என் பெட்டியை நன்றாக ஒரு முறை சரி பார்த்துக்கொண்டேன்.எத்தனையோ முறை நான் வெளியூர் சென்று இருந்தாலும் எதாவது ஒரு பொருளை மறந்து வருவது எனக்கு வழக்கமாக இருந்தது.என் பிரஷ் ,சாக்கஸ்,பெல்ட் எல்லாவற்றையும் ஒரு முறை பார்த்து கொண்டேன்.டிக்கெட் எடுத்தாயிற்று.ரயிலுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.இந்தவாரம் ஆனந்த விகடன் எடுத்து என் பையில் சொருகி வைத்து கொண்டேன்.தேவைப்படும் கண்டிப்பாக.
பெங்களூர் செல்வது புதிதல்ல .ஆனாலும் அந்த ஊரில் எனக்கு எப்பொழுதும் எனக்கு ஒரு அன்னியம் தோன்றும்.அந்த ஊரின் மக்களா இல்லை என் மன நிலையா என்று தெரியாது.ஆனால் சென்னை போல் வராது என்று முழுவதும் நம்புவன் நான்.அதனால் பெங்களூர் செல்ல எனக்கு எப்பொழுதும் வலிக்கும் .இத்தனைக்கும் எப்பொழுதும் பெங்களூரில் எனக்கு இனிமையான நிகழ்வுகளே இருந்து இருக்கின்றன.
" இந்த முறை மீட்டிங் முடித்து விட்டு திவ்யாவுக்கு பேசணும்.அவள் வரலை என்று சொன்னாலும் அவளை எப்படியாவது மீட் பண்ணனும் " என்று நினைத்துகொண்டே ஒரு சிகரட்டை பற்ற வைத்தேன்.
" என்னடா எங்க கிளம்பிட்ட ?'
பெங்களூர் மச்சி ஒரு Negotiation meeting
சரி மச்சி மன்சன் ஹௌஸ் வாங்கிட்டு வாடா
சரி டா
நான் சிகரட்டை அனைத்து விட்டு ஆட்டோ இருக்கிறதா என்று வெளியே எட்டி பார்த்தேன்.ஆட்டோ நின்று கொண்டிருந்தது.வழக்கமாக செல்லும் ஆட்டோ என்பதால் பேரம் பேச தேவை படவில்லை.
சென்ட்ரல் வந்து சேர்ந்த போது மணி பத்தரை.எனக்கு தட்கல் டிக்கெட் என்பதால் நான் கொஞ்சம் நடக்க தேவையாய் இருந்தது. S8 42.
பெயர் பலகையை பார்த்தேன் .பல பெண்கள் பெயர் தான் இருந்தன.எனக்குள் சிரித்துக்கொண்டு ஏறினேன்.என்னடா மச்சான் உனக்கு என்னைக்கி சிவராத்திரி தான் போ என்று நினைத்து கொண்டேன்.

உள்ளே சென்றால் யாரும் இல்லை .ஒரு சிலர் மட்டும் தங்கள் கால்களை விரித்து வைத்து வழி அனுப்ப வந்தவர்களுடன் கதை பேசி கொண்டிருந்தார்கள்.நான் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதால் நான் ஆனந்த விகடனை எடுத்துக்கொண்டு ஜன்னல் ஓரமாய் அமர்ந்து கொண்டேன்.ஒரு காபியும் வாங்கி கொண்டேன்.

நான் சினிமா செய்திகளில் மூழ்கி இருக்கும் போது சில பெண்களின் சத்தம் கேட்டது.என் இருக்கை அருகில் அடுத்த ஐந்தாவது நொடியில் பத்து பெண்கள்.எல்லோரும் ஏதோ இண்டர்வ்யு பற்றி பேசிகொண்டார்கள்.நான் அதிகம் கண்டு கொள்ளவில்லை.

சில பெயர்கள் அந்த பெயர் பலகையில் படித்தபோது ஞாபகம் இருந்தது.ஆண்டன் ,ஹேமா ,சத்யா ,சுமா மட்டும் நினைவில் இருந்தது.எல்லாம் பெங்களூர் பெண்கள்.வெள்ளை சாறு ஊற்றியது போல் இருந்தார்கள்.எல்லோரும் தங்கள் டிக்கெட்டை சரி பார்த்து கொண்டிருந்தார்கள்.

நான் " பில்லா' பட செய்திகளில் மும்முரம் ஆகி இருந்தேன்.சில சிணுங்கல் கேட்டு நிமிர்ந்தேன்.

"Where is your ticket Hema "

"Thats what I am searching,i missed it dee "

''Are u joking we cant find a browsing center to get a printout."

