Beyond the plessure அப்படின்னா என்ன ? எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது. என் மனதின் இரு துருவங்கள் இரண்டு கோட்பாடுகளை நோக்கி முன்னேறுகிறது .ஒன்று இரோஸ் மற்றொன்று தனடோஸ் .என்னடா இது என்று எனக்கே தெரிகிறது.ஆனாலும் இதை ஆராய்ந்து வைத்து இதற்கு ஒரு பெயரும் இருக்கிறது.சைக்காலஜி படித்தல் எனக்கு ஒன்றும் விருப்பம் இல்லை.அது ஒரு கடினமான முயற்சி.நான் உணரும் போது எளிதாக இருக்கிறது.இரோஸ் என்றால் என் ஆக்கத்திறன் ,என் உடல் சம்பந்தமான உற்பத்தி உந்துதல் ,என் சுய கோட்பாடுகள்.தனடோஸ் என்பது அழிவு சம்பந்தமான கட்டாயங்கள்,இறப்பு,பரிதவிப்பு.இரண்டும் முரண்பட்டு போன கருத்துக்கள்.இந்த இரண்டையும் கொண்டு மனித மனம் போராடுகிறது.ஒரு பக்கம் நான் என் வாழ்கையில் சுமூகமாக செல்கிறேன்,எனக்கு கல்யாணம் பேச்சுக்கள் எல்லாம் நடக்கிறது,மறுப்பக்கம் நான் எதோ தொலைத்து விட்டது போல் ஒரு அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.
தனடோஸ் என்பது கிரேக்க அழிவின் கடவுளின் பெயர் .இது ஒன்றும் பெரிய கருத்து அல்ல.ஆனால் எதோ ஒரு உண்மை இருக்கிறது.எனது நினைவுகள் எல்லாம் ஒருங்கிணைந்து என்னால் நடக்க முடியாது என்று எனக்கு தெரியும்.ஆனால் நான் ஏன் இன்று பல மைல்கள் தாண்டி இப்படி இந்த மதுரை வீதிகளில் ஒரு கிரீடிங் கார்டு வாங்குவதற்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.
நாளை அவள் பிறந்த நாள்,அது எனக்கு தெரிகிறது.அதற்கு என்ன ? என் வாழ்த்திற்கு அவள் காத்து இருக்கிறாளா என்ன ? இல்லை. அதுவும் எனக்கு தெரிகிறது.அவள் என்னை தாண்டி எங்கோ சென்று விட்டாள் .ஆனால் எனக்கு இன்னும் அவளிடம் ஒரு விதமாக வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.அது எனக்கு ஒரு கட்டாயமாக படுகிறது.அந்த கட்டாயங்கள் என்னக்கு ஒரு பயனையும் தராது என்று எனக்கு தெரியும்.ஆனாலும் இந்த பயணம் அதை ஏற்காது.
இது ஒரு வழக்கம், ஒரு கடமை .என்று தோன்றுகிறது."மண்ணாங்கட்டி !!! ஒழுங்க பொழப்ப பாரு !!! "என்று கூட சொல்லுகிறது ஒரு பக்கம்.
கிரீடிங் கார்டு வாங்கி ஆகியது.இதோ நான் அவள் வீட்டின் அருகில் செல்ல போகிறேன்.அவளிடம் போய் நீட்ட முடியாது.அந்த கல்லூரி நாட்கள் முடிந்து அவளும் நானும் பிரிந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டன.ஒவ்வொரு வருடமும் அவளுக்கு நான் முதல் வாழ்த்து சொல்ல முனைந்து இருக்கிறேன்.இந்த வருடமும் அது நடக்கும் என்று எனக்கு தெரிகிறது.
நான் ஒரு பெட்டி கடையில் நின்று கொண்டு அவள் வீட்டு வாசலை பார்த்து கொண்டிருக்கிறேன்.அங்கு இருந்து பார்த்தால் அவள் வீடு தெரிகிறது.உள்ளே தோட்டத்தில் ஆட்கள் நடமாட்டமும் தெரிகிறது.எல்லாம் ஆண்களாக இருக்கிறார்கள்.அவள் வீட்டிற்கு ஒரு போன் செய்து பார்க்கலாமா ??
டயல் செய்ய எதோ காத்து கொண்டிருந்த விரல்கள் போல எண்களை சுழற்றியது என் விரல்கள்.நம்பர் பிஸி .யாரிடம் பேசி கொண்டிருக்கிறார்கள்.அவள் தான் பேசி கொண்டு இருக்கிறாளா ? யாருடன்?. அவளுக்கு தான் பெரிய நண்பர் வட்டம் கிடையாதே .பின் யாராக இருக்கும்.மனம் தேவை இல்லாமல் பட படைக்கும் போது புகை பெரிய துணையாக இருக்கிறது.
ஒரு நடை நடந்து விட்டு வந்தேன்.மீண்டும் டயல் செய்தேன்.இந்த முறை ஒலித்தது.
" ஹலோ '
"_____'
பிளான்க் கால்.போனை வைத்து விட்டேன்.அவள் தான் .அவளிடம் பேச கூட தைரியம் இல்லை.என்ன தவறு செய்து விட்டேன் தைரியம் இல்லாமல் போவதற்கு?சரி பேசுவோம் ,நான் ஒன்றும் தவறு செய்து விடவில்லையே .
திரும்ப டயல் செய் !!!
" ஹலோ "
அந்த நொடிக்குள் ஒரு எண்ணம்.அவள் நான் பேசி பேசாமல் வைத்து விட்டால் அவமானம்.அவமானம் யாரிடமாவது சொன்னால் தானே.யாரிடமும் சொல்லாதே.இல்லை வேண்டாம்.என்னால் தாங்க முடியாது.
" ஹலோ " என்று மறுபடியும் அழகாக என்னிடம் பேசினாள்.
ஹலோ என் பெயராக இருக்க கூடாதா ? சீ என்ன நினைப்பு இது ??
போனை எதுவும் பேசாமல் வைத்து விட்டேன்.
இருட்டி கொண்டு வந்தது.ஒரு படம் பார்க்க செல்வோம் என்று கிளம்பினேன்.என்ன படம் என்று தெரியாமல் நுழைந்து விட்டேன்.மனம் நான் சொல்ல போகும் வாழ்த்தை ஒரு கவித்துவமாக கற்பனை செய்து கொண்டிருந்தது.படத்தில் எனக்கு மனம் கொள்ளவில்லை.இடைவேளை பதினொன்று இருபது மணிக்கு விட்டவுடன் நான் வெளியேறி விட்டேன்.
அவள் வீட்டின் அருகில் வரும் போது மணி பதினொன்று ஐம்பது .இன்னும் பாத்து நிமிடங்கள் இருக்கிறது.என்ன செய்யலாம்.
என் கையில் இருந்த கவரை எடுத்தேன்.அதில் அடக்கமாக எனக்கும் அவளுக்கும் புரியும் ஒரு பாஷையில் ஒரு வாழ்த்து காகிதத்தை மடித்து வைத்து இருந்தேன்.அதை ஒரு கல்லுடன் சேர்த்து கட்டினேன்.நான் நூல் எல்லாம் தயாராக வைத்து இருந்தேன்.அந்த காகிதத்திற்கு சிகப்பு நிற மை பூசி இருந்தேன்.அதனுடன் ஒரு சின்ன பூவையும் வைத்து அவள் வீட்டின் அருகில் நான் எங்கு அதை வைப்பது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறேன்.
அந்த கடிதம் கண்டால் அவள் கண்டிப்பாக ஒரு முறை என் முயற்சிக்காக என்னை நினைத்து பார்ப்பாள்.அவள் வீட்டு வாசலின் அருகில் கொஞ்சம் கண் படும் இடமாக அல்லாமல் ஆனால் வீட்டின் உள்ளே இருந்து வருபவர்கள் பார்ப்பது போல் வைத்து விட்டு வந்தேன்.
" ஹாப்பி பர்த்டே !! ஹாப்பி பர்த்டே என்று யாருக்கும் தெரியாத ஒரு குரலில் கத்தி விட்டு வந்தேன்.எனக்கு நன்றாக கேட்டது.அவளுக்கும் கேட்கும் என்று நம்பிக்கை.ஒரு சந்தோசம் தெரிந்தது.ஒரு சாதனை போல் இருந்தது.அவள் அதை பார்ப்பாள் எனக்கு போன் செய்வாள் !! கண்டிப்பாக ....இதை யாரிடமாவது சொல்ல வேண்டும்.நான் திரும்ப ஹோட்டல் வந்து படுக்கும் போது மணி இரண்டு.ஹோட்டலில் வாங்கி வைத்து இருந்த விஸ்கி பாட்டிலை திறந்து தனியாக காலை நான்கு மணி வரை குடித்தேன்.இடையில் அவள் வீட்டு நம்பருக்கு ஒரு முறை ஒரு கால் வேறு செய்து பார்த்தேன்.
" ஹ்ம்ம் யாரிடமும் பேசவில்லை " என்று நினைத்து கொண்டு போனை வைத்து விட்டேன்.
யார் இது !!! என்ன நடக்கிறது என்று தெரியாமல் என் நடவடிக்கைகள் போய் கொண்டு இருந்தன !!
தூங்கி விட்டேன்.மதியம் ஒரு மணி அளவில் எழுந்து இருக்கிறேன் ,தலை வலிக்கிறது.கொஞ்சம் வாய் உலர்ந்து போய் இருக்கிறது.குளித்து விட்டு ஒரு சிகரட்டை பற்ற வைத்தேன்.Hang over விட்ட பாடில்லை.
கீழே இறங்கி வந்து குரு பிரசாத் ஹோட்டலில் நுழைந்தேன்.
கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது.என் முன்னே இருந்த தட்டுகளை பார்த்த உடன் எனக்கு சாப்பிட வேண்டும் என்ற உணர்வே சென்று விட்டது.Hang over effect.
என்ன சாப்பிடறீங்க ?
" ஒரு லைம் ஜூஸ் கொண்டுங்க "
ஜூஸ் இல்லையே !! மோர் சாப்பிடறீங்களா ?
ஹ்ம்ம்
மோர் சாப்பிட்டு விட்டு அவள் வீட்டு அருகில் செல்ல தயாரானேன்.
அவள் வீட்டின் அருகில் வேகமாக நடந்தேன்.யாரும் இல்லை.மதிய வேளையில் தூங்கி கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.அந்த கல் இல்லை.
அவள் பார்த்து அந்த கல்லை விட்டாள்.புதியதாக கோலம் இருந்தது.அவள் பிறந்த நாள் எதுவும் நடக்காதது போல் இருக்கிறதே.அவள் பார்த்து விட்டாள் ,அந்த கல் இல்லை அதனால் என் வாழ்த்து அவளிடம் சென்று விட்டது.
அவள் வீட்டை தாண்டி சென்று கொண்டிருந்தேன்.தாண்டி பெட்டி கடையின் அருகில் வந்து விட்டேன்.பெட்டி கடை அந்த தெருவின் கடைசி முகவரி.அதன் பிறகு வெறும் குப்பை மேடுகள் தான்.
" ஒரு கிங்க்ஸ் கொடுங்கன்னா !!"
கடை காரர் நீட்டினார்.நிம்மதியாக பற்ற வைத்தேன்.
" என்ன அண்ணா எங்க ஒரு வாடை அடிக்குது "
அதுவா ப்பா இந்த ஏரியா குப்பை எல்லாம் காலைல வந்து இங்க தான் கொட்டுறாங்க.எவ்வளவு தடவை சொன்னாலும் இங்க தான் கொட்டுறாங்க !!"
"ஹ்ம்ம் " என்று நான் அந்த குப்பைகளை பார்த்தேன்.
அதில் அந்த கல்லும் இருந்ததை நான் கவனிக்க வில்லை.என் மனம் கவனிக்க வில்லை.காலையிலே அந்த கல் வேலை செய்பவள் கூட்டி பெருக்கி இங்கு போட்டு விட்டாள் என்பதை என் மனம் உணரவில்லை.
நிம்மதியாக நான் சென்னை கிளம்பினேன்.

11 comments:
Machi the hero's (???!!!) idea of dropping a so called greeting card.. is BS mamu...
IT has a strong grip on the world's day to day activity.. still stone, greeting card.. mamu enna ethu ellam???? ehhehe.. but still i could look the character in my dreams.. think ur words have started impacting me... Kudos for u.. But iam gng wrong :)
hmm...the hero?...no he is not..he is just a character...i would say if u think alound when u are wounded u will land up in only a silly idea..thats for it..u cant send post or call her...what to do..just keeping in the eyes of her would help...
See its like this mind operates in two directions...the person knows that the stone was in the garbage and she didnt see the stone...but his mind refuses to accept or perceive that he has seen that laying on the garbage...
Unconscious mind works not on autonomic responses...this is actually a story on unconscious mind
07/07/2008?
who is this hitting on the bulls eye
Bulls eyes??? so its not a dream or sub concious..
:)))))))
come live sir
Live...
paavi paavi
arumai arumai...Paithiyakarathanathin uchakattam,etharku oru psychological analysis.ellorum seithu irukkum oru vishayam.nalla unarnthu eluthi erukka machan.kandippa nee eppa appadi ella nnu ninaikiren.GREAT POST
@anonymous
thank u sir...Ellorum ethai panni erukkom..thanks for ur visit...
Post a Comment