“என்னடா சொல்ற ?" ஆச்சர்யமாக கேட்டான் மனோஜ்
“உண்மை தான்டா நீ வேணும் னா ஹிந்து பேப்பர் எடுத்து classifieds பாரு ,உனக்கே தெரியும் "என்றான் கோபால் அனாயசமாக .
மனோஜ் அவன் பக்கத்தில் இருந்த ஹிந்து நாழிதழை புரட்டினான் .
அவன் கண்கள் நம்ப மறுத்தன .
" என்னடா இது "
“ஆமாண்டா நான் தான் சொல்றேன் இல்ல நம்ம ராம்குமார் போய்ட்டு வந்து என்கிட்டே சொன்னான் ,அவன் அங்க போனது ,அங்க அவன்கிட்ட நம்பர் வாங்கினது,அதுக்கு அப்புறம் சினிமா போனது எல்லாம் சொன்னான் .கொஞ்சம் கதை விட்ட்ருப்பான்னு வட்சுக்கோ ஆனா நிறைய உண்மை டா "
“இது எப்படி டா கேட்கணும் ,எங்க இருக்கு ?
“எல்லாம் தி நகர் மச்சி !! இதுல எதாவது ஒரு போன் நம்பர் எடுத்து எடம் கேட்டுகிட்டு போக வேண்டியது தான் .”
அவன் அந்த விளம்பரங்களை பார்த்தான் .விளம்பரங்கள் எழுத்தில் இருந்தாலும் கிளு கிளுப்பை தூண்டுவது போல் தான் இருந்தது .
“24 மணி நேரம் ,ஆண்கள் பெண்கள் கேரள ஆயுர்வேத மசாஜ் ,full relaxation ,பெண்கள் மசாஜ் சேவை உண்டு .privacy assured
மனோஜிடம் கோபால் சொல்லி இருந்தான் ,இது வெறும் மசாஜ் சென்டர் மட்டும் தான் என்றும் இதில் ஒன்றும் தவறு இல்லாததால் ,ரெய்டு எல்லாம் நடக்காது என்று.மேலும் இவர்கள் எல்லாம் நன்றாக பேசுவதால் அவர்களிடம் பேசி சரி செய்து கொண்டால் அவர்களை வெளியே அழைத்து செல்லலாம் என்றும் சொல்லி இருந்தான்.பெண்கள் அனைவரும் கேரள பெண்கள் என்பதால் அவர்களின் வடிவத்தை பற்றி கோபாலோ மனோஜோ சந்தேகம் கொண்டது இல்லை.அவர்கள் கல்லூரியில் படித்த போது அவர்களுடன் படித்த பெண்களே சாட்சி என்று நினைத்து இருக்கலாம் .
இருவரும் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் டிசைன் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்,.தினமும் காலையும் மாலையும் கம்பெனி பேருந்தில் அமர்ந்து சாலையில் செல்லும் மனிதர்களை குறைந்தது அவர்கள் நான்கு மணி நேரம் பார்த்து கொண்டிருப்பார்கள்,அவர்கள் தங்கி இருக்கும் கிண்டியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்ல குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகி விடும் .அதில் களைத்து போய் வந்து இரவு உணவருந்தி விட்டு கொஞ்சம் டி .வி பார்த்து விட்டு உறங்கி விடுவார்கள்.இந்த சக்கரம் அவர்களுக்கு களிப்பை தவிர களைப்பை தான் கொடுத்து வந்தது.அவர்கள் நண்பர்கள் எல்லாம் எதாவது ஒரு பெண்ணுடன் சத்யம் தியேட்டர் செல்வது அவர்களுக்கு ஏக்கமாக இருந்தாலும் அதை அவர்கள் பெரிய குறையாக எடுத்து கொள்ளவில்லை .ராம் குமார் என்ற அந்த அவர்கள் கல்லூரி நண்பன் வந்து அவர்களுக்கு கதை சொன்னது கொஞ்சம் அவர்கள் ஏக்கத்தை தூண்டி விட்டது.
"இந்த வாரம் போகலாம் டா !" என்றான் மனோஜ்
“இந்த வராம் வேண்டாம் நான் ஊருக்கு போறேன் அடுத்த வாரம் போகலாம் " என்றான் கோபால் .
மனோஜும் தலை ஆட்டி கொண்டான் .
சனிக்கிழமை .
"கோபால் கோபால் "
கோபால் அலுவலகத்தில் இருந்து சீகிரமாக கிளம்பிவிட்டதால் மனோஜ் அவனை தேடி கொண்டிருந்தான்.அவன் செல் போனிற்கு அழைத்து பார்த்தான் .