சில பெண்கள் இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தி கொண்டிருந்தார்கள்.என்னை ஏதோ மாதிரி பார்த்தார்கள்,நான் 'என்ன 'சொல்லவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை

"Do u know where browsing centre is,She has missed her tickets"
"Its outside ,we have a SIFY here but its full "Probably you can use my laptop and get the printout in the Station master room if he allows !!!'
அப்படியா

நான் என் லாப்டாப்பை எடுத்து ஆன் செய்தேன்.அவர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள்.

அவசரமாக ஒரு பென் டிரைவ் இல் ஸ்டோர் செய்து கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு ஓடினார்கள்.உண்மையில் ரயில் கிளம்ப இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது.நான் அந்த அறையை உற்று பார்த்து கொண்டிருந்தேன்.சில பெண்கள் ரயிலிலேயே இருந்தார்கள்.அவர்களிடம் பேச தேவை படவில்லை.

சில நிமிடங்களில் அவர்கள் வெளியே ஓடினார்கள்.என்ன செய்தார்களோ அடுத்த ஐந்தாவது நிமிடம் அனைவரும் ஒரு வெள்ளை காகிதத்துடன் வந்தார்கள்
They have got the tickets !!!!!!
ஓகே

டிக்கெட் தொலைத்தவள் பெயர் ஹேமா என்று ஞாபகம் இருந்தது.தமிழ் என்று நினைக்கிறேன்.மத்தி வகிடு எடுத்து சீவி இருந்தாள்.கண்டிப்பாக என்னிடம் வந்து தேங்க்ஸ் சொல்லுவாள் ,என்ன பதில் சொல்ல முடியும் அதற்கு.காத்து கொண்டிருந்தேன்.

அவர்கள் வந்தவுடன் சொல்லி வைத்தாற்போல் எனக்கு தேங்க்ஸ் சொன்னார்கள்.ஹேமா என்னும் படபடப்பில் இருந்து மீளவில்லை என்று நினைக்கிறேன்.கொஞ்சம் நிதானித்து கொண்டு தேங்க்ஸ் என்றாள்.நான் தலை ஆட்டி கொண்டு சிரித்தேன்.

இந்த கூத்தை பார்த்து கொண்டிருந்த பெருசு ஒன்று என்னை முந்திகொண்டது.

" அப்புறம் எங்க போய்மா டிக்கெட் எடுத்தீங்க '

" வெளியே ஒரு கடைல ,ஸ்டேஷன் மாஸ்டர் ரூம்ல ப்ரிண்டேர் இல்ல !!"

நான் பெருசை பார்த்து கொண்டிருந்தேன்.

அந்த இருக்கையில் சுற்றி பெண்கள் அமர்ந்து இருந்தாலும் ,ஹேமா கொஞ்சம் வித்தியாசமாக அழகாய் தெரிந்தாள்.

நோ நோ வேண்டாம் என்று எனக்குள் ஒரு குட்டிச்சாத்தான்
சொல்லியது.

ரயில் கிளம்பியது.ஹேமா தன் செல்போனை எடுத்துக்கொண்டு வாசல் அருகில் இருந்து பேசிகொண்டிருந்தாள்.நான் நினைத்தது சரி அவள் தமிழ் தான்.எனக்கும் ஒரு அழைப்பு வந்தது .நானும் வாசல் அருகில் சென்றால் நன்றாக இருக்கும் என்று நடந்து சென்றேன்.ஹேமா என்னை பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் இல்லாமல் அவளிடம் இருந்து விலகி நின்று கொண்டு பேசிகொண்டிருந்தேன்.அவள் யாரிடமோ சண்டை போட்டு கொண்டிருந்தாள்.
நான் என் நண்பனிடம் பேசிகொண்டிருந்தேன்.பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் அழுது கொண்டிருந்தாள்.எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

3 comments:

Anonymous said...

konjam cinema script maathiri irukku...but suvarasyama irukku...i love it...

nijathil ippadi nadakkatha endru neraya thadava yosichiruken...Railil parkira ponnu kitta manasa pari kudukrathu yaarukum puthusu illa...aana muthal santhippu muthathathil mudivathu...yathartham illai...

kandippa..antha ponna thedi hero Bangalore veethila sutha maataru nu nenaikiren...

Thanjavur ponnu nu solli...kiss varaikum kondu poitinga..athaan manasu kastama irukku...engha ooru ponnunga antha alavuku thaiyiriyam irukathu...

Waiting for more updates...

Vinoth Pradeep said...

hmm kewl one... but looks like a hero centric story..however flow of the story is much much better now, started with a top gear :); really enjoyed.. thanks

Karthik said...

@ Vinoth

hero centric ? sathiyamaga ellai nanba...this is about various levels of journey i had and my friends had thats it...its narrative so it looks as a hero centric