இப்பொழுதெல்லாம் ஒரு வலி தொடர்ந்து கொண்டே இருப்பது போல் இருக்கிறது.எல்லா பயணங்களும் எதாவது நினைவை தூண்டுகிறது.எல்லா பொருட்களும் என்னிடம் மன்றாடி கொண்டு அவளை ஞாபக படுத்து கிறது.அவள் எங்கோ ஒரு இடத்தில் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் இருக்கிறாள்.என்றாவது ஒரு நாள் அவளை நான் பார்ப்பேன் என்று எனக்கு தெரியும் ,ஆனால் அன்றும் அவள் என்னை கண்டுகொள்ளாமல் போய்விடுவாளா என்ன ? கண்டிப்பாக மாட்டாள் என்று நினைக்கிறேன்.அவள் என்னை விட்டு பிரிந்த நாள் என்று என்று கூட நினைவில் இல்லை .ஆனால் அந்த பிரிவு அமைந்தது என்று எனக்கு தெரியும் போது அவள் எங்கோ ஒரு தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்தாள்.கவிதை போல் பேசுகிறேன் என்று நான் நினைத்து கொண்டேன்.

நான் அந்த புகையை முடித்து விட்டு கொஞ்சம் என் வாயை அளம்பினேன் .அந்த காவல் அதிகாரி என்னிடம் எந்த ஊர் என்று கேட்டார்." "திருநெல்வேலி " என்றேன் .
"மதராஸ்ல வேலையா ?"

"ஆமாம் "என்றேன்

என்ன படிசுருக்க ?
"MBA "

"அப்படியா"

நான் அவர் அடுத்த கேள்வி கேட்கும் முன்னே விலகி வந்து விட்டேன்.எந்த கேள்விக்கும் எனக்கு பதில் சொல்ல பிடிக்கவில்லை.கேள்விகள் எல்லாம் கனமாக தோன்றுகிறது.பதில் சொல்லும் அளவுக்கு என் மனதில் நேரம் இல்லை.நான் ஏன் இப்படி முட்டாள் மாதிரி நினைக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் என் மனம் ஒரு கட்டுபாட்டுக்குள் இல்லை என்று நன்றாக தெரிகிறது.அந்த ஜன்னல் வழியே சின்ன தூறல்கள் அழகாக தெரிகிறது.அழகில் இருக்கும் வீரியம் என்னை இழுக்கிறது.,என் நண்பன் தான் படித்த கவிதை நினைவுக்கு வருகிறது
" Is there any thing sader than a lonely train on a rainy day "
உண்மை தான்,தனிமை கொடியது. தானே தேடி கொள்ளும் தனிமை என்னுடையது.நான் இதை கொடியதாக கொள்ளவில்லை.நான் கடிகாரத்தை பார்க்கிறேன்.மணி நான்கை தாண்டி இருந்தது,நான் தூங்கி இருக்கிறேன்.அது எனக்கு தெரியவில்லை .தூங்கிவிட்டேன் என்று கூட தெரியாமல் நான் இருந்து இருக்கிறேன்.எனக்கு தூக்கத்தில் நான் கொண்ட நினைவுகள் கூட நினைவில் தெளிவாக இருக்கிறது.அது சாதரண விஷயம் தான்.எனக்கு முழித்து இருக்கும் போதும் தூங்கும் போதும் ஒரே நினைவு தானே வருகிறது.எந்த நிலையில் நான் இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தினால் என்ன நிலை ஆகும்.

