சலை கூட்டிக் கொண்டு இருந்தது.அவள் உதடுகள் எனக்கு அழைப்பு விடுப்பது போல் இருந்தது.


"வா அந்த பக்கமா போய் உட்காரலாம் "

"ம் ".

அந்த ம் என் இருபது வருட விரதத்தை முடித்து வைக்க போகிறது என்று எனக்கு ஒரு பேராசை இருந்தது.

7 comments:

Vinoth Pradeep said...

விசில் சத்தம்.... வி வி வி வி வி ..நீ கிளப்பு மாமு....கிளப்பு

Anonymous said...

அருமை ... அருமை .... சும்மா நச்சுன்னு போகுது நா.... "அருகில் காய்ந்து கொண்டிருப்பதும் அவளுடையதாக தான் இருக்க வேண்டும்.என்ன செய்வது ஒரு சில பருவத்தில் ஆடைகள் கூட உணர்வுகளை தூண்டும்." அக்மார்க் உண்மை ....

காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்கு....

Karthik said...

@ வினோத்
நன்றி நண்பா ...உற்சாகம் தருகிறது .விசில் சத்தம்

@ அஸ்லாம்

நீ என்னை உருவக படுத்தி வசிக்காதே...ப்ளீஸ் ...ஆனாலும் நீ சுட்டி கட்டி இருக்கும்
இடம் எனக்கும் மிகவும் பிடித்து இருந்தது..நன்றி அஸ்லாம்

Anonymous said...

abarna madama pathu ivalo nenapa unakku
:))
karthik sankaran

Karthik said...

No karthik,...Ethu thappu...
Nan avan illai :)P

Anonymous said...

adutha posta podu

karthiksank

Karthik said...

Nanba,,,Ready ayitu erukku...Please wait madi...!