கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார்.நல்லா தான் சொல்லி இருக்கிறார்கள்.என் அப்பாவிற்கு திருநெல்வேலியில் இன்னும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை.எனக்கு சென்னையில் வாங்க வேண்டும் என்று கட்டாயம்.நான் சென்னையை தாண்டி செல்ல மாட்டேன் என்ற நினைப்பால்.வென்றது என் தந்தை தான்.வீடு கட்டுவது ஒன்றும் சாதரண விஷயம் அல்ல .அதை போல் ஒரு கட்டிய வீட்டை வாங்குவதும் சாதரண விஷயம் இல்லை என்று சென்ற வாரம் தான் தெரிந்தது.

முதலில் என் பெற்றோர்கள் இந்த முறை திருநெல்வேலி அருகில் உள்ள என் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது என் சித்தப்பா மூலமாக இந்த வீட்டை பற்றி கேள்வி பட்டு இருக்கிறார்கள்.சென்று பார்த்த மறு பொழுதே இதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.எனக்கு போன் போட்டு சொல்லும் பொழுது நானும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை.பணியில் இருந்து ஓய்வு பெற்று என் தந்தை வீட்டில் நேரம் செல்லாமல் புலம்பி வருவதை நான் சில நாட்களாக பார்த்து வருகிறேன்.இந்த முறை அவர் மிக உற்சாகமாக இதை பற்றி வேலையில் இறங்கியதால் நானும் ஏதும் சொல்ல வில்லை.

முதலில் ஒரு வங்கியை அணுகி அவர் என்னிடம் எல்லா விபரங்களையும் அனுப்பி வைத்தார்.நானும் கைஎழுத்து இட்டு திரும்ப அனுப்பி வைத்தேன்.எல்லாம் நல்லா படியாக செல்லவே பதிவு நாள் குறிக்க பட்டது.நாங்கள் வீடும் வாங்கும் நபர் ஒரு பெண்.அவர் கணவர் துபாயில் எதோ வேலை செய்து வருவதாகவும் ,அவர் இந்த பெண்ணிடம் அதிகம் தொடர்பு இல்லை என்றும் ,அந்த பெண் மிக கண்ணியமான பெண் என்றும் அம்மா அடிக்கடி சொல்லி கொண்டிருந்தார்.நான் அந்த அம்மையாரை பார்க்க விட்டாலும் அடிக்கடி அம்மா அவரை பற்று சொல்லிகொண்டிருந்தார்.

இந்த பெண் தன் வருவாயை மீறி ஆறு லட்சம் கடன் வாங்கி இந்த வீட்டை கட்டி உள்ளார் என்று கேள்விபட்டோம்.என் தந்தை முன் பணமாக இரண்டு லட்சம் கொடுத்து இருந்தார்.அதையும் அந்த பெண் கடன் அடிக்கவே பயன்படுத்தி இருக்கிறார்.பதிவு தேதிக்கு நான் திருநெல்வேலி செல்ல டிக்கெட் எல்லாம் எடுத்தாகி விட்டது.திடீர் என்று அப்பா என்னை அழைத்து பதிவு தேதி தள்ளி செல்கிறது என்றார்.என்ன விஷயம் என்று விசாரித்தால்,இந்த நிலம் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்து பதிவாகி இருக்கிறது.அதனால் வங்கி அதன் முழு பட்ட விபரமும் வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டது.இத்தனைக்கும் வங்கியில் லோன் எனக்கு தர பட்டிருந்தது.என் தந்தையும் அந்த வங்கியின் ஒரு நபரும் பல இடத்தில் அலைந்து அந்த ஐம்பத்து வருட பதிவை பார்த்து இருக்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால்,என் தந்தையுடன் படித்த ஒரு முஸ்லீம் நபர் தான் இந்த இடத்திற்கு முப்பது வருடமாக சொந்தக்காரராக இருந்து இருக்கிறார்.அதற்க்கு முன் அவர் தந்தை.அவர் தந்தையின் பட்டா விபரங்கள் எங்களுக்கு பதிவாக கிடைக்காமல் அது ஒரு கைப்பிடி பத்திரமாக கிடைத்தது,அதை வங்கியில் ஒத்துக்கொள்ள வில்லை என்பதால் பதிவு நாள் தள்ளி போய் இருந்தது.

