"என்ன டா என்ன நடக்குது இங்க?". என்று பாய்ந்தார்கள் சக்தியும் விஷாலும் எங்கள் ஜோடி நடையை பார்த்து
ஏன் ஒண்ணும் இல்ல ?".
"இல்ல கேட்டோம் ! என்றான் சக்தி .
சக்தியும் விஷாலும் எனது முந்தய வருட மாணவர்கள்.நல்ல நண்பர்கள்.என்னுடன் நல்ல பேச கூடியவர்கள்.இந்த பேஷன் ஷோ முழுவதும் அவர்கள் மேற்பார்வையில் நடந்தது என்று கூட சொல்லலாம்.பாடல் தேர்வு செய்வதில் இருந்து யார் யார் யாருடன் நடக்க வேண்டும் என்பது வரை.ஆனால் இருவரும் எப்பொழுதும் என்னை கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள்.நானும் மறுப்புக்கு சொல்ல அதை வைத்து மறுபடியும் கச்சேரி ஆரம்பித்து விடுவார்கள்.இந்த முறை நான் கையும் களவுமாக மட்டிகொண்டது போல் உணர்ந்தேன்.வித்யா என்னுடன் எதுவும் அறியாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.அவள் நடையை ரசிக்கவா இல்லை இவர்கள் வரவை நினைத்து பயபடவா என்று தெரியவில்லை.ஆனால் என மனம் பட பட வென்று அடித்து கொண்டிருந்தது.அதற்கு காரணம் முதல் முறையாக ஒரு பெண்ணை பெண்ணாக நினைத்து ரசித்து கொண்டிருப்பதால்.எனக்கும் அந்த பெண்ணின் உள்ளுர அழகு என்னை கவ்வி கொண்டிருந்தது நன்றாக தெரிந்தது.
" வந்துடனுங்க " என்று நினைத்து கொண்டேன் .
"இல்ல பேஷன் ஷோ தான் முடிஞ்சு போட்சே அப்புறம் என்ன பா இரண்டு பேரும் ?" என்று கேட்டான் சக்தி.எனக்கு தோன்றவில்லை
அவன் கேட்ட கேள்விக்கு பதில் .ஆமாம் பேஷன் ஷோ தான் முடிந்து விட்டதே அப்புறம் என்ன ! என்று ஏன் நான் நினைக்க வில்லை.நினைக்க வில்லை அவளவு தான் என்று விட முடியாது.எனில் என எண்ணம் முழுவது அவளது அமைதியான பார்வை படர்ந்து இருந்தது.என வழி முழுவதும் அவள் வாசம் என்னை இழுத்து கொண்டு வந்தது.
"இல்ல சும்மா தான் !!" என்றேன் நான்
.அவள் கொஞ்சம் திணறி விட்டாள் அந்த கேள்வியில் .அவள் கண்கள் தடுமாற்றம் அடைவதை காட்டியது.
" என்ன இங்க ஒரு பேஷன் ஷோ போடுறியா நீ ?".
"இல்ல மச்சி"என்றேன்
" என்ன இல்ல மச்சி ஒண்ணும் இல்லாமயா நீங்க இரண்டு பேரும் ஒன்னா நடந்து வருவீங்க ?".
"இல்ல சக்தி அப்படி எல்லாம் இல்ல !!!" என்று இழித்தேன் .அவள் என்ன புரிந்து கொண்டாள் என்று தெரியவில்லை ஆனால் அந்த மைய படுத்துதல் அவளை நிறைய பாதித்து விட்டது.அவள் அமைதியாக நடந்து சென்று விட்டாள்.
அவள் செல்வதை பார்த்து கொண்டே அவர்களிடம் மன்றாடுவது போல் கேட்டேன்
" ஏன்டா இப்பிடி ",அவள் செல்வதை பார்த்து கொண்டே அவர்களிடம் மன்றாடுவது போல் கேட்டேன்
" டேய் பாரு இவன் வருத்த படுறான் பாரு " என்று ஆரம்பித்து விட்டார்கள்,அவள் சென்று விட்டாள் ,அவள் நடந்து செல்வதை நான் பார்த்து கொண்டிருக்கிறேன்.
அந்த முறை அவள் நடந்து போவது போல் பல முறை என்னை விட்டு சென்று இருக்கிறாள் .ஆனால் அதே வேகத்தில் அவள் திரும்பியும் வந்து இருக்கிறாள்.அந்த வேகம் மிதமான வேகம் என்றாலும் அந்த வேகத்தை நான் என்றுமே ரசித்து இருக்கிறேன்.பல வருடம் கழித்து நானும் அவளும் ஒன்றாக இருந்த போது நான் பேசி கொண்டிருக்கும் போது
அவள் என்னை விட்டு சென்ற போது என மனம் இருந்த நிலையில் தான் என மனம் இன்றும் இருக்கிறது.அவள் இன்று சென்றால் நாளை அவள் என்னை பார்க்க முடியாது என்ற அந்த நிலை கொடியது.எனக்கு அது நேர்ந்தது
" கிருஷ்ணா நான் கிளம்புறேன் ?".
"அதுக்குள்ளே எதுக்கு மணி எப்ப தானா 5.30".
"இல்ல கிளம்பனும் "
"என்ன வித்யா இது நாளையோட காலேஜ் முடியுது உன்னை என்னால எப்படி பார்க்க முடியும் ,நீ வேற போன் பண்ண கொடதுன்னு சொல்லிட்ட .என கூட கொஞ்சம் நேரம் இருக்க கூடாதா ? கொஞ்சம் நேரம் ப்ளீஸ் ! "
அவள் நான் பேசுவதை கேட்கவில்லை .நான் Submissive ஆனது அங்கே தான் பார்த்தேன் கொஞ்சம் அவமானமாக இருந்தது.இவ்வளவு நாள் காலையில் விழிக்கும் போது வித்யாவை பார்க்க போகிறோம் என்ற நினைப்பு இருக்கும் ஆனால் மூன்று வருடம் முன்பு அந்த MBA காலேஜ் இல் நான் காலையில் விழிக்கும் போது இனிமேல் வித்யாவை பார்க்க முடியாது என்று என நினைவு சொன்னாலும் நான் அந்த நிலைக்கு தயாராக வில்லை.
எனக்கு வலித்தது.கண்ணீர் வந்தது ,தொண்டை கட்டி கொண்டு வந்தது ,
மனம் தேடி அலைந்தது.அவள் இல்லை ,அவள் தான் வர மாட்டாளே என்று எனக்கு புரியவில்லை.
பாரதி பாடியது நினைவில் வந்தது அந்த காலேஜ் படிக்கட்டில் அமர்ந்து இருக்கும் போது
"மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உனை போலவே பாவை தெரியுதடி "
ஆனால் அங்கு அவள் இல்லை ,அன்று முதல் அவள் இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

4 comments:
want more romance with sowbarnika :)
karthik sankaran
deiiiiiiiiiii
ethu ellam over a h theriala
அருமையான கடைசி வார்த்தை நண்பா... பாரதியை நான் பல நேரம் சபித்து, பல நேரம் ரசிப்பேன் ... இன்று இரண்டாவது நேரம் :)
bharathiyai en sabikirai nee ,,,,:(
thats bad
Post a Comment