திடீர் என்று என்ன நடக்கிறது தெரியவில்லை.ஆனால் எனக்கு ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது.எனக்குள் மட்டும் அல்ல ,மக்களிடம்.என் மாற்றத்திற்கு வருவோம்.பத்து வருடத்திற்கு பிறகு ஒரு செயலை நான் திரும்ப செய்கிறேன்.யாராலும் யூகிக்க முடியாயது.என்னவாக இருக்கும் .ஹி ஹி ஹி ...நான் திரும்ப அந்த காரியத்தை செய்கிறேன்.அந்த பழக்கம் எப்பொழுது புதுப்பிக்க பட்டு விட்டது.என்ன காரியம் ??நான் டிபன் பாக்ஸ் எடுத்து செல்கிறேன்.மத்திய உணவை காலையிலே கட்டி எடுத்து செல்கிறேன்.நானும் டப்பர்வார் வாங்கி விட்டேன்.

இது என்ன பிரமாதம் என்று நினைபவர்களுக்கு ,பத்து வருடம் மதியம் வெளியே சாப்பிட்டு வந்து விட்டு என்று என் அருகில் என் கம்ப்யுட்டர் அருகில் என் உணவு இருக்கும் போது வரும் ஒரு உணர்வு ஏதோ புதியதாக இருக்கிறது.

சரி அடுத்த விஷயம்.நான் ஏழு கிலோ எடை குறைத்து விட்டேன்.எப்படி? டைட் (Diet).அது என்ன டைட் .ஏதோ ஒரு அட்டவணை கொடுத்தார்கள் நானும் ஒரு அளவிற்கு அதை பின் பற்றினேன்.நல்ல பயன்.என்ன பெரிய விஷயம் ?எடை குறையும் ஏதோ இளமை திரும்பி வருவது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது ஏன்?உண்மையில் தேகத்தை கட்டுபாட்டிற்குள் வைத்து இருந்தால் நன்றாக தான் இருக்கிறது.நான் ஜிம் செல்ல ஆரம்பித்து இரண்டு மதங்கள் ஆகின்றன.கொஞ்சம் விலை கூடுதலான ஜிம் தான்.ஆறு மாதத்திற்கு பதினாலாயிரம் ரூபாய்.ஆனாலும் நன்றாக இருக்கிறது.இப்பொழுதெல்லாம் படிக்கட்டில் ஏறுகிறேன்.லிப்ட் பக்கம் செல்வதே இல்லை.ஒரு நாள் ஜிம் செல்ல வில்லை என்றால் ஏதோ டியூஷன் செல்லாதது போல் ஒரு பதட்டம் நேருகிறது.இந்த மாதிரி விலை உயர்ந்த ஜிம் செல்வதால் வரும் நன்மை நாம் கட்டி இருக்கும் பணத்திற்காக நாம் தொடர்ந்து செல்லுவோம்.

அடுத்தது மக்களிடம் என்ன மாற்றம்.எங்கு பார்த்தாலும் இந்த Fitness மோகம் பரவி வருகிறதே ஏன் ?சூர்யாவின் Sixpacks Abs பார்த்தா? இல்லையே.நேற்று சாலையில் பைக்கில் செல்லும் போது இரண்டு நபர்கள் பேசிகொண்டிருந்தது அவர்கள் காலையில் செய்த Abdomen excercise கணக்கை பற்றி.பணியிலும் அப்படிதான் கூடமாக சென்று ஒரு ஜிம்மில் சேர்ந்து இருக்கிறார்கள்.எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் Fitness பற்றி அக்கறை எடுத்து கொள்கிறார்கள்.
நான் எதாவது செய்ய வேண்டுமே ? என்ன செய்வது ?

நான் புகை பிடிப்பதை விடலாம் என்று இருக்கிறேன்.நான் குறைத்து விட்டேன்.இப்பொழுதெல்லாம் ஒரு பாக்கெட் தான் புகைகிறேன்.எனது Cutoff மாதம் நவம்பர்.அதற்க்கு பிறகு நோ ஸ்மோகிங்

4 comments:

Joe said...

All the best for dieting/exercise!

Quit smoking at the earliest, it will keep you healthy!

Karthik said...

Hey joe u are here atlast...Thanks man...Feeling good on this routine...I will quit smoking ,,,its a word ...i am bored of it toooooooooooo:P

Vinoth Pradeep said...

dai machi.. gng to quit smoking????man thats damn easy. even i have done that for few times :P, but now i am fed up of quiting.. :D

I'd rather pefer being active than being a passive smoker.. Yes dude i still have hell lot of frnds who make nagpur a kodaikanal (Smoke effect ehhehe.

Vinoth Pradeep said...

also give me that diet chart buddy.. let me try :P