"தம்பிரான் பிள்ளை பேரனாடே நீ ! ஏன் டே இப்படி முடிய வளர்த்துக்கிட்டு திரியுத ?"

அடிக்கடி நெல்லை பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் முதலாளி குருவிடம் கேட்பது உண்டு.தன் தாத்தாவிற்கு இருக்கும் மரியாதையை என்று அவன் என்றுமே நினைத்து இல்லை.அது அந்த காலம்.இப்பொழுது அவன் அந்த மனிதனை நினைத்து பார்க்கிறான்.அந்த மனிதன் வாழ்ந்த காலத்தில் அவன் நினைவுகளும் அலை பாய்ந்ததை நினைத்து பெருமை கொள்வான் !!!
" யல நீ என்ன எப்ப பார்த்தாலும் கொசமுட்டிகிட்டே வாற "

இல்ல தாத்தா ! வயித்த கலக்குது,

வயித்த கலக்குன கொல்லைக்கு போவேன்டியது தான! இங்க உக்காந்து என்ன பண்ணுத ,இருக்கிற வனுங்களையும் தூங்க விடாம ?போல அந்தலா !!!அந்த ஒரு அதட்டல் போதும் வாசல் முதல் புற வாசல் வரை எதிரொலிக்கும் .

தம்பிரான் தோழன் பிள்ளை ,பெயர் சொல்லி விடும் அவர் சிவ பக்தியை !! பணகுடி கோயிலில் உள்ள ராமலிங்க ஸ்வாமிகள் காலையில் தம்பிரான் பிள்ளையின் திருவாசகத்தில் தான் துயில் முழிப்பார்.இது உண்மை,எழுபது வருடமாக நடந்த உண்மை.அகன்ற நெற்றியில் திருநீரை பூசிக்கொண்டு வெறும் உடம்பில் வெள்ளை துண்டை போர்த்தி கொண்டு அவர் பிள்ளையார் தெருவில் இருந்து மேல தெரு வழியாக காலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் அந்த ஊரே மரியாதையாக பார்ப்பது குருவுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

சில பேருக்கு தான் மனிதர்களிடம் மரியாதையை பெறும் வரம் இருக்கும்.தம்பிரான் பிள்ளை ஓடிய பாதைகள் குறைவு தான் ஆனால் அவரிடம் ஒரு மிடுக்கு எப்பொழுதும் இருந்தது,அது அவரை பெரிய மனிதராக ஆக்கி இருந்தது.

சிவகுரு பஸ் பிடித்து திருநெல்வேலி வந்து சேர்ந்து இருந்தான்.அவன் அம்மா கங்கா அவனிடம் பல கதைகளை அவன் வந்ததும் வராததுமாக சொல்லிகொண்டிருந்தாள் .அவன் அதை சில நேரம் கேட்டான் ,சில நேரம் கேட்கவில்லை.அதற்கெல்லாம் அவள் அசரவில்லை.அவன் குளித்து விட்டு வெளியே வரும் வரை அம்மா பேசி கொண்டே இருந்தாள்

" இந்த சம்முகம் இருக்கமுள்ளடே அவன் என்ன செஞ்சான் தெரியுமா !
அப்பாகிட்ட வந்து உங்க பெரியாப்பவ பத்தி புரணி பேச ஆரம்பிட்சுட்டான்"

ஹ்ம்ம்

அப்பா இதற்கு சம்பந்தம் இல்லாமல்

" குரு என்ன ஆச்சு அப்பரைசல் "

நல்ல போட்சு அப்பா

தன் தந்தை தன் அலைவரிசையில் இருப்பது அவனுக்கு எப்பொழுதும் வசதி தான்.

அம்மா நான் போய் அனந்த பார்த்துட்டு வந்துடுறேன்

பாருங்க வந்ததும் சிகரட் குடிக்க கிளம்பிட்டான்

குரு லுங்கியை மடித்து கட்டி கொண்டு கிளம்பினான்.திருநெல்வேலி மாறவே இல்லை.அங்கு வளர்ச்சி எல்லாம் புரோட்டா கடையில் தான் !! பல கடைகளில் பச்சை விளக்கு மாட்ட பட்டு புரோட்டா கடையாக மாறி இருந்தது,அது தான் அங்கு வளர்ச்சி,அங்கு Economic Growth

நெல்லை மாறாது ஆனால் அந்த மாறாத தன்மையும் அதற்கு அழகு தான்.அந்த இளமை அதில் காக்க பட்டு இருக்கும்.நெல்லையில் இருந்து வந்தவனுக்கு பல விஷயங்கள் ஒற்றுமை இருக்கும் ஒன்று புரோட்டா இரண்டு சினிமா மூன்று தாம்பிரபரணி நான்கு தமிழ்.இதில் இருந்து அவன் நெல்லையின் எந்த பகுதியில் எந்த இடத்தில் இருக்கிறன் என்று மைய படுத்திவிடலாம்.அது அந்த ஊர் மக்களின் அடையாளம்.சிலருக்கு பெருமை
குருவுக்கு அவை ஒரு ஆனந்தம்.

" யல எப்ப வந்த ?"

இன்னிக்கி தான்

சிகரட் வாங்கி கொடுறே

குரு தன் நண்பன் ஆனந்திற்கும் அவனுக்கும் சிகரட் பற்ற வைத்தான்.அந்த உரிமைஅவன் ஆனந்த் போன்ற ஊர்கார நண்பர்களிடம் இருந்து மட்டும் தான் எதிர்பார்ப்பான் .

என்னடே விஷயம் திடீர்னு வந்துருக்க

ஒண்ணும் இல்ல ஊருக்கு போய்ட்டு வரலாம்ன்னு தான் !!

பணகுடிக்கா ?

ஆமாம் ல

சரி நீ என்ன பண்ணுத இங்க ?

ஒண்ணும் இல்ல மக்கா!! நம்ம ராசு அண்ணே கடையில நிக்கேன் பாத்துக்கோ !! எதோ போகுது !!

ஏன் டே இப்படி பண்ணுத ! எதாவது வேலைய வாங்கி கொடுத்தாலும் வேண்டங்கயமே ஏன் டே ?

அவன் சிரித்து கொண்டே இருந்தான்.அவனும் சிவகுருவும் ஆடாத ஆட்டம் இல்லை.பள்ளி நாட்களில் இருவரும் ஒரு கூட்டத்தை சேர்த்து கொண்டு திரிவது ஒரு வழக்கம்.அவர்கள் படித்த பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டில் தான் இருவரும் முதன் முதலில் பீடி பற்ற வைத்தார்கள்.முதன் முதலில் இருவரும் திருட்டு சினிமா செல்ல ஆரம்பித்ததும் அங்கு இருந்து தான்.கலைவாணி அரங்கிற்கு செல்ல ஆரம்பித்தார்கள்.வீட்டிற்கு தெரியாமல் புரோட்டா சாப்பிட ஆரம்பித்தார்கள்.ஒரு கூட்டமாய் சேர்ந்து கொண்டு பலான புத்தகம் வாங்க நெல்லை ரயில் ஸ்டேஷன் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு அடியில் உள்ள பழைய புத்தக கடையில் சென்றவர்கள்.

எத்தனையோ முறை பள்ளியை விட்டு நீக்கி விடுவோம் என்று நிர்வாகத்தால் கண்டிக்க பட்டவர்கள்.ஆனால் என்று ஆனந்த் வேலை இல்லாமல் அங்கேயே தங்கி விட்டான்.

யல ரோஸ் கல்யாணத்துக்கு போனயா???
ரோஸ் அவர்களுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவி.அந்த காலத்தில் அவள் தான் அவர்களுக்கு அழகி.அவளை துரத்தி துரத்தி எரிச்சல் படுத்துவார்கள்.ஒருமுறை அவர்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது ஒரு தமிழ் ஆசிரியை அவர்கள் எல்லோரையும் ஒரு செய்யுள் ஒப்பிக்குமாறு சொல்லி இருந்தார்கள்.அந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் அன்று ஆசிரியையின் அறைக்கு வெளியே நின்று கொண்டு படித்து கொண்டிருந்தார்கள்.

"யல குரு நான் ஒன்னு சொல்லுதேன் ,யார் கிட்டயும் சொல்லாதே சரியா ?"
"சொல்லு பாப்போம் "

"அந்த ஹீல்டா மிஸ்சுக்கு பின்னாடி ஒரு ஜன்னல் இருக்கு பாத்தியா அங்க இருந்து பார்த்தேன்னா என்ன தெரியும் "

குரு ஒரு நிமிடம் திக்கு முக்கடி போய் விட்டான் .அந்த அறை முதல் மடியில் இருந்தது.அது சரியாக பெண்கள் toilet க்கு நேர் மேலே இருந்தது .
நம்ம போய் படிக்கிற மாதிரி அந்த பக்கம் போய் நின்னுக்குவோம் ,அப்படியே பாக்கலாம் டா

குருவும் தலை ஆட்டினான்ஒரு கூட்டமாக பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் எல்லாம் எழுந்து சென்றார்கள்.
யல வா !!! எல்லா அக்காமார்களும் அங்க தான் போறாங்க ! ரோஸ் ஏ பாக்கறதுக்கு முன்னாடி இத பார்ப்போம் !!!
இவர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்த முத்துவையும் வேறு வழி இல்லாமல் கூட்டு சேர்த்து கொண்டார்கள்.அந்த ஹீல்டா மிஸ்ஸை தாண்டி அந்த இடை படும் தூரத்திற்கு அவர்கள் மெதுவாக படிப்பது போலவே நகர்ந்து கொண்டிருந்தார்கள்.அதுதான் அவர்கள் வாழ்வில் பார்த்த திவ்ய தரிசனமும் ,சாபமும்.

4 comments:

Anonymous said...

Anne....enna ne...overa Nella Thamizh vilayadathu...enna maathiri Madurai karangeluku konjam kastama thaan irukkum pola...

Vinoth Pradeep said...

ahaha.. nice post dude.. i loved it.. but again one request try to speed up the screenplay..:)

On seeing ur post, i have planned for a nellai.. (promise)... u did that trick.. ;)

If possible join me after May 25th for the nellai trip

Vinoth Pradeep said...

even my wife saw this post and now she is dreaming for that parotta man... u made us dream again :)

Karthik said...

nanba,this time I think this will be slow.but it will be interesting when u get involved.i can assure u.this needs time and I dont write like the previous one where i dont remember thinking of a second,it was spontaneous,
this time i wanted to make a thought given work and well structured work...:0
i am there in nellai for may 7 days but from second week machi..