நான் ஒரு சராசரி இளைஞன் .சமூகத்தின் அத்தனை அவலத்தையும் சகித்துக்கொண்டு வாழத் தெரிந்த ஒரு மனிதன்.அத்தனை அவலங்களும் என்னை சுற்றி நடக்கும் போதும் என்னை மீறி நடக்கும் போதும் நானும் ஏதோ ஒரு விதத்தில் என் நிலை பாடுகளை இந்த உலகத்துக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் நிறுத்திக் காட்டி கொண்டு தான் இருக்கிறேன்.

சில சமயம் பணம் ,பொருளுக்கு மனிதன் தரும் மதிப்பு தன் கொள்கைக்கோ இல்லை மந்ததுக்கோ தருவதே இல்லை. ஏன் என்று பார்த்தால் அவன் அவன் தன் முகத்திரையை மூடி வைத்து கொண்டு ஒரு சுயநலமான வாழவை வாழ பழகி விட்டோம்.


எவனோ ஒருவன் திரை படத்தில் வாழும் ஸ்ரீதர் வாசுதேவன்கள் எத்தனையோ பேரை நன் பார்த்து இருக்கிறேன்.வாழ்வின் முழு சாராம்சம் என்ன என்று உணர்வதற்குள் கூட்டி கழித்து வகுத்து தன் சுற்றம் பெருத்து கோட்பாடுகள் மீறி மடிந்து போகும் மனிதர்கள்.இயல்பு வாழ்க்கை வாழ தெரிந்தும் வாழ தடுக்க பட்டு வதைக்க பட்ட மனிதர்கள்.

என் சகிப்பு தன்மையே என்னை பலவீனமாக ஆக்கி விட்டது உண்மை.லஞ்சத்தையும் ,வரம்பு மீறும் போது எனக்கும் கோபம் வருகிறது.சிக்னலில் அத்து மீறி நுழைபவன் கோபம் கொள்ள வைக்கிறான்.என் உரிமைகள் பறிக்க படும் போது கோபம் வருகிறது. திரை அரங்கில் ஏ/சி என்று டிக்கெட்டில் போட்டு விட்டு சாமர்த்தியமாக ஏ/சி ஐ பாதியில் அணைத்து விடும் போது கோபம் வருகிறது.அத்தனைக்கும் “பைசா கொடுத்தால் தான்” என்று சொல்பவன் மீது கோபம் வருகிறது.இவை அத்தனையையும் கோபத்தோடு முடிந்து விடுகிறது.அந்த கோபம் என் முகத்தில் கூட தெரிவதில்லை.
லஞ்சம் வாங்காமல் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று என்று எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு,என் தந்தையின் 34 வருட நிம்மதியான வாழ்க்கை தான் அதற்கு சான்று.ஆனால் தன் வாழ்நாளில் லஞ்சமே வாங்காத மனிதன் தன் ரீடைர்மேன்ட்(retirement)ஆகும் போது தன் ரீடைர்மேன்ட் பத்திரங்களை(Releiving) வங்கியில் செலுத்தியது லஞ்சம் கொடுத்து தான்.இது தான் நிலை .கேட்டால் என் தந்தையிடமும் பதில் இல்லை ,இந்த சமூகத்திடமும் பதில் இல்லை.நான் லஞ்சம் தர கூடாது என்று பெரிய கொள்கை எல்லாம் எடுத்த தில்லை ஆனால் லஞ்சம் உருவாகும் வேலைகளை தவிர்த்து இருக்கிறேன்.அனாலும் என்னை சுற்றி சுற்றி வரும் லஞ்சம்.

R.T.O வுக்கு லஞ்சம் தர வேண்டாம் என்று நினைத்து தான் நான் ட்ரிவிங் ஸ்கூல் முலமாக லைசென்ஸ் எடுக்க சென்றேன்.ஆனால் ட்ரிவிங் ஸ்கூல் மூலமாக சென்றால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும் என்ற உண்மை எனக்கு அப்பொழுது தான் தெரிந்தது.நான் லஞ்சம் கொடுககா விட்டால் என்ன ? என் பெயரில் அந்த ட்ரிவிங் ஸ்கூல் நபர் R.T.O வுக்கு லஞ்சம் செலுத்தி விட்டான்.

I am explicitly responsible for spoiling the system.
இந்த நிலைக்கு என்னையும் பழி சொல்ல முடியாது ,என்னை சர்ந்தவனையும் பழி சொல்ல முடியாது.திருத்தவும் முடியாது திருந்தவும் முடியாது.

சிவப்பதிகாரம் படத்தில் வருவது போல் " ஏதாவது செய்யணும் சார்!!!!"

2 comments:

Anonymous said...

இந்த உலகம் எத்தனை சே வந்தாலும் திருத்த முடியாது..
என்ன திடீர் புரட்சி... நமக்கு காதல் முக்கியம்... முதலில் எடுத்த காரியம் முடி.. பின் புரட்சி கொடி பிடி..
நானும் அதில் பங்கு கொள்வேன்...

Regards,
Vinoth Pradeep

Karthik said...

nanbargale nnaaan thiruntha ve koodatha