May 3, 2008

தூக்கம்

நான் சில கவிதைகளை படித்தேன்
எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது
ஆனால் நான் தூங்கி இருக்கிறேன்
என் கைகளை நன்றாக விசிறி பார்க்கிறேன்
எனக்கு இன்னும் களைப்பு தீரவில்லை
ஆனால் ஒரு விழிப்பு என்னை இன்னும் உறங்க சொல்லுகிறது
தூக்கம் நன்றாக இருக்கிறது ,
தூக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாதவரை
என் மேல் வாய் உலர்ந்து போய் இருக்கிறது
கொஞ்சம் நேரம் ஆகும் நான் விழிப்பதற்கு!!!!
அதுவரை கவிதைகள் கூட காத்திருக்காது.

0 comments: