உலகத்தில் உள்ள கஷ்டமான காரியங்களில் ஒன்று அழுது கொண்டு இருக்கும் பெண்ணை அருகில் இருந்து பார்ப்பது.கண்டிப்பாக ஆணின் வார்த்தைகள் அந்த கண்ணீரை அகற்ற முடியாது.எனக்கும் அது நன்றாக தெரிந்து இருந்தது.ஆனாலும் எனக்கு கஷ்டமாக இருந்தது.

எதுக்கு அழறீங்க ? என்று கேட்டு விடலாமா என்று நினைத்தேன்.ஆனால் கேட்கவில்லை.ஒரு வகையில் அவள் என்னிடம் நான் கேட்க வேண்டும் என்று தான் அழுகிறாளோ என்று கூட தோன்றியது.எதற்கு அழுது இருப்பாள் அவள் என்று யோசிக்க எனக்கு விருப்பம் இல்லை.ஆனால் அவள் என்னை ஈர்க்கிறாள் .அது நன்றாக தெரிந்தது.அவள் கண்களின் மீது மோகம் ஏற்பட்டு கொண்டிருந்தது.அவளும் நான் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டு நிற்கிறாள்.அவளும் தன் செல்போனில் பேசி முடித்து விட்டாள் .நானும் முடித்து விட்டேன்.ஆனாலும் இருவரும் இரண்டு வாசலில் நின்று கொண்டு இருக்கிறோம் .

என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.எனக்கு ஒரு பெண்ணின் மீது காதல் எல்லாம் வராது என்று தெரியும்.ஆனால் அது ஒரு கவர்ச்சி.எவனோ சொன்னது போல் அழகான பெண்களை பார்க்கும் போதெல்லாம் காதல் வரும் ,யார் சொன்னார் காதல் ஒரு முறை தான் வரும் என்று ? சரியாக தான் சொல்லி இருக்கிறான்,

ரயில் பயணங்களில் இது மாதிரியான ஒரு அசௌகரியமான இன்பங்கள் நேர்வது எனக்கு புதிது.என் வாழ்க்கையில் தனிமையான பயணங்கள் நேர்ந்து இருக்கின்றன ஆனால் இதுவும் ஒரு தனிமையான பயணம் என்று எடுத்து கொள்ள முடியவில்லை.என்னை யாரோ கவனிப்பது போல் இருந்தது.அவள் மல்லிகை பூ வாசம் அந்த வாசல் அருகில் அடிக்கும் காற்றால் கொஞ்சம் வேகமாக என்னை வந்து சேர்ந்து கொண்டிருந்தது.அவளது கண்ணீர் தொடர்ந்து கொண்டிருந்தது.ஆனால் அதன் வேகம் கொஞ்சம் குறைந்து இருந்தது.அது கொஞ்சம் நிம்மதியை தந்தது.

எனக்கு அவளை பார்த்து பேசி பழக வேண்டும் என்று தோன்றவில்லை.என்னால் அவளை என் ஏக்கங்களில் எந்த மூலையிலும் அவளை சேர்த்து வைத்து பார்க்க முடியவில்லை.ஆனால் அந்த கள்ளம் இல்ல கண்கள் எதோ என்னிடம் பேசிகொண்டிருந்தது.அது எனக்கு புதியதாக இருந்தது.நானும் அந்த உரையாடலில் பங்கு கொண்டிருந்தேன் என்பது தான் எனக்கு வித்தியாசமாக பட்டது.

"எதுக்கு அழறீங்க ? கேட்டு விட்டேன் நான்.'

"ம்ம் !!!!??!!!!'

"இல்ல சொல்ல வேண்டாம்னா ஓகே '
"அப்படி இல்ல வீட்ல திட்டுனாங்க ,அது தவிர என் ப்ரெண்டு வேற திட்டினான்
"எதுக்கு "
"டிக்கெட் தொலைத்ததுக்கு "
"ம்ம் "
"ரொம்ப தேங்க்ஸ் .நான் அப்ப சொன்னனா இல்லையான்னு தெரியல ? ஆனால் நாளைக்கு அண்ணாவோட கல்யாணம் நான் இங்க இந்த கம்பெனிய நம்பி இப்படி சுத்திக்கிட்டு இருக்கேன் , "

"அவள் ரொம்ப ஸெல்ப் சென்ட்ரிக் ஆக தெரிந்தாள். "

"நீங்க தேங்க்ஸ் சொல்லல !!! பட் டோன்ட் மேன்ஷன் இட் . "

