கோனார் கடையில் வாங்கி கொண்டு வந்து ரூம் நம்பர் 302 இல் வைக்கும் பொழுது மதியின் நண்பர்கள் சோர்வாகி இருந்தார்கள்.அவர்கள் அனைவரும் கொஞ்சம் களைப்பு தெளிந்த உடன் எங்கள் கச்சேரி ஆரம்பித்தது.


விவேக்.சஞ்சீவ்,அபினவ்,மதி.ஜெகன்.எஸ் .கே ,நான் .


டீசெர்ஸ் திறந்த உடன் ஸ்காட்ச் வாசம் பற்றி கொண்டது.கச்சேரி மெதுவாக சாப்பாட்டில் இருந்து சினிமாவுக்கு தாவி கடைசியில் அவர்கள் கண்ணீரில் முடித்தார்கள்.சாப்பாட்டில் காரம் அதிகம்.


அடுத்த நாள் திருவாளர் மதிக்கும் ,ஆர்த்திக்கும் திருமணம்.நண்பர்கள் ,அவர்கள் பெற்றோர்கள் எல்லோரும் இருக்க மதியையும் ஆர்த்தியையும் நான் போட்டோ எடுத்து தள்ளினேன்.எனக்கு பழக்கமே இல்லாத ஒரு கலை.புகைப்பட கலை.


என் நண்பன் மதி எழிலுக்கும் ,ஆர்த்திக்கும் என் வாழ்த்துக்கள்.


மதியும் Married Men கிளப்பில் சேர்ந்து விட்டான்.நான் இப்பொழுது தனித்து விடப்பட்டேன்.

மதுரையில் இருந்து கிளம்பும் போழ்து குரு பிரசாத்தில் சில்லி பரோட்டா சாப்பிட்டு விட்டு வயிறு நிரம்ப பஸ் ஏறினேன்.இரண்டு நாள் முடிந்தது.நிறைவாக உண்டு,கேலி பேசி முடிந்தது.எல்லாம் நிறைவாக இருக்க மதுரையை தாண்டும் வரை எதையோ என் மனம் தேடி கொண்டிருந்தது.

0 comments: