ஒரு சில விஷயங்கள் எனக்கு அப்பொழுது விளங்க வில்லை.சௌபர்ணிகா யார் ? எதற்கு என் மனம் அவள் பின் செல்கிறது.எங்கே போனது என் ஆண் என்ற திமிர்? ஏன் எனக்கு உடல் உஷ்ணம் கொள்கிறது ? இன்று அந்த பெண்ணை நினைத்து பார்த்தால் எனக்கு ஒன்று புரிகிறது.பெண் எப்பொழுதும் அழகாய் இருப்பது இல்லை .அந்த அந்த கனங்களுக்கு அழகாய் தோன்றுகிறாள்! அழகும் கனமும் சேர்ந்து வரும் போது ஆண் அடங்கி விடுகிறான்.நான் என்ன அன்று என்ன எதிர்பார்த்து சென்றேன் என்று எனக்கு என்று சொல்ல தெரியவில்லை.அனல் எனக்கு எதோ சில முடிச்சுகள் அவிழ்க்க காத்திருக்கின்றன என்று மட்டும் விளங்கியது.

" என்னடா ரொம்ப அலுத்துக்கிற ? என்றாள்

" இல்ல எனக்கு ஒன்னு புரியல " என்று கண்களை மூடினேன்

"ஏன் இவ நம்ம கூட பேசுறன்னு தானா" என்று கேட்டாள் என் முகத்தை பார்த்து

"ஆமா "

"தெரியலையே "

"தெரியலங்க்றது எல்லாம் பதில் இல்ல!"

"நான் பதில் சொல்லலை என்னோட நிலைமைய சொன்னேன்"


"என்ன நிலைமை ? ஐயோ எனக்கு குழப்புது. எனக்கு மறைக்க தெரியாது!"

"என்ன ? சொல்லு"


"நீங்க என்ன ரொம்ப டிச்டுர்ப்(Distrub) பண்ற"


"என்னடா பேசுற " நீங்க " ன்னு சொல்ற அப்புறம் பண்ற ன்னு சொல்ற "

"பாரு இந்த Intimacy தான் என்னை குழப்புது !"

" நான் உன்கிட்ட intimacy அஹ இருக்கேன்னு யாரு சொன்னா? "



"நான் சொல்றேன்"

"உனக்கு என்னடா தெரியும்நான் உன்கிட்ட பேசினேன் ...நீ அந்த பேஷன் ஷோ வில நல்ல பண்ண ..எனக்கு அது ரொம்ப புடிச்சுது.அதன் உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன் ஆனா நீ வேற நிலமைல என் கண்ணில பட்ட ! கொஞ்சம் உன்கூட விளயடலம்னு உன்னை மிரட்டினேன். " என்றாள் அழுத்தம்மாக


"நான் ஒண்ணும் மிரண்டு போகலை ...அப்புறம் அது எல்லாம் வேண்டாம் !!!


"Why are u so good to me ... " என்று அவளை கெஞ்சலாக கேட்டேன் .

"No I am good to every Body "


என் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததாக எனக்கு தோன்ற வில்லை.ஆனாலும் எனக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது.அவள் என்னிடம் எதோ ஒரு அடைந்து இருக்க வேண்டும் அது தான் நான் மரியாதை இல்லாமல் பேசியதை கூட அவள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.



இந்த மன்றாடல்களுக்கு முன் நான் அவளிடம் நாட்டு நடப்புகளில் ஆரம்பித்து,சினிமா வுக்கு வந்து அப்புறம் மனிஷா கொயரலாலவை பற்றி புல்லரித்து விட்டு ,அவள் உதட்டின் மீது இருக்கும் மச்சத்தை பற்றி பேசி (மனிஷா வின் உதட்டில் ) அதை நான் சிறு வயதில் எவ்வளவு விரும்பினேன் என்பதை பற்றி எல்லாம் பேசி இறுதியாக அவள் பச்சை சல்வாருக்கு வந்து நின்றேன்.
அவளும் அசர வில்லை .

என்னடா பெண் இவள் என்னிடம் இப்பிடி இழித்து இழித்து பேசுகிறாளே என்று எல்லாம் எனக்கு தோன்ற வில்லை!!!!அவளை ஆராய எனக்கு அன்று தோன்ற வில்லை ,எந்த ஒரு ஆணும் அதை அந்த கனத்தில் செய்ய மாட்டான்.அது தான் பாவமும் துரோகமும் உறவுகளில் பெருகி போனது.
உங்க உதட்டுல கூட மச்சம் இருக்கு இல்ல அவள் அந்த கேள்வி யை எதிர் பார்க்க வில்லை .நானும் அதை கேட்பேன் என்று எதிர் பார்க்கவில்லை .அந்த உதடுகளை முத்தம் கொடுத்து விட்டது போல் எனக்குள் இரத்தம் சூடாகி போனது.வின் வின் என்று தலை அழுத ஆரம்பித்தது.அதற்கு எல்லாம் அவள் பதில் முற்று புள்ளி வாய்த்தது.


"ஆமா அதுக்கு "


அதுக்கு ஒண்ணும் இல்ல ! " என்று இழுத்தேன்


மணலில் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து கொள்ளலாம் என்று எழுந்தேன்.அப்பொழுது பக்க வாட்டில் அவள் கை விரல்களை அங்கு வைத்து இருந்ததால் என்பது நான் அவள் கை விரல் மீது நேராக அமர்ந்தது தற்செயல் அவள் "ஏய்" என்று வலியில் கத்தினாள்.சாரி சாரி தெரியாம உட்கர்ந்துட்டேன் என்று அவள் கைகளை உரிமையுடன் எடுத்து வைத்து வலி நிவாரணம் செய்தேன்.அவள் கை நரம்புகளை எல்லாம் சரி செய்வது போல் வைத்திய பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்,
பேசி கொண்டே இருந்தோம் மணி ஒன்பது ஆகிவிட்டது என் அலாரம் அடித்ததில் தான் தெரிந்தது.


போலாமா என்றாள்.

நான் " ம்" என்றேன் .

பேசிக்கொண்டிருக்கும் போது என் கைகள் அவள் விரலை தாண்டி உச்சத்தில் எல்லை மீறி சென்று இருப்பதை அவள் உணரவில்லை என்றால் அது பொய்.அந்த நிமிடம் நான் அவளை மீறி கொண்டு நின்று இருப்பதாக உணர்ந்தேன் .

"எனக்கு எதோ போல இருக்கு "

"எனக்கும் தன் தான்" என்று என் மீது சாய முற்பட்டவளை நான் தடுத்தேன்.வேண்டாம் என்பதற்கு அல்ல .அவள் முகத்தை நேர் கொணர...அந்த மச்சம் அவள் உதடுகளின் மீது தெரிந்தது.

"நம் தானா நம் தானா" என்ன பாடல் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் இதோ இதோ இந்த கணத்தில் ஒரு பெண் ஒரு ஆண் தந்த முத்தத்தில் தன் கண்களை மூடி கொண்டாள்.பெண் ஏன் முத்தத்தின் போது கண்களை மூடி கொள்கிறாள்.அது தன் எனக்கு பெரிய ஐயமாக தோன்றியது.அப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டது அந்த உறவு உணர்வற்றது என்று...எனக்கு பல உறவுகள் முன்னுரை எழுதும் போதே முடிவுரை எழுத முற்பட்டது நான் தான்.

முதல் முதலாய்
நான் நிலை மறந்து நிலைத்து இருந்தேன்
என் மனம் திறந்து
அவளை மீட்டிக் கொண்டு இருந்தேன்
எல்லாம் மறந்து போன நிலையிலும்
அவள் கண்ணை நான் பார்க்க மறக்க வில்லை
அதில் உண்மையும் இல்லை ..மோகமும் இல்லை.......!

3 comments:

Anonymous said...

aga aga supper seri abarna sorry sowbarnikaku ku kiss adichaya illaya

karthik sankaran

Anonymous said...

சற்று குழம்பிய நிலையில் உள்ளேன் ..... எங்கு தான் போகிறது இந்த பட்டம்....

Karthik said...

@ Karthik : SSSSSSSHHHHHHHHH

@ aslam :

thats wat its arunthapattam :)