காதல் எந்த நோக்கத்தில் தோன்றுகிறது என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை.என்ன சமயத்தில் நேருகிறது என்று தெரிந்து விட்டால் அந்த கணத்திற்கு நம் நடவடிக்கைகளை செலுத்தி விடலாம் .காதல் தோல்வியுறும் போது அதை நான் ஒரு பாவமாக கொண்டிருந்தேன் .ஆனால் உண்மையில் அந்த காதல் என்னை மனிதனாக்கி இருக்கிறது..என்னை யோசிக்க வைத்து இருக்கிறது.வாழ்கையின் பாதையை காட்டி இருக்கிறது.காதலில் தோற்று " இந்தா முடிந்து விட்டது உன் ஆட்டம் முடிந்தது,இனி உன் சவால்களை எதிர் கொள் " என்று என்னை திடீர் என்று இறக்கி விட்ட போது எனக்கு சில வழிகளை காட்டியது அந்த வலிகள் தான்.
அந்த திங்கட்கிழமை நான் கல்லூரி வாசலை மிதித்த போது நான் கிருஷ்ணாவே அல்ல ,ஒரு அழகான பெண்ணால் காதலிக்க படும் கிருஷ்ணா .சும்மாவே நான் தரையில் நடப்பது இல்லை .திமிர் கர்வம்,ஆணவம் எல்லாம் ஒரு சேர அருமையான கலவை என்னிடம் எப்பொழுதும் உண்டு.இப்பொழுது நான் பறந்து கொண்டிருந்தேன்.அவள் என்னை தாண்டி செல்கிறாள்.நான் அவளை பார்த்து கொண்டிருக்கிறேன்.அவள் அசைவுகள் என்னை ஆட்டம் போட வைக்கின்றன.அவள் வாசம் எனக்கு பழக்கமாகி போய் விட்டது.அவள் பார்வை என்னை கொஞ்ச தூண்டுகிறது.அவள் புன்னகை என்னை விலை பேசி கொண்டிருந்தது.என்ன செய்ய வேண்டும் நான் இப்பொழுது என்னக்கு பதட்டமாய் இருக்கின்றது.பதட்டம் அவள் அருகில் என்னை சேர்த்து விட்டது.
" ஹாய் "
"_""
"என்ன போன் ல அவ்வள்ளவு பேசுன ?"
"நான் சாயந்திரம் கூபிட்றேன் "
என்று வேகமாக நடந்து விட்டாள்.அன்று தான் எனக்கு புரிந்தது காதலிக்க நேரும் கட்டுபாடுகள்.அவள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்து விட்டு ஓடி விட்டாள்.அன்று முழு நாளும் அவளை நான் ஒரு நூறு தடவை பார்த்திருப்பேன்.ஏதோ ஒரு சாதனை போல் தோன்றியது.ஆனால் அந்த உணர்வை வைத்து ஒன்றும் சாதிக்க முடியவில்லை.அது தான் காதலுக்கு உள்ள கோளாறு.
அவள் என்னை மாலை போனில் அழைத்து அவள் வீட்டு கிரகாப்ரவேச்த்திற்கு எனக்கும் என் நண்பர்களுக்கும் அழைப்பு கொடுத்தாள்.என் நண்பன் வருண் மற்றும் ஹுசைன் இருவரையும் அழைத்து இருந்தாள்.நாங்கள் மூவரும் இதை பற்றி பேசி கொண்டு சனிக்கிழமை காலை கிளம்பலாம் என்று முடிவெடுத்து இருந்தோம்.நாங்கள் அவள் வீட்டுக்கு செல்வது பரவி விட்டதால்,எல்லோரும் கொஞ்சம் என்னை எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்
சனிக்கிழமை காலை நாங்கள் மூவரும் கிளம்பி அவள் வீட்டை அடையும் போது மணி 11.எனக்கு கொஞ்சம் மனம் படபடத்தது.அங்கே எல்லாம் கரை வேட்டியாக தான் தெரிந்தது.தெரு முழுவதும் டாடா சுமோ நின்று கொண்டிருந்தது.அனைத்திலும் கட்சி கொடி மாட்டப்பட்டிருந்தது.வருணும் ஹுச்சைனும் நிம்மதியாக நடந்து வருவது எனக்கு கொஞ்சம் மேலும் பட படைக்க வைத்தது.இதோ நான் உள்ளே நுழைகிறேன்,இருவரும் என்னை முதலில் நுழைய சொல்கிறார்கள்.அந்த வீடு ,வானம் வரை நீண்டு இருந்தது.அந்த வீட்டின் முகப்பில் அவர்கள் ஆடம்பரம் தெரிந்தது.அது ஒரு சாதரண பணக்காரன் குடி இருக்கும் வீடு அல்ல.செல்வம் மிஞ்சி போனவன் கட்டும்,ஒரு ஆடம்பரம் .வீட்டில் கூட்டம் வழிந்து ஓடியது.எனக்கு அவளை பார்க்க வேண்டும்.
எங்கே வித்யா ,எங்கே வித்யா.என்று தேடி கொண்டிருக்கும் போது,ஒரு பெண் என்னை பார்த்து கை அசைப்பது தெரிந்தது.அவள் என்னை நெருங்குகிறாள்.அது வித்யா .வித்யவா அது ? .அவள் அழகாக இருகிறாள் ஆனால் வித்தியாசமாக தெரிகிறாள்.ஏன்.அவள் வெட்கம் கொள்கிறாள்.ஏன் ,அவள் என்னை பார்த்து ஏதோ கேட்கிறாள்,எனக்கு எதுவும் புரியவில்லை.அவளை நான் கண் எடுக்காமல் பார்க்கிறேன்.அவள் அழகில் நான் சொக்கி கொண்டிருக்கிறேன்.அவள் ஹுச்சைனையும் வருனையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறாள்.வித்யாவிடம் இவ்வளவு பெண்மை ஒளிந்து இருக்கிறதா,? ஏன் எனக்கு முதலில் தோன்றவில்லை.
அவள் எங்கள் மூவரையும் அவள் பெற்றோரிடம் அறிமுக படுத்தி வைக்கிறாள்.எனக்கு எதுவும் பெரியதாக அவர்கள் முகம் ஞாபகம் இல்லை.அவளை பற்றி தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.எங்களை படிக்கட்டில் அழைத்து மாடிக்கு கூட்டி செல்கிறாள்.நாங்கள் நான்கு பேர் மட்டும் தான் .
"அஹ சாரி!!!!!" ( புடவை ) என்று கத்தினேன்.அவள் திடுக்கிட்டு அவள் புடவையை சரி செய்தாள் .
"இல்லடா வித்யா ரொம்ப வித்தியாசமா ஏன் இருக்கிறாள் என்று எனக்கு சந்தேகம் வந்து கொண்டே இருந்துச்சு.அதுக்கு காரணம் புடவை ,அவள் புடவை கட்டி நான் பார்த்து இருக்கேன் ஆனால் எது வித்தியாசமா இருக்கு அதான் "
"போடா போ "என்று கீழே நடந்து போனான் ,ஹுச்சைனும் கூடவே சென்றான்.அவள் என்னுடன் முதல் முறையாக தனியாக அவள் அறையில் நின்று கொண்டிருந்தாள்.
" நல்ல இருக்கா?"
அவள் நாணம் உண்மையாக இருந்தது,அவள் கன்னம் சிவந்தது,அவள் கைகளை பற்ற வேண்டும் என்று தோன்றியது.அவளிடம் என் கைகளை நீட்டினேன் ,அவள் வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்.அடுத்த அறையில் ஆட்கள் இருக்கும் சத்தம் கேட்டது,எனக்கு அவள் அழகில் அவளை பார்த்த படியே மறைந்து விடலாம் என்று தோன்றியது.அவள் நகர்ந்து விட்டாள்.அவள் கைகளை அவள் மறுப்புக்கு மீறி பிடித்தேன்.அவள் திமிறி கொண்டு ஓடி விட்டாள்.நாங்கள் உணவருந்தி விட்டு கிளம்பி விட்டோம்.கிளம்பும் போது நான் அந்த சாலையில் இருந்து அவள் வீட்டை திரும்பி பார்க்கிறேன்.ஏதோ ஒரு கண்கள் என்னை பார்ப்பது போல் இருந்தது.அவள் மாடியில் இருந்து என்னை வழி அனுப்பி கொண்டிருந்தாள்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது,எங்கள் இருவரை பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தது.நாங்கள் அதிகம் பேசி கொள்வது வீட்டில் இருக்கும் தொலை பேசியில் தான்.சிலர் வந்து என்னிடம் உபதேசம் செய்ய ஆரம்பித்து கொண்டிருந்தார்கள்.சிலர் உண்மையாக எனது மாற்றத்திற்கு வாழ்த்தினார்கள்.இப்பொழுதெல்லாம் நானும் அந்த ஜன்னல் வழியாக பார்த்து விட்டு அவள் வரும்போது வெளியே நடந்து வருகிறேன்.அவளிடம் நேராக பார்த்து பேச அவள் வைப்பு கொடுக்க வில்லை.என்னை தவிர மற்றவர்களிடம் அவள் சகஜமாக இருக்கிறாள்.என்னை பார்த்தால்,அவள் நாணி கொண்டு ஓடி விடுகிறாள்.என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
" இன்னும் கிளம்பலையா ? " என்று அநாகரிகமாக கேட்கிறேன் .
"நான் இரண்டு நாளா பைத்தியம் மாதிரி திரியுறேன் ஏன்னு கேட்டியா ? "
"நான் என்ன பண்ணினேன்?"
"அந்த ஜெகன் எனக்கு பிடிக்காது.உனக்கு என்கிட்டே பேச முடியல ஆனால் அவன் கிட்ட பேசுற ,அதுவும் எல்லோருக்கும் முன்னடி."
"கிருஷ்ணா நானும் நீயும் பேசின கதை பேசுவாங்க ,அவனோட பேசினா யாரும் கதை பேச மாட்டாங்க !!"
"நீ எப்பவும் யாரோட பேசணும்ன்னு சொல்லிகிட்டே இருப்பியா ?"
எனக்கு தூக்கம் வருகிறது.ரயில் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை.அந்த கழிவறை பக்கம் செல்கிறேன் .அந்த காவல் அதிகாரி புகை பிடித்து கொண்டிருக்கிறார்.நானும் ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தேன்.என் நினைவுகளும் என் நுரையிரல் உடன் சேர்ந்து பற்றி எரித்து கொண்டிருக்கிறேன்

0 comments:
Post a Comment