என் கையெழுத்து சுமாராக இல்லாவிட்டாலும் கொஞ்சம் நல்லாவே இருக்கும்.பல தேர்வுகளில் கை எழுத்தை வைத்தே பாஸ் ஆகி இருக்கிறேன்.நான் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது என் தமிழ் ஆசிரியையின் பெயர் ரேச்சல் .என் வயது சிறுவர்கள் எல்லோரும் அவரிடம் எதாவது ஒரு நான்கு வரிகள் எழுதி அவரிடம் சென்று கை எழுத்தை காட்ட வேண்டும்.எழுத்து பயிற்சி என்று அவர் கூறியதாக ஞாபகம் .நான் அப்பொழுது ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு முறையும் எனக்கு " நன்று " மிக்க நன்று " என்ற அவரது Remarks இருக்கும்.இதை நான் பெருமையாக மார் தட்டி திரிந்து கொண்டிருந்தேன்.அவர் அந்த பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியை.நான் நன்றாக கை எழுத்து எழுதுவதை பார்த்து ஒரு நாள் என்னை அழைத்தார்.
" கார்த்திக் புதன் கிழமை நீ Prayer ல நீ எதையாவது பற்றி பேசணும் Recitation.நீ அப்பாகிட்ட போய் எழுதி வாங்கிக்கோ.அப்புறம் என் கிட்ட வந்து பேசி பயிற்சி செய் !!!"
சரி மிஸ்
என்று வந்து விட்டேன்.நானும் அதை மறந்து விட்டேன்.இரண்டு முறை அவர் எனக்கு ஞாபக படுத்தினார்.நானும் அப்பாவிடம் கூறிய போது அவர் ஏதோ ஒரு ஆடிட் நேரம் என்பதால் மறந்து இருந்தார்.
இரண்டு நாட்களாக என் கை எழுத்து புத்தகத்தில் நன்றும் இல்லை ஒன்றும் இல்லை.அவரது கை எழுத்து மட்டும் இருந்தது.அடுத்த வாரம் திங்கட்கிழமை என் கை எழுத்து புத்தகத்தை எடுத்த எனக்கு கூனி குறுக வேண்டி இருந்தது.
அதில் இருந்த ஆசிரியையின் எழுத்துக்கள் " முதலில் ஒழுக்கம் மற்றும் கீழ்படிதல் படி பிறகு கை எழுத்து !!!' என்று இருந்தது.அவமானமாக இருந்தது.அன்று மதியம் சாப்பிட்டதாக நினைவு இல்லை.எனக்கு மனம் வருத்த பட்டால் உணவில் கோபத்தை காட்டுவது அப்பொழுதே எனக்கு பழக்கமாக இருந்தது.அப்பாவிடம் எட்டு மணிக்கு கை எழுத்து புத்தகத்தை காட்டினேன்.அம்மாவுக்கும் அப்பாவிற்கும் இதனால் ஒரு சண்டை.சமரசம் ஏற்பட்டு அப்பா எனக்கு அடுத்த நாள் பேசுவதற்கு எழுதி தர தயாராகி விட்டார்.
என்ன எழுதி தர போகிறார்.தெரியவில்லை.எனக்கு அப்பொழுது ஒன்றும் தெரியாது.அப்பா எழுதி முடிக்க ஒன்பதரை ஆகி விட்டது .நன்றாக நினைவில் இருக்கிறது அது ஒரு அரசு அட்டவணைக்கு தர படும் வெள்ளை காகிதத்தில் எழுதி இருந்தார்.இரண்டரை பக்கம் இருந்தது.
சில வழக்கமான வணக்கங்களை சேர்த்து விட்டு அவர் இவ்வாறு எழுதி இருந்தார்.
"அச்ச அச்ச மில்லை அச்ச மில்லை அச்சமென்பது இல்லையே என்று பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றி பேச வந்துள்ளேன்.பாரதி எதை பாட குயிலை பாடினான்,காகத்தை பாடினான்.கண்ணனை பாடினான் கண்ணம்மாவை பாடினான் ,பராசக்தியை பாடினான் பாஞ்சாலியை பாடினான் .காந்தியை பாடினான் திலகரை பாடினான்.ரஷிய புரட்சியை பாடினான்.பிரஞ்சு புரட்சியை வரவேற்று பாடினான்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்று அவன் மனித ஒற்றுமையை பற்றி பாடுகிறான்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று வறுமைக்கு எதிராக சாடுகிறான்..........."
என்று சென்றது அந்த வரிகள்.நான் அதை மனப்பாடம் செய்து முடிக்க மணி ஒன்றாகி விட்டது.காலையில் அப்பாவிடம் ஒரு முறை ஒப்பித்து விட்டாகி விட்டது.அப்பா சில திருத்தங்கள் செய்தார்.வீரமும் குரலும் உன் கண்களில் தெரிய வேண்டும் என்றார்.எனக்கு ஒன்றும் புரிய வில்லை.எதற்கு அப்படி கூறினார் என்று.நானும் என் குரலை சற்று ஓங்கி இருக்குமாறு பார்த்து கொண்டேன்.எனக்கு பாரதி பாடலை ரிகார்ட்(Record) செய்து கொண்டிருக்கும் போது அப்பா அடித்தார் என்பதால் பாரதியை பற்றி தெரிந்து கொள்ள நான் ஆர்வம் காட்டவில்லை.ஆனால் பாரதி திரும்ப வந்தது கொஞ்சம் எனக்கு வருத்தமாக தான் இருந்தது.என் தந்தைக்கும் தன் மகனை இப்படி கை எழுத்தை பற்றி எழுதி விட்டார்கள் ,நிரூபிக்க வேண்டும் தன் மகனின் திறமையை என்ற வெறி தெரிந்தது.எனக்கும் இருந்தது.