எனக்கு பெண் பார்க்கிறார்கள் .கிருஷ்ணா உனக்கு எப்படி பெண் வேணும் ? என்றால் எனக்கு சொல்ல தெரியவில்லை.நான் தடுமாறுகிறேன்.அன்று ஒரு கல்லூரி மாணவன் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.தனக்கு வேலை பார்க்காத பெண் தான் வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.அவனால் அப்பொழுதே எப்படி யோசிக்க முடியும் போது என்னால் ஏன் முடியவில்லை.என்னால் அவளை தாண்டி யோசிக்க முடியவில்லை.எல்லா விதத்திலும் ஒரு comparative factor வந்து விடுகிறது.அவள் தான் என் துணை என்று நினைத்து இருந்த போது நான் எதுவும் யோசித்து இல்லை,.இன்று அவள் இல்லை என்றாகி விட்ட போது என்னால் அவளை மீறி யோசிக்க முடியவில்லை.நானே என்னக்குள் ஒரு கட்டுப்பாடு போட்டு கொள்கிறேன் இன்று நினைக்கிறேன்.கட்டுபாடுகள் சில சமயம் பழைய கிருஷ்ணாவை கொண்டுவராமல் இருக்கிறது.
"ஏன்டா வித்யாவ விட்டு விட்டு வேற வேலை பாரு நீ !!!"
இன்று என் அம்மா சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது.என்னால் வருத்தப்பட முடியவில்லை.அது எப்படி முடியும் ,வித்யா என்னிடம் மீண்டும் வருவாள் என்று எனக்கு ஒரு சதவிதம் கூட நம்பிக்கை இல்லை ஆனால் என்னால் மீள முடியவில்லை.அது தான் எனக்கு நேர்ந்த சாபம்.கற்பனைக்காக அல்ல நான் அவளை தேடும் விதம் சில நேரம் எனக்கே வியப்பாக தோன்றும் .

ஒரு முறை நான் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கும் போது என் பணி நிமித்தமாக நான் பீன்யா (Peenya ) என்னும் இடத்திற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தேன்.அந்த வழியாக வரும் போது திடீர் என்று ஒரு வாசம் என்னை இழுத்தது,என் வண்டியில் செல்லும் போது அந்த வாசம் எனக்குள் சேர்ந்து விட்ட ஒரு வாசம் போல் தோன்றியது.அந்த இடத்தை கடந்து விட்ட நான் ,மறுபடியும் என் வாகனத்தை திருப்பிக்கொண்டு சென்று அந்த இடத்தில் நின்று அந்த வசதி நுகர்ந்தேன்.அது வித்யாவின் வாசம் .இது எப்படி இங்கே என்று சுற்றி பார்க்கும் போது என்னக்கு சிரிப்பு தான் வந்தது.அது " Mysore sandal soap factory "அவள் பயன்படுத்தும் பொருளின் சுத்தமான வாசம்.என்னை சில நேரம் முட்டாளாக்கி விடுகிறது.

நான் ஏன் இப்பொழுது இதை யோசித்து கொண்டிருக்கிறேன் .சில நேரம் அவளுடன் இருந்த பொழுதுகள் ஆரம்பத்தில் இருந்து நினைத்து பார்க்கும் போது சந்தோஷமாகவும் இருக்கிறது.அவள் என்ன தான் விலகி விலகி ஓடினாலும் ஒரு கட்டத்தில் என்னுடன் வெளியே வர ஆரம்பித்தாள்.அதுவும் பல நிபந்தனைகளுடன்.நான் அவளுடன் மதுரை வரை சென்று விட்டு அங்கிருந்து நான் திருநெல்வேலி செல்லலாம் என்று முடிவாகி விட்டது.அவள் வரும் முன்னவே நான் கல்லூரி இருக்கும் இடத்தில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருப்பேன்.அவள் வந்து அந்த கடைக்கு எதிரில் நின்று கொண்டிருப்பாள்.அவள் ஏறும் பேருந்தில் கூட்டம் அதிகம் இருக்காது,அவள் தனியாக ஒரு சீட்டில் போய் அமர்ந்த உடன் நான் அவள் அருகில் போய் உட்காருவேன்.அந்த ஒரு மணி நேர பயணம் ஒரு நிமிடம் போல் ஓடி பொய் விடும் .அவளிடம் அந்த வாரம் முழுவதும் பேச நினைத்து எல்லாம் பேசி முடிக்கும் போது திருமங்கலம் வந்து இருக்கும் .அவள் அங்கு இருந்து பஸ் பிடித்து மதுரை சென்று விடுவாள்,நான் அவள் சென்ற உடன் திருநெல்வேலி சென்று விடுவேன்.இது தான் எங்கள் சந்தோஷம் என்று இருந்தது.
இது நான் கல்லூரி முடிக்கும் வரை,கல்லூரி முடிந்த உடன் நான் என்ன செய்ய போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு ஒரு வேலை தேவை என்று தெரியும்.ஆனால் அது வரை எனக்கு அவளை பார்த்து கொண்டு பேசிகொண்டிருப்பது தான் உலகம் என்று தெரிந்தது.நான் நண்பர்களிடம் இருந்து விலகி ரொம்ப தூரம் வந்து இருந்தேன்.தாய் தந்தை எனக்கு பெரியதாக தெரியவில்லை.பசியும் வலியும் தோன்றியதாக ஞாபகமே இல்லை.வித்யாவின் அருகாமை எல்லாவற்றையும் மறக்க வைத்து கொண்டிருந்தது.

