இதோ நான் இங்கே வெயிலிலும் மழையிலும் இவனுடன் திரிந்து கொண்டிருக்கிறேன்.என் நிலையில் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. இப்பொழுதெல்லாம் இவன் எனக்கு இந்தியன் ஆயில் பெட்ரோல் தான் போடுகிறான்.என்னக்கு கொஞ்சம் ஒய்வு தேவை என்று நினைத்தானோ என்னவோ சில நாட்கள் என்னை சீண்டுவதே இல்லை.இவன் மனதிற்கு பிறகு இவனை அதிகம் அறிந்தவன் நானாக மட்டும் தான் இருக்க முடியும்.என்ன பெரிய பெருமை,நான் இவனை மதிக்க முற்பட்டது இல்லை.இவனுக்குள் இருக்கும் ஒரு நிலை ஒரு நாளும் அமைதி கொண்டதே இல்லை,என் நெஞ்சை போல் ஆம் நான் ஹீரோ ஹோண்டா ச்ப்லேண்டேர் ,இவனுடன் ஆறு வருடமாக இருக்கும் ஒரு ஜீவன் ,இவன் விரும்பி பெற்றதில் இவனுடன் அதிக நாள் இருந்தது நான் தான் என்பது எனக்கு பெருமை இல்லை !!!!!

இதோ இப்பொழுது மௌன்ட் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கிறோம் ,இவன் கொஞ்சம் எடை பெருகி விட்டான் அதனால் எனக்கு கொஞ்சம் வேகம் குறைகிறது.எப்பொழுதும் போல் என்னையே திட்டுகிறான்.இவனுக்கு சில நேரம் காத்திருப்பது கடினமான வேலை.அன்று ஏதோ ஒரு அபார்ட் மண்ட டுக்குள் நுழைந்த போது மணி இரவு ஒன்று .எதற்கு இந்த நேரத்தில் நுழைகிறான் என்று கொஞ்சம் கூட தட்டு பட வில்லை.அவன் அதி காலையில் வெளியே வரும்போது ஒரு பெண்ணிற்கு கை அசைத்துவிட்டு என் மீது அமர்கிறான்.என்னால் தப்பாக நினைக்க முடியவில்லை ஆனால் இவன் அற்பன் என்பது எனக்கு நன்றாக தெரியும் .

அதனால் எனக்கு நம்ப முடியவில்லை.இன்றும் இவன் வேட்டைக்கு செல்கிறான் ;என் மீது ஏறி கொண்டு,சில நேரம் இவன் நல்லவனா என்ற நினைப்பு கூட வந்திருக்கிறது.இவனுக்கு என் மீது பெண்களை ஏற்றியதில்லை என்பதில் பெருமையாம்.ஆனால் உண்மை வேறு.இவன் சில காலம் ஒரு பெண்ணை என் மீது ஏற்றி இருக்கிறான்.அந்த பெண் இப்பொழுதெல்லாம் தென் படுவதே இல்லை.ஆனால் இவன் சில நேரம் அவளை தேடி செல்வான்.எதற்கு ,எங்கே ,ஏன் என்று அவனுக்கும் தெரியாது.எனக்கு விளங்கும் ,அவனது தோல்வி என்னை ஓட்டும் வேகத்தில் புரிந்து விடும்.
என்னிடம் அழுது இருக்கிறான் ,என் மீது சிரித்து இருக்கிறான் ,என் மீது மௌனித்து இருக்கிறான்,ஆனால் என்னிடம் நடித்தது இல்லை.இவனை சுற்றி தோன்றும் உணர்ச்சிகள் எல்லாம் பொய்யாக வெளி ஆகிறதோ என்று எனக்கு தோன்றும்.என்னிடம் ஒரு நாள் அப்படி தான் சொல்லியும் இருக்கிறான் .ஆம் அவன் என்னிடம் பேசுவான் .பேசுவதற்கு ஆள் குறைந்து போன நேரங்களில் என்னிடம் பேசி இருக்கிறான்,பல நேரம் சாலைகளில் வண்டி ஓடும் போது பேசுவான் .யாருக்காகவோ ஏங்கி தவித்த பொழுதில் எல்லாம் அவன் தேடல் மிகும் போதோ ,வலியை அடக்க முடியாத போதோ பேசுவான்.சில நேரம் தன்னையும் பழி சொல்லி கொள்ளுவான்.

சில காலம் எங்கோ காணாத இடத்துக்கு அழைத்து செல்வான்.அங்கே இவன் புகைத்து .சில நண்பர்கள் என்ற மனிதர்களுடன் உரையாடி கொண்டிருப்பான் .சில நேரம் என்னை தட்டி கொடுப்பான் ,வேண்டும் என்று செய்ய மாட்டான் ,அவன் கைகள் அவனை மீறி தொட்டு பழகி விட்டன.ஒரு சில சமயம் இவனிடம் மகிழ்ச்சி கொப்பளிக்கும் ,நிலைக்காது “.

நிலைக்கும் போது என்னையும் சேர்த்து கவனிப்பான்.ஒரு சில சமயம் நான் இவனுக்காக வருந்தி இருக்கிறேன் சில அற்ப உறவுகளை தேடி செல்லும் பொழுது இவன் படும் ஆனந்தமோ ,துக்கமோ இவனுடன் நிலைப்பது இல்லை என்று உணரவே மாட்டான் .ஆனால் இவனிடம் அந்த தாக்கம் நீண்டு கொண்டு தான் போகும்.


அவனுக்கு நான் அவனுடன் இருப்பதில் பிரியம் ,என்னை போல் ஒருவன் என்று அடிக்கடி நினைத்து கொள்வான் .நானும் அப்படி தான் மனதை தேற்றி கொள்கிறேன்.

4 comments:

Vinoth Pradeep said...

Nice to have a bike like this..
BTB whats that night matter mamu???

Getting into others shoes is worse.. But u have gone bit more further.. got into a bike's shoes.. Good thought..Its hard to reflect your own feelings in a 360degree angle.. but this is a good one.. Keep it up... :)

Vinoth Pradeep said...

Nice to have a bike like this..
BTB whats that night matter mamu???

Getting into others shoes is worse.. But u have gone bit more further.. got into a bike's shoes.. Good thought..Its hard to reflect your own feelings in a 360degree angle.. but this is a good one.. Keep it up... :)

Anonymous said...

Anna,
Avan Aval Athu ...eppothu??

PK said...

This is very nice nga!
Rombha rombha azhamaana, azhagana post!
loved it

Punith