அடுத்த நாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கு சென்று விட்டேன்.நாராயணன் என்ற என் நண்பனிடம் பேசி காட்டினேன்.அவன் மிரண்டு விட்டான்.ரேச்சல் மிஸ்ஸை பார்க்க சென்றேன்.
" மிஸ் நான் இன்னைக்கு பேசுறேன் மிஸ் !!"
" முதல்ல என்ன எழுதி வந்துருக்க பார்ப்போம் "
படித்து பார்த்த போது அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது.நான் பேசி காட்டிய போது என்னை ஆச்சர்யமாக பார்த்தார்.
" நல்ல பேசு , யாசின் அண்ணா கிட்ட போய் சொல்லிரு நீ இன்னைக்கு பேச போறேன்னு "
யாசின் அண்ணன் எங்கள் பள்ளி மாணவர் தலைவர் .அவர் தான் கடவுள் வாழ்த்தில் இருந்து ஆரம்பித்து இன்றைக்கு இந்த வகுப்பில் இருந்து இவர் பேச போகிறார் என்று ஆரம்பித்து வைப்பார்.பின் நான் பேச வேண்டும்.பின் நாளில் நான் அந்த பணியை செய்தேன் என்பது உண்மை.
"சரி மிஸ் !!!' என்று கிளம்பி விட்டேன்.என் நண்பர்களுக்கு கூட தெரியாது நான் என்று பேச போகிறேன் என்று.
பிரேயர் க்கு(Prayer) கிளம்பும் போது எல்லோரும் வரிசையில் சென்று நான் மட்டும் தனியே விலகி யாசின் அண்ணன் அருகில் சென்று நின்று கொண்டேன்.ஒரு ஐந்நூறு பேர் என் முன்னே நின்று கொண்டிருக்கிறார்கள்.எனக்கு முதன் முதலாக உதறுகிறது.அப்பா சொன்னது ஞாபகம் இருந்தது.வீரமும் குரலும் உன் கண்களில் வேண்டும் என்று !!!!
எல்லோரும் என்னை பார்த்து கொண்டிருந்தார்கள்.என் தம்பி கூட என்னை பார்த்து கொண்டிருந்தான்.யாசின் அண்ணன் கடவுள் வாழ்த்தை முடித்து விட்டார்.எனக்கு பயம் வந்து கொண்டிருந்தது.அந்த பாரதியின் கண்கள் நன்றாக எனக்கு ஞாபகம் இருந்தன ."Now Karthik from VI std E section will recite on Tamil about Bharathiar "
Over to the Kid Karthik.....:)
(அடுத்த பகுதியில் முற்றும் )

8 comments:
malarum nianaivugala na...ur school friends will enjoy this nostalgia...
Karthik oda athi methavi thimir thanam aarang class laye irunthirukku...
malarum ninaivugal ella aslam ...this was supposed to be on bharathy but was compelled to write abt this incident.but u know this is 200% truth to all characters...i think u enjoyed...u didnt...
Athimethavi thimir thanam ellama karthikkaaa ...ha ha ha aha ha ...sathiyama nianitchu kooda pakka mudiala...but basicalla karthik nallavan da...nambu....:( :)
Karthik nallavan!!!?? Thanjavur kalvetla porika vendiya vaasagam...
Dei Karthi,
First of all, onnada nyabaga sakthiki paaratukal. I remember the Bharathiar speach that you did in the assembly. If my memory is right, you really excelled in that speach and it was well received by everyone. Especially i remember your emphasis on 'Thani manitharku unavilaiyel entha jagathinai azhilitiduvom". i think your voice got a real good roar while delivering the above said statement especially. I really enjoyed reading this as it took me back to our school days. Keep up this good work man.....
Machan.. you have an astounding memory.. u still remember yasin and rachel :)
Hope i was one among the average students that time, i was thinking how this guy can do this much; that too infront of all students.. now i got the process enabler behind this :P.. its again your father..Great
Nice Post dude, i loved it..
@ Sriram...
Hey u are here...thanks man...as i said its green and this is a great event for me...might be very small for others...but this brought me to lime light.
///'Thani manitharku unavilaiyel entha jagathinai azhilitiduvom". i think your voice got a real good roar while delivering the above said statement especially.////
i remembered the words my dad said and i had to do...some how i wanted to prove something...:)
@ Vinoth
Convinced...ha ha ha
My dad was not the process enabler he is the process actually i was just the ingridient...he he he....
i really miss those days man...when i was in school...every body doess...dont we....
நண்பா கார்த்திக்,
உன்னுன் விழித்து கொண்டது உன்னுடைய ஆளுமை தான். ஆது பாரதி என்னும் வாஹனம் வழியாக பயணித்திருக்கிறது. இந்த அண்டத்தின் ஒவ்வொரு உயிரோடத்துள்ளும் ஏதோ ஒரு உந்துதல் கலையை வடிக்க பணித்துத்தான் கொண்டிருக்கின்றன. அதன் நிதர்சனம் தான் உன் கணையாழி பாரதி.
Post a Comment