அதற்குள் அந்த வீட்டின் சொந்தகார பெண் எங்களிடம் வீட்டை சீக்கிரம் பதிவு செய்யும் படி சொல்லி கொண்டிருந்தார்.அதற்க்கு காரணம் அவர் தந்தை வீட்டை விற்க வேண்டாம் என்று சொல்லிவருவதாக சொன்னார்.நாங்கள் வாங்கிய தொகை பதினாலு லட்சம்.அதற்குள் பதினாறு லட்சம் தருவதாக சிலர் அவரை ஆசை வேறு கட்டி இருக்கிறார்.இதை எல்லாம் என் அம்மாவிடம் தினமும் போனில் கேட்டு வந்தேன்.ஆனாலும் அந்த பெண் தன் வாக்கு படி எங்களையே வாங்கி கொள்ளும் படி கேட்டு கொண்டார்.

நான் சேகரித்து வைத்து இருந்த பணத்தில் வாங்கலாம் என்றால் எல்லாம் ஷேர் மார்கெட்டில் நஷ்டத்தில் இருந்தது. தினமும் அந்த பெண் அம்மாவிடம் சென்று அழுது கொண்டிருந்தாக அம்மா கூறினார்.


வேறு ஒரு வங்கியை அணுகி பட்டா விபரத்தை சொன்ன உடன் அந்த வங்கியின் மேலதிகாரி சில விபரங்கள் வாங்கி கொண்டு சூமுகமாக முடித்தார்.அவர் சொன்ன விளக்கமும் பட்டா விஷயத்தில் ஆச்சிரியமாக இருந்தது. 1960 முன் முஸ்லீம் சட்டம் படி கைப்படி உயில் பதிவு செய்யப்பட்ட பட்டாவிற்கு நிகரானது என்று இந்திய அரசியலில் சட்டம் இருக்கிறது.எவ்வளவு பெரிய விஷயத்தை பழைய வங்கியில் எங்களுக்கு தெரிய படுத்தவே இல்லை.

பதிவு நாள் குறிக்க பட்டது.நானும் பஸ் ஏறி திருநெல்வேலி சென்று விட்டேன்.அங்கு என் பெற்றோருடன் சில உறவினர்களும் என்னுடன் வந்தார்கள்.அந்த பகுதி மக்கள் பலர் எனக்கு பரிச்சியம் என்பதால் பலர் என்னை நலம் விசாரித்து கொண்டிருந்தார்.பலர் நான் வீடு வாங்குவதில் பெருமை பட்டார்.எனக்கும் சந்தோஷமாக இருந்தது.நான் என்னும் அந்த வீட்டை பார்க்க வில்லை என்பது பலருக்கு தெரியாது.அப்பொழுது ஒரு பெண் அம்மாவிடம் அழுது கொண்டிருந்தது என் கண்ணில் பட்டது.

நான் அம்மாவிடம் நெருங்குவதை பார்த்து " இது தான் என் பையன் " என்று அம்மா அந்த பெண்ணிடம் கூறினார்.
அவர் நல்லா இருக்கீங்களா என்று கேட்டு வைத்தார்.

"அம்மா ஏன் அவங்க அழறாங்க "

அவங்க கட்டின வீடு அவங்க கஷ்ட காலம் வேலைக்கு கொடுக்குறாங்க !!


அம்மா சொன்ன வார்த்தை எனக்கு புரிந்தது.அந்த பெண் கைஎழுத்து போடும் பொது கூட நான் வேணா கிளம்பட்டுமா என்று கேட்டிருக்கிறார்.அவருக்கு விற்க மனம் இல்லை என்றாலும் தன் நிலை அவரை விற்க தூண்டி இருக்கிறது.அதற்க்கு காரணம் அப்பொழுது தெரியவில்லை.

பதிவு நல்லபடியாக முடிந்தது.நான் அப்பா அம்மா வீட்டை பார்க்க சென்றோம்.வீடு மலை அடிவாரத்தில் காற்றாலைகளுக்கு நடுவே இருந்தது இயற்கையை கொஞ்சுவது போல் இருந்தது.மிக இயற்கையான செம்மண் இருந்தது.வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு வந்து அமர்ந்தேன்.

அந்த பெண் எங்களுக்கு காபி கொடுத்து விட்டு தன் கதையை சொன்னார்.தன் கணவர் இந்த வீட்டை தன் அக்கா பெயருக்கு எழுத நினைப்பதாலும்,தன் மகன் மற்றும் மகளுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாததாலும் தான் விற்கிறோம் என்று கூறினார்.


