நான் பார்த்த படித்த ரசித்த எல்லா தமிழர்களுக்கும் ஒரு உண்மை ஒற்றுமையாக இருக்கிறது.எல்லோருக்கும் பாரதியை பிடித்து இருக்கிறது.எனக்கும் பிடிக்குமா என்று கேட்டால் .....பிடிக்கும்.அவ்வளவு தானா !!! அவ்வளவு தான் .ஏன் என்றால் பாரதியின் வீறு கொண்ட கவிதைகளும் எழுத்துகளும் எல்லா மனிதனையும் போல் எனக்கும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கிறது.அதனால் எனக்கும் பிடிக்கும்.ஆனால் நான் பாரதியை வேறு விடத்தில் பார்க்கிறேன் .பாரதியை வேறு நிலையில் இருந்து ரசிக்கிறேன்


நேற்று எஸ் .ராமகிருஷ்ணனின் பதிவுகளை படித்து கொண்டிருந்தேன்.அவர் போன்ற தேர்ந்த எழுத்தாளர்களுக்கு பாரதியின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பதை நான் படித்து இருக்கிறேன்.பாரதியின் கடிதங்களை பிரசுரித்து இருந்தார்.அது ஒரு புத்தகமாக வெளிவந்தது இருந்தது இன்று பார்த்தேன்.ஏன் என் நண்பர்கள் கூட பலர் தன் டெஸ்க்டாப் இல் பாரதியின் படத்தையும் ஆர்குட்டில் பலர் பாரதியின் குழுவில் இருப்பதை பார்த்து இருக்கிறேன்.நானும் அந்த குழுவில் இருக்கிறேன்.


சுட்டும் விழி சுடரே என்ற பாடலை எல்லோரை போல் நானும் ரசித்து இருக்கிறேன்.நான் அதை பாரதியின் பாடல் என்ற ஒரே விஷயத்திற்கு மட்டுமே ரசித்து இருக்கிறேன்.எனக்கு பாடிய ஹரிஹரனும் பிடிக்கும் என்பது வேறு கதை.நான் எழுத ஆரம்பித்த பிறகு என் பெயரை ஹரிபாரதி என்று கூட புனை பெயராக வைத்து கொண்டு சில நாட்கள் எழுதி வந்தேன்.என் தந்தைக்கு பாரதியின் பாடல்கள் மிகவும் விருப்பம்.ஒருமுறை தூர்தர்ஷனில் பாரதியாரின் மாலை பொழுதில் மேடை மிசையே என்ற பாடல் ஜேசுதாசின் குரலில் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்ததை அவர் டேப் ரிகாடரில் பதிவு செய்து கொண்டிருந்தார்.நான் இதை அறியாமல் "அம்மா பசிக்குது " என்று ஒரு குரல் எழுப்பியவுடன் எனக்கு விழுந்த ஒரு அடி என்னை பாரதியிடம் இருந்து என்னை தள்ளி வைத்தது.இது நடந்தது 1989 .சில வருடங்கள் கழித்து எனக்கு தமிழ் பாடத்தில் பாரதியை பற்றி வந்தால் நான் ஒரு விருப்பம் இல்லாமல் தான் படித்து வந்தேன்.பாரதி யார் என்று எல்லாம் அப்பொழுது எனக்கு தெரியாது .பாரதி 1889 வருடம் பிறந்தார்.பாடல் எழுதினார்.அப்பாவிடம் அடி வாங்கி கொடுத்தார் என்று மட்டும் தெரிந்து இருந்த காலம்.


இன்று பாரதியை நான் வணங்குகிறேன்.என்னை மீறிய ஒரு தன்னிலை சக்தியாக பாரதியை பார்க்கிறேன்.பாரதியை ஒரு தீர்கதரிசியாக கொள்கிறேன்.பாரதியின் வரிகளை கொண்டாடுகிறேன்.என் நண்பர்களிடம் சென்று இது பாரதியார் பாட்டு மச்சி என்று சொன்னால் ,"ஹ்ம்ம்" என்பார்கள் .அவ்வளவு தான் .


என் கடந்த கால பெண் கூட தன் ஒரு கடிதத்தில் " பாரதியாரை விட்டு விட்டு கொஞ்சம் என் கூட நேரம் செலவிடு " என்று எழுதி இருந்தது நினைவில் வருகிறது.அது கல்லூரியில் தமிழ் சங்கம் என்ற அமைப்பிற்கு திரிந்து கொண்டிருந்த காலம் .பாரதியின் கவிதைகளை தாண்டி பாரதியை நான் ரசித்த நேரங்கள் உண்டு.பாரதியின் கவிதைகள் புத்தகத்தை எப்பொழுதும் என் அருகில் வைத்து இருப்பேன்.என் மனம் தள்ளாடி கொண்டிருக்கும் பொழுதெல்லாம் பாரதியாரின் " துச்சமாக நம்மை எண்ணி கூறு போட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே " என்ற வரிகளை நான் படிப்பதை வழக்கமாக்கி கொண்டு விட்டேன்.


ஞான ராஜசேகரனின் பாரதி படத்தை பத்து முறை பார்த்து ரசித்த நேரங்களும் உண்டு,பாரதியின் கவிதைகளை மாற்றி எழுதி பார்த்த நேரங்களும் உண்டு.பாரதிக்கும் எனக்கும் ஒரு தனி அலைவரிசை என்று எல்லாம் நான் சொல்லி பிதற்ற போவதில்லை.பாரதி எனக்குள் நுழைந்தது ஒரு சம்பவம்.

9 comments:

Vinoth Pradeep said...

hmm back to square one.. u said in ur previous post that u have unchanged..

I totally agree with it.. I still remember good old school days, u, ur bharathi, ur hariharan songs (that time i loved colonial cousins album coz of u), manisha, bombay movie, still lots more to add on.. but i stop here :P

Why cant u try writing something about ur dad and his feeling.. take a ride on him dude.. we would loved to read those.. Good Post

Anonymous said...

very very well written da...
S K(karthik sankaran)

Karthik said...

Nope ...now adays u are getting me totally wrong...Vinoth i am writing what comes to my mind...and Bharathiar is some thing which is always there ...and i never said i changed from this ..This was the post which was there in my mind fromthe day i started blogging and cant resist more ...i think u will enjoy when u read the continuation of it...u have become so conclusive nowadays

Karthik said...

@ sk

hey u are back...thanks man

Anonymous said...

Good title na "பாரதி யாராகி போனான்....!"

Bharathi uyirodu iruntha kaalathil naadu avara maranthutaanga...ippa ella Tamilanum Bharathiya than adaiyalama kaamikraanga...

Bharathi padalgal ella kaalathukum porunthi varum...nallathor deerkadarsi...kaalathai bendravan..

this post is good tribute to him..

Karthik said...

@ aslam

true man very true
and thanks for ur comment

Nithy said...

Good one..especially this title.
All the 4 topics on Bharathi reminds us of the gr8 poet.
As far as I have read Bharathi - the best thing is he explores every beautiful and optimistic aspect of life (has he written some sad poems too???). His songs really boost up the enery levels and spirits within any individual (like manadil urudi vendum, agni kunjondu kanren)

M also remided about the album of Bharathiyar songs - by Bombay Jayshree called "Atma:Soul"

Nithy said...
This comment has been removed by the author.
Karthik said...

Bharathi has written sad poems ,U can check out bharathiarkavithaigal.blogspot.com

bharathi is a magic and he is an universe ,no wonder all posts on him are enjoyable because not because of him ..but because of the Bharathi:)