அவள் என்னிடம் பேச வேண்டும் என்று அங்கு நின்று கொண்டிருந்தாள்.
அவள் கதையை மெதுவாக ஆரம்பித்தாள்.அவள் தஞ்சாவூர் என்றும் ,அவளுக்கு பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவளுக்கு அது பிடிக்க வில்லை என்றும் சொன்னாள்.பெற்றோருடன் பெங்களூரில் தன் படிப்புக்காக தங்கி இருக்கிறார்கள் என்று கூறினாள்.நானும் இடையில் ஏன் எப்படி எதற்கு என்று எல்லாம் கேட்டு வைத்தேன்.
அவளும் நான் உன்னிப்பாக கவனிக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தாள்.நான் அவளை ரசித்து கொண்டிருந்தேன்.அந்த பெண்ணிடம் எனக்கு மோகம் வர வில்லை.அந்த பெண்ணை எனக்கு அடைய வேண்டும் என்றோ இல்லை வளைத்து போட வேண்டும் என்றோ எனக்கு தோன்றவே இல்லை.ஆனால் அவள் என்னை வெகுவாக கவர்ந்து இருந்தாள்.அவளை எனக்கு பிடித்து இருந்தது,
மணி இரண்டை தாண்டி இருந்தது.ஆனாலும் நாங்கள் பேசிகொண்டே இருந்தோம்.அவள் நண்பர்கள் இடையில் எழுந்து வந்து கிண்டல் எல்லாம் செய்து விட்டு சென்றார்கள்,ஆனாலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
" உங்களுக்கு என்ன பிடிக்கும் "
"எனக்கு சந்தோசம் தர்றது எல்லாமே எனக்கு பிடிக்கும் " என்றேன்

" நீங்க ரொம்ப ஸெல்ப் சென்ட்ரிக் " என்று ஒரு போடு போட்டாள் .நான் திணறி விட்டேன்.சத்தமாக சிரித்தேன்.இந்த பெண் என்னடா என்று கூட தோன்றியது.

அந்த காற்றில் அவள் ஆடைகள் கொஞ்சம் அசைந்து என் பார்வையை அவள் கண்களில் இருந்து திருப்பியது.அதை புரிந்து கொண்டவளாக ஆடையை சரி செய்து கொண்டே என் கண்களை பார்த்தாள்.

எங்கள் உரையாடல் சினிமாவில் இருந்து ,பெண்களை நோக்கி பாய்ந்தது.
"உங்களுக்கு கேர்ள் பிரிஎண்ட்ஸ் இருக்காங்களா ? "

"ம்ம் இருந்தாங்க இப்ப இல்ல !!! ஐ அம் சிங்கள் நொவ்(I am single now ) "
"ஒ "
"உங்களுக்கு "

"இல்ல எனக்கு அதுல எனக்கு பெரிய இஷ்டம் இல்ல. "
"அதுல யாருக்கும் பெரிய இஷ்டம் வந்து பண்றது இல்ல ,அது ஒரு கட்டாயம் அவ்வளவு தான் .அதை இஷ்டம் ஆக்கறது நம் அனுபவங்கள் அவ்வளவு தான். "
"எனக்கு இது எல்லாம் தெரியாது. "

"ம்ம் "
"லவ் பண்ணா என்ன கிடைக்கும் ,என் கூட இருக்கிறவங்க எல்லோரும் லவ் பண்றாங்க ,யாரும் என்னை மாதிரி சந்தோஷமா இல்ல. "

"ஒரு சின்ன விஷயத்துக்கு கூட சண்டை போட்டுக்குவாங்க .உங்க கிட்ட சொன்னா என்ன!!! சத்யா அவள் லவ்வருக்கு கிஸ் கொடுக்குறதில சண்டை போட்டுகிட்டா !! "
"ஆமா கிஸ் ஒரு அழகான விஷயம் ' என்று என் சார்பு வாதத்தை எடுத்து வைத்தேன். "
"ம்ம் " என்று என்னை ஒரு சந்தேக கண்ணோடு பார்த்தாள் .
"நான் கொஞ்சம் தைரியமாக நீ யாரையாவது கிஸ் பண்ணிருக்கியா ? "

"ம்ம் இல்ல !!! ஆனால் எனக்கு கிஸ் ரொம்ப பிடிக்கும் '

அவள் யதார்த்தம் என்னை திணற வைத்து கொண்டிருந்தது.அவள் ஒரு மோசமான பெண்ணாக தெரியவில்லை.ஆனால் அவள் விருப்பம் உண்மை என்றே எனக்கு பட்டது.
எனக்கு கொஞ்சம் தூக்கம் வருவது போல் நினைத்து கொண்டாள்.என் அருகில் வந்து நின்று கொண்டிருந்தாள்.அவள் என்னிடம் கொஞ்சம் நிதானமாகவே பேசி கொண்டிருந்தாள்.சிலர் நாங்கள் பேசி கொண்டிருந்ததை பார்த்து கொண்டு தூங்க சென்றார்கள்.
எங்கள் பேச்சு கொஞ்சம் அன்யோன்யமாக ஆனது.உரையாடல் என்னும் அந்த முத்தத்தை சார்ந்தே இருந்தது.கிளம்ப நேரம் வந்து விட்டது என்று தோன்றியது.அவளுக்கு முத்தம் ஏன் பிடிக்கும் என்று விளக்கினாள். எனக்கு கொஞ்சம் ரத்தம் சூடாகியது .அந்த காரணங்கள் சினிமா சம்பந்த பட்டதாகவே இருந்தது.
உங்களோட பேசி கொண்டே இருந்தால் நல்ல நேரம் போகுது ....யு ஆர் எ குட் லிசனர்(Listener) !!
"தேங்க்ஸ் '