அந்த பெண்ணின் மகன் பெயர் கார்த்திக் .அந்த கார்த்திக் உள்ளே நுழையும் போது " அம்மா " என்று கத்தி கொண்டே நுழைந்து எங்களை பார்த்த உடன் அமைதி ஆகி விட்டான்.


உள்ளே தன் அம்மாவிடம் சென்று " அம்மா நீங்க அடிக்கடி சொல்ற அண்ணன் இவங்க தானா ? கம்ப்யூட்டர் படிச்சு இருக்காங்களே !!!'


அந்த பெண் எங்களிடம் வந்து அதை கூறினார்.தன் மகனின் படிப்பு செலவு முழுவது பள்ளியே பார்த்து கொள்கிறது என்று சொல்லும்போது அவர் கண்கள் கலங்கி விட்டது.அவர் வறுமை என்னை கொஞ்சம் யோசிக்க வைத்து கொண்டிருந்தது.என்னால் எதுவும் ஆறுதல் சொல்ல முடியவில்லை.அந்த வீடு முழுவதும் பரிசு பொருட்களாக இருந்தன.அவர் அனைத்தும் தன் மகனும் மகளும் வாங்கியது என்று கூறினார்.

நாங்கள் கிளம்பும் முன் எங்களிடம் எந்த வங்கியில் வட்டி அதிகமாக தருவார் .எந்த வங்கியில் வைப்பு நிதி போடலாம் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.அவர் அடுத்த மதாம் வீட்டை கலி செய்து விடுவதாக கூறினார்.எனக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை.

நீங்க எவ்வளவு நாள் கழிச்சு காலி பண்றீங்களோ அப்ப காலி பண்ணுங்க ...ஒன்னும் பிரச்சனை இல்ல " என்று என் தந்தை சொன்னது ஆறுதலாக இருந்தது.

நீங்க வேணும்னாலும் இந்த வீட்லயே வாடகைக்கு இருங்க ...என்ன வாடகை தர முடியுமோ தாங்க !! என்று என் அம்மா கூறினார்.அதை அந்த பெண் ஏற்க்கவில்லை.அவர் கூறிய வார்த்தைகள் பிரமிக்க வைத்தது

" இது இனிமேல் உங்க வீடுங்க .நான் இங்க இருந்தேன்னா ஊரு என்னை பேசும்.அதுக்கு மேல என்னாலையும் நான் கட்டின வீட்ல வாடகைக்கு இருக்க முடியாது.'


நாங்கள் கிளம்பினோம் .அப்பொழுது அவர் பெண் உள்ளே நுழைந்தார்.
' யாரு தெரியுமா இது ?"

தெரியல அம்மா '

இவங்க தான் இந்த வீட்டை வாங்கி இருக்காங்க !! இனிமேல் இவங்க தான் சொந்தகாரங்க '

அந்த பெண் எங்களை பார்க்க வில்லை நேராக உள்ளே சென்று விட்டாள்.எனக்கு அந்த செயலின் அர்த்தம் புரிந்தது.
+++++++++++++++++முற்றும்+++++++++++++++++++++++++++++++++++++++

7 comments:

Vinoth Pradeep said...

you have hammered lots of things this time... good one mamu..

btb Congrats da Karthi :)

Vinoth Pradeep said...

konjam information, konjam personal allatal, neriaya emotions... Well done mamu.. keep it up

Karthik said...

thanks machi...

sathiyama ethula personal altal ellaye...anyway thanks

Sriram said...

Enanda ithu.ehtu eppa nadanthathu... ithu sonda kadaiya siru kathaiya... anyways it sounds interesting to read.. So ur parents are staying there only??

Anonymous said...

Congrats for the new house machi. Ur words are clearly depicting the Ex- owner lady's feelings. Another nice 1 from u,, Veettai katti paar, kalyanam panni paar, nnu there is a saying in tamil. Now u bought the house ,, so next one is ur ????????

Karthik said...

@ Sriram...

ithu nadanthu oru varam aatchu..machi ithu sirukathai ella..ethu unmai kathai..no masala added.

Karthik said...

@ hussain

thanks machi..kalyanama ...not intrested atleast for now...still young man