அவள் எழுதும் கடிதங்கள் சில நேரம் வேடிக்கையாக கூட இருக்கும் ,அவள் அதிபுத்திசாலி அல்ல என்பது அவள் எழுதும் கடிதங்களே சொல்லி விடும்.ஆனால் அவள் எழுதும் கடிதங்கள் என்னக்கு அழமாக தோன்றும்.அது அந்த விடுதிகளுக்கு இருக்கும் இடைவெளியை சிறிதாக்கி கொண்டிருந்தது.
" கிருஷ்ணா நாம் இரண்டு பெரும் கல்யாணம் பண்ண பிறகு இந்த காலேஜ் க்கு ஒரு தடவை வரணும் ,நம்ம குழந்தை உன்னை மாதிரி புத்திசாலியா இருக்கணும் ,என்ன மாதிரி அழகா இருக்கணும் என்ன சொல்ற "

இந்த கேள்விகளுக்கு என்னால் என்ன பதில் தர முடியும்.ஆனால் அவள் குழந்தைதனத்தை நினைத்து மகிழ்ந்து கொள்வேன்.ஆனால் அதுவே அவளை ஒரு கோழை ஆக்கி கொண்டிருந்தது.
வாழ்க்கை அந்த 2002 இல் நின்று இருக்க கூடாதா என்று தோன்றுகிறது,வித்யா நான் ,எங்கள் சனிக்கிழமை பயணம் ,எங்கள் கைகள் உரசும் போது நேரும் ஸ்பரிசம்,அவளை தற்செயலாக பார்ப்பது போல் பார்த்து சிரிப்பது.அது எதுவும் அதற்கு பிறகு கிடைக்கவில்லை.நான் கல்லூரி முடித்து பட்டதாரி ஆகி விட்டேன்.வித்யா இன்னும் கல்லூரியில் தன் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள்.நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாத காலங்கள்.பசியை கூட உணராமல் அவளிடம் பேச வேண்டும் என்று திரிந்த காலங்கள்.கிரெடிட் கார்டு விற்ற காலங்கள்.2500 ரூபாய் முதல் சம்பளம் வாங்கிய காலங்கள்.

4 comments:

Anonymous said...

unnoduya munnentram miga velippadayaga therigarathu....unnudaya vali unarvu ennal un ezhuthukkalal unara mudigarathu enbathey ivvaru solla thongirathu....
neraya ezhuthu nanba....
karthik sankaran

Karthik said...

nandri nanba...!
kandipaga eluthuven.I want to complete this with in 5 episodes lets see..!

Anonymous said...

Karthik,,

Indru muthal nee 'Kavingan Karthik' Yendru anbodu yelloralum alaikapaduvai. I was away from internet,,missed many gud episodes. Now right back on the track,, Eagerly waiting to know pattam yepdi arunthucchu.??

-Khader

Karthik said...

@ Kadher

U too...U wanna know it ,
U get lots of clues in the previous episodes.And BTW thanks for ur support man,it keeps me motivating
I will surely be to the point to let u know why it got broke off.after all its a imagination right :P he he he