தொடர்பு எல்லையை தாண்டி விட்டதாக பெண் கொஞ்சினாள்.
சனிக்கிழமை .
கொஞ்ச நேரம் டி.வி பார்த்தான் ,அவனுக்கு நேரம் செல்ல வில்லை .காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் ஏதோ ஒரு தெலுங்கு டப்பிங் படம் பார்த்து கொண்டிருந்தான்.ஏதோ நினைவில் ஹிந்து பேப்பரை புரட்டினான் .அவன் கண்களில் அந்த விளம்பரங்கள் அசை ஓடியது.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் தன் பைக்கை எடுத்து கொண்டு அசோக் பில்லர் வழியாக அரங்க நாதன் பாலம் வந்து சேர்ந்தான் .வருவதற்கு முன் அந்த விளம்பரங்களில் ஒன்பதாவது விளம்பரத்தை தேர்வு செய்து அழைத்து இருந்தான்.அந்த குரல் ஒரு பெண் உடையது என்பதால் அவன் தடுமாறி விலாசம் கேட்டு வைத்து இருந்தான்.
அரங்க நாதன் பாலம் என்பது அவனுக்கு ஞாபகம் இருந்தது.அதில் இருந்து கொஞ்சம் ஏறி அவன் திநகர் சாலைக்கு வந்து சேர்ந்தான் .
மீண்டும் அழைத்தான் .
" ஹலோ "
“ஹலோ சொல்லுங்க சார்
" நான் இப்ப கூப்பிட்டு இருந்தேன் இல்ல நான் கிருஷ்ணா விலாஸ் ஹோட்டல் கிட்ட நிக்கிறேன் "
அடுத்த மூன்றாவது நொடியில் ஒரு பழைய சன்னி வண்டியில் ஒரு இளைஞன் வந்து அவன் அருகில் நின்றான் .
"கைலாஷ் சார்?? "என்று உறுதி செய்து கொண்டான் அந்த இளைஞன்
இல்லை என்பது போல் " ஆமாங்க"
"வாங்க சார் "
அந்த பெண்ணிடம் ஒரு பயத்திலோ அல்ல ஒரு தற் காப்பிற்கோ தன் பெயர் கைலாஷ் என்று சொல்லி வைத்து இருந்தான்.
வீட்டில் இருக்கும் போது இந்த நம்பரை அவன் டயல் செய்யும் முன் அவன் பல யோசனை செய்து பார்த்தான்.கோபால் ராம் குமார் சொல்லியதாக நிறைய விஷயங்கள் அவனுக்கு விளக்கி இருந்தான் .அவனுக்கு அந்த விளக்கங்கள் எல்லாம் அவன் மனதில் ஒரு வித கிறக்கத்தை உண்டாக்கி இருந்தன.அவன் அந்த நம்பரை எடுத்து செல் போனில் டயல் செய்யும் போதே அவன் உடல் உஷ்ணம் ஆவதை உணர்ந்தான்.
"ஹலோ "
"ஹலோ சொல்லுங்க சார் "
“நான் பேப்பர் ல அட்வேர்டைச்மன்ட் பார்த்தேன் "
“ஆமாம் சார் ,உங்க பேரு “
எதுக்கு பேர் எல்லாம் என்று நினைத்து கொண்டு " கைலாஷ் '
“என்ன சர்வீஸ் வேணும் சார் "
அவனுக்கு தொடர தெரியவில்லை ,தடுமாறினான் ,அவன் சூடாகி கொண்டு இருந்தான்,அடி வயிற்றில் எதோ உருளுவது போல் உணர்ந்தான்.
" ம்ம் "
அந்த பெண் எதோ மூன்று சர்வீஸ் விளக்கினாள் .அவனுக்கு மூன்றாவது சரி என்று பட்டது.
எதோ தடுமாறி யார் மசாஜ் செய்வார்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டான்
அவன் தடுமாற்றத்தை உணர்ந்து
“உங்க இஷ்டம் சார் “
அவன் குளிர்ந்து போனான்
இதோ இப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் அவன் அந்த பழைய வண்டியின் பின் தன் வண்டியை செலுத்தி கொண்டிருக்கிறான்.
வண்டி சாலையின் கடைசியில் பெரிய வாகனங்கள் உள்ளே வராமல் இருக்க தடுப்பு கம்பி போட பட்ட ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தது .
அழகை கட்ட பட்ட வீடு என்று வெளியே இருந்து பார்க்கும் போதே தெரிந்தது.
"உள்ள போங்க சார் "
மனோஜ் தனது ஐ டி கார்டு மற்றும் பர்ஸ் போன்றவற்றை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டான் .அது ஒரு பாதுகாப்பு என்று கருதினான்.
