ரயில் திருச்சியை வந்தடைந்தாலும் என் மனம் மதுரையை சுற்றி கொண்டிருந்தது,திருச்சி ரயில் நிலையம் கொஞ்சம் சிறியது போல் தான் தெரிந்தது.சில ஹோட்டல் கள் வெளியே தெரிந்தன .எல்லாம் ஏதோ பேசி கொள்வது போல் இருந்தது,என்னிடம் சில மாற்றங்கள் எனக்கு தெரிந்தது.எனக்கு தூங்க வேண்டும் என்ற நினைப்பு மறந்து போய் விட்டது.ஆனாலும் எனக்கு அசதி தெரியவில்லை.என் மாற்றங்கள் என்றது என் பசி .கொஞ்சம் பழம் சாப்பிடலாம் என்று போய் ஒரு பழம் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தேன்.அதே குரல் "பயணிகள் கவனத்திற்கு " எனக்குள் சிரித்து கொண்டு ரயில் ஏறினேன் .என் பகுதியில் யாரும் ஏற வில்லை போல் இருந்தது.


நான் என் சீட்டில் போய் உட்காரும் போது அந்த இளைஞன் கொஞ்சம் சுதாரித்து கொண்டவன் போல் தன் கையை எடுத்தான் .எனக்கு மரியாதை தருகிறான் போல் என்று நான் நினைத்து கொண்டேன்.எனக்கு அவன் மரியாதை தந்து இருக்கலாம் ஆனால் என்னிடம் அவன் பேச முற்பட்டவன் போல் தோன்றியது.நான் அவனை கண்டு கொள்ளாதது போல் இருந்தேன் .ஏன் இருந்தேன் என்று யோசித்து பார்க்கிறேன் ??? அந்த அருகில் இருந்த பெண்ணிடம் நான் ஏதோ ஒரு நிலையை நிலை நிறுத்த நடித்து கொண்டிருக்கிறேன் போல் இருக்கிறது.


நான் நடிக்கும் காலம் மக்கள் என்னை நம்புகிறார்கள் ஆனால் ஏன் உண்மையை நம்ப மறுத்து விட்டது காலம் .வித்யாவும் நானும் பேச ஆரம்பித்தது அந்த மாலை பொழுதில் இருந்து தான் என்று என் மனம் சொல்லுகிறது.அவள் வேறு பொழுதை சொல்லலாம்.யார் அவளை போய் என்னை பற்றி கேட்க போகிறார்கள்,மூன்று வருடங்கள் ஆகி விட்டது,யாருக்கும் அவளை பற்றி தெரியவில்லை.அவள் இருக்கிறாள் என்னை மறந்து போய் என்று மட்டும் எனக்கு தெரியும்.


சில நேரம் அந்த மாலை பொழுது அப்படியே நின்று போய் இருக்க கூடாத என்று தோன்றுகிறது,சில நேரம் அந்த மாலை பொழுது ஏன் என்னை ஆள்கிறது என்று தோன்றுகிறது.எது எப்படியோ வித்யா என்னை பார்க்க காத்து இருந்தது சுகமாக ,கர்வமாக இருந்தது.அவளை என்னால் மற்ற பெண்களை பார்ப்பது போல் பார்க்க முடியவில்லை .மனம் தடுமாறி கொண்டு இருந்ததை என்னால் இன்று உணர்வதை போல் அன்றும் உணர முடிந்தது.ஆனால் அன்று என்னக்கு தடுமாற்றம் சுகமாக இருந்தது.இன்று அது வலிக்கிறது.


" சாரி லேட் ஆயிடுச்சு "

" அதனால என்ன "

அவள் தமிழ் அழகாய் இருந்தது அந்த தமிழ் கொஞ்சம் அவள் ஊரை பற்றி சொல்லியது.அவள் குரல் இனிமையாக இல்லை ஆனால் எனக்கு இனிமையான குரல் பிடிக்காது என்று இவளுக்கு தெரியுமோ என்று நினைத்தேன்.அவள் குரலும் என்னை முதலில் கவர்ந்தது.

" உன் செயின் "

" தேங்க்ஸ் ,அப்புறம் என்ன சொல்றாங்க உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் நீங்க இப்ப பறந்து கிட்டு இருக்கீங்க போல

"அப்படி எல்லாம் இல்ல ,கோம்பெடேசின்(Competetion ) ல நான் வின் பண்ணது சந்தோஷம் ஆனால் என்ன பண்றது நமக்கு வின் பண்றது சகஜம் !!!" என்று சிரித்தேன் அவள் என்னை பார்த்து " நான் தருகிறேன் உனக்கு மறக்க முடியாத தோல்வி " என்று சொல்வது போல் எனக்கு தோன்றவில்லை .

அவள் கண்கள் அவசரமாய் இருப்பதாய் எனக்கு உணர்த்தியது.நானும் அவளை கிளம்பலாம் என்று சொல்வது போல் நடந்தேன்.என் உடன் நடந்தாள் இந்த முறை என்னால் அவளை என்னால் நேராக பார்க்க முடியவில்லை ஆனால் அவள் வாசம் என்னை மயக்கி கொண்டிருந்தது.நாங்கள் எதுவும் பேசி கொள்ளவில்லை அப்பொழுது என் சீனியர் நண்பர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள் .அவர்கள் என்னை வித்யாவுடன் பார்த்தால் என்னை கிழித்து விடுவார்கள் என்று தெரியும் .நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.அவளும் என்னுடன் வேகம் கொண்டாள்.எதிரே வருவது விஷால் ,சக்தி என்று அடையாளமும் கண்டு கொண்டேன்.

என் வாழ்வை புரட்டி போட்டு மாற்றிய இரு நண்பர்கள் ,இன்றும் என்னுடன் இருக்கும் நண்பர்கள்.சக்தி என்னை அவளுடன் பார்த்த உடன் என்னை கிண்டல் செய்வதற்கு உஷார் ஆகி விட்டான் .அவள் இது எல்லாம் தெரியாமல் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை அவர்களின் வார்த்தைகள் எப்படி எங்களை வாழ்வின் சில காலம் இணைத்து வைக்க போகிறது என்று.

7 comments:

Anonymous said...

hi machi.. again u have fallen in love :)... but this time i loved it.. with lots of questions the words end.. good.. expecting your next post..

Regards,
Vinoth

Anonymous said...

Hi da,

Now a days I am regularly visting your blogs. 'Arunthapattam' is very interesting. Good that again you have started ur - 'Naan aval athu' series. .. Keep it going!!

Regards
Khader Hussain

Anonymous said...

Good na...thanks for starting again...hope you will update regularly...atleast for ur readers..keep going

Karthik said...

@Vinoth.
Yeah AGAIN ,i needed a break

@ Khader Hussai

Good to see u here man,Keep visiting.I think u will be able to correlate many things.But dont do that .he he
@Aslam

Thanks da.I too noted some changes

Anonymous said...

Awaiting impatiently for the next episode!

mathi said...

Very poignant at places and genuine as well.Good one man.Am not sure of others,but you know i can picturize is so well.It's all embedeed somewhere in memory map u know :)

Karthik said...

@Bharathy
I have made it and ur feed back also taken

@Mathi
Dai pathagane...Ennale sila pergalai unmaiya poda mudiyala ,But still its past.and u can figure out the place near the service center,i hope so .En embed ayirukkathu...karana kartha atchey