"நீங்க நல்ல பேசறீங்க அண்ட் உங்க கம்பனி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு,யு கெப்ட் மீ வார்ம்(You kept me warm ) "
"ம்ம் '

"சரி கிளம்பலாமா "
"ம்ம் "என்றாள்
நான் அந்த கதவில் இருந்து விலகி அவளை தாண்ட முற்பட்டேன் .அவள் ஏன் கைகளை பிடித்தாள்.அவள் மீது இருந்த அபிப்ராயங்கள் தவிடு போடி ஆகி விடுமோ என்று ஒரு நிமிடம் யோசித்தேன் .அவள் பிடியில் என்னை அவள் பக்கம் இழுத்தாள்.
"என்ன ?'
"I want to Kiss you Can I ? Can I ?"

"வாட் "

"Yeah i mean it ? "
எனக்கு வேறு வழி தெரியவில்லை .எனக்கு அது எத்தனாவது முத்தம் என்று கணக்கு தெரியவில்லை .ஆனால் அது அவளுக்கு முதல் என்று என்னக்கு நன்றாக தெரிந்தது.அந்த முதல் முத்தம் தருபவன் நான் என்று ஏன் தேர்ந்து எடுத்தாள். தெரியவில்லை.
காலையில் எழுந்து அவளிடம் செல்போன் நம்பர் வங்கி கொள்ளலாம் என்று நினைத்தேன்.தூங்கி விட்டோம் ,அவரவர் படுக்கையில் .
காலை பெங்களூர் காண்டோமேன்டில் நான் இறங்க வேண்டும் .எழுந்து பார்த்தேன்.அவள் இருக்கையில் இல்லை.அவள் நண்பர்களும் இல்லை.தேடி பார்த்தேன்.இல்லை .கே ஆர் புறம் ஸ்டேஷனில் இறங்கி இருக்க வேண்டும் .
கண்டோன்மென்ட் ஸ்டேஷனில் சிரித்து கொண்டே இறங்கினேன்.யோசித்து பார்த்தேன் அவளிடம் நான் பெயரே கேட்கவில்லை அவளும் கேட்கவில்லை.ஆட்டோவில் ஏறி அமர்ந்து ஆனந்த விகடனை தேடினேன் .ரயிலிலே விட்டு விட்டேன் .சில விஷயங்கள் நேர வேண்டும் என்று இருக்கிறது.நேர்ந்து விட்டது.

4 comments:

Anonymous said...

konjam cinema script maathiri irukku...but suvarasyama irukku...i love it...

nijathil ippadi nadakkatha endru neraya thadava yosichiruken...Railil parkira ponnu kitta manasa pari kudukrathu yaarukum puthusu illa...aana muthal santhippu muthathathil mudivathu...yathartham illai...

kandippa..antha ponna thedi hero Bangalore veethila sutha maataru nu nenaikiren...

Thanjavur ponnu nu solli...kiss varaikum kondu poitinga..athaan manasu kastama irukku...engha ooru ponnunga antha alavuku thaiyiriyam irukathu...

Waiting for more updates...

Karthik said...

Konjam cinema script mathiri erukku !!!! Naan ethuvarai cinema script padithathu ellai...but i take it as a compliment thanks

ethu oru unmai sambavam endru sonnal svarasayam kettu poividum athu thangalukku theriyum endru theriyum....
thanjavur pengalukku thairiyam kidayathu endra karuthai etru kolla matten...avalum pen thane???/
kiss kodukka thairiyam vendam aasai vendum

Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Dismiss Idle Downloads Using NZB Downloads You Can Quickly Find High Quality Movies, PC Games, MP3s, Applications & Download Them at Electric Rates

[URL=http://www.nzbsrus.com][B]NZB Search[/B][/URL]

Anonymous said...

Infatuation casinos? weigh this environmental [url=http://www.realcazinoz.com]casino[/url] advisor and proceed mad up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] orientate at http://freecasinogames2010.webs.com and overwhelm outspoken spondulix !
another obscure [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] humble is www.ttittancasino.com , because german gamblers, stretch manumitted online casino bonus.