வீட்டின் உள் செல்ல செல்ல அவனுக்குள் ஒரு வித மணம் அவனை ஆட்கொண்டது.அது ஒரு வித ஆயுர்வேத எண்ணையின் மணம் போல் இருந்தது.
எம்மதமும் சம்மதம் என்பது போல் எல்லா கடவுளின் படங்களும் இருந்தது.அங்கே சுற்றி ஒரு அறையின் சுற்றளவில் எட்டு அறைகள் இருந்தன.பெரும்பாலும் எல்லா அறைகளும் மூடியே இருந்தன.ஒரு அறையில் ஒரு சில துணிகள் இருந்தன .
அந்த பெரிய ஹாலில் ஒரு டேபிள் போட பட்டு அங்கு ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்..அவள் இருக்கை கொஞ்சம் தாழ்வாக இருந்ததால் அவனால் அவள் முகத்திற்கு கீழ் பார்வையை யதார்த்தமாக செலுத்த முடியவில்லை.ஆனாலும் அவளை கொஞ்சம் அளந்து கொண்டான் .
“வெல்கம் சார் “என்று வரவேற்றாள்
"!"
“சொல்லுங்க சார் “
“நான் எப்ப கூப்பிட்டு இருந்தேனே ! கைலாஷ் " தன் பெயர் கைலாஷ் தன் என்று நிலை நிறுத்துவது போல் இருந்தது .
“ஆமாம் சார் ! உங்களுக்கு நல்ல package மசாஜ் இருக்கு சார் “
“ஓகே
" "
நீங்க பண்ணுவீங்களா ! என்று யதார்த்தமாக கேட்டான்
“இல்லை சார் நான் வெறும் reception மட்டும் தான் “
“ஒ "
கிரெடிட் கார்டுகள் பெற்று கொள்ளுவோம் என்ற அந்த பலகை அவனுக்குள் சிறிய சந்தோசத்தை உண்டாக்கியது.
“இப்பவே பெ (pay) பண்ணிருங்க சார் “
அவன் கிரெடிட் கார்டில் மனோஜ் குமார் என்று பெரியதை பொரித்து இருப்பதாய் அவன் மறந்து விட்டான் .இருந்தும் தன் கிரெடிட் கார்டை எடுத்து கொடுத்தான்.
பர்ஸ் இல்லாததால் கிரெடிட் கார்டை தன் சட்டையில் வைத்து இருந்தான் .
"1500Rs"
கை எழுத்து போட்டு விட்டு எழுந்தான் ,
“அந்த ரூமுக்குள் சார் “
அவன் கொஞ்சம் திகிலோடு உள்ளே சென்றான்
ஏ சி ஓடி கொண்டிருந்தது.அந்த குளிரை மீறி அவனுக்கு வேர்த்து கொண்டிருந்தது.அங்கே ஒரு மருத்துவ படுக்கையும் ,அதன் மீது ஒரு டர்கி துண்டும் ,ஒரு சோப்பும் இருந்தது.
அவன் வர போகும் பெண்ணுடன் பேசி அவளிடம் நட்பு கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.அவர்கள் வெறும் மசாஜ் தான் செய்ய போகிறார்கள் என்றாலும் ஒரு வித பயம் அவனுக்கு இருந்தது.
“May I come in sir “
:::::::::::::மசாஜ் தொடரும் ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

3 comments:
I haven't been to these kind of things.. but this one has given me some "tips".. But one thing "Iam not keen in those things mamu".. my policy is "bring an egg prepare an omelette.. Enjoy" Katham Katham.. just kidding.. :)
Jokes apart.. Your style has changed a bit.. but still i would rather expect a writing which not only gives suspense, but that should train and mould the youth citizens.. thats my favoutrite.. Please try to make a writing .. this is my humble request..
I dont expect a "Che" but atleast i expect a "Thambi"..
Thanks in advance.
I haven't been to these kind of things.. but this one has given me some "tips".. But one thing "Iam not keen in those things mamu".. my policy is "bring an egg prepare an omelette.. Enjoy" Katham Katham.. just kidding.. :)
Jokes apart.. Your style has changed a bit.. but still i would rather expect a writing which not only gives suspense, but that should train and mould the youth citizens.. thats my favoutrite.. Please try to make a writing .. this is my humble request..
I dont expect a "Che" but atleast i expect a "Thambi"..
Thanks in advance.
:) bring an egg and prepare an omlette ...good one vinoth..
My style i have tried to change because off late i am reading lots of tamil books and also i read some big ENGLISH BOOKS ..might be a collective influence .for the other suggestions hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
Post a Comment