அசைவ உணவு பிரியர்களுக்கு

கொஞ்சம் காய்ச்சல்.அதனால் சரியாக பதிவு செய்ய முடியவில்லை.மதுரையில் இருந்து திரும்பி இருக்கிறேன்.மதுரை மண்ணை மிதித்து மாதங்கள் ஆனாலும் அந்த நினைவுகளும் அந்த பொழுதுகளும் செழுமையாக இருப்பது உண்மை.என்னடா இவன் மதுரை மதுரை என்று மாரடித்து கொள்கிறான் என்று கொள்பவர்களுக்கு என்னால் முழுமையாக பதில் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு சின்ன பதில் Madurai is always closer to my heart.


என் நண்பன் மதியின் கல்யாணத்துக்கு வெள்ளிக்கிழமை இரவே சென்னையில் இருந்து கிளம்பிவிட்டேன்.நண்பன் எஸ்.கே குடும்ப சகிதமாக வெள்ளி கிழமை ரயில் ஏறி இருந்தான்.மதுரை வந்து சேர்ந்த உடன் என்னை அழைத்து செல்ல மதி தன் சொந்தக்காரரிடம் சொல்லி ஒரு கார் அனுப்பி இருந்தான்.எஸ்,கே தங்கி இருந்த ஐயர் பங்களா இடத்திற்கு சென்று குளித்து விட்டு நாங்கள் முருகன் இட்லி கடைக்கு கிளம்பினோம்.


இந்த முறை மதி கல்யாணத்தில் சாப்பிட்டது ஒரே ஒரு வேலை.மதுரையில் பிறந்து வெளி இடத்தில் வேலை செய்யும் எவரும் மதுரை வந்தால் வீட்டில் சாப்பிடுவது இல்லை என்று ஒரு பெரிய குற்றச்சாட்டு உண்டு.அது உண்மை.மதுரையில் உணர்ச்சிகளையும் ,உண்மைகளையும் தாண்டி பிடித்து உணவு.மதுரையின் உணவை ரசிக்க பொழுதுகள் கடன் வாங்கி உண்ண வேண்டும்.


மதுரையில் எனக்கு பிடித்த உணவு கோனார் கடை.நான் sales இல் இருக்கும் பொழுது பல நாட்கள் கோனார் கடையில் சாப்பிட வேண்டும் என்பதற்க்காக பல பொழுதுகள் மதுரைக்கு வந்து இருக்கிறேன்.கோனார் கடையின் பதிவாக இருந்தாலும் சில விஷயங்களை இங்கு சொல்ல வேண்டும்


நான் மதியின் நண்பர்கள் பெங்களூரில் இருந்து வருபவர்களுக்காக சில ஸ்பெஷல் உணவு வாங்க கோனார் கடை சென்று இருந்தேன்.அவர்கள் அனைவரும் வட இந்தியர்கள் என்பதால் அவர்களுக்கு மதுரை கறியின் சுவை அறிந்து இருக்க வாய்ப்பில்லை.


மதியிடம் சண்டை போட்டு நானும் எஸ்.கே வும் ஒரு மூவாயிரம் ரூபாய் வாங்கி கொண்டோம்.அவன் நண்பர்களை சாக்கு சொல்லி வாங்கிய விதம் அருமை ஆனால் அதில் ஒரு டீசெர்ஸ் ஒரு பாட்டில் வாங்கியதே ஆயிரத்தி ஐந்நூறு ரூபாய் கரைந்து விட்டது .


"கல்யாணத்துக்கு முந்தைய தினம் மாப்பிளை சரக்கு எல்லாம் அடிக்க கூடாது "


ஆமாம் டா !!!


படு பாவிகளா என்னைக்காவது டீசெர்ஸ் ஸ்காட்ச் எல்லாம் எனக்கு வாங்கி கொடுத்து இருக்கீங்களா " மதியின் ஏக்க குரல் .


மச்சி ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ இது எல்லாம் எங்களுக்கு இல்ல ,உன் Office collegues க்கு


நம்பிட்டேன் டா நம்பிட்டேன் டா


நான் கிளம்பினேன் .கோனார் கடையை நோக்கி .அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கோனார் கடை கொஞ்சம் சிறியது .அங்கு கூட்டமும் கொஞ்சம் கம்மியாக தான் இருக்கும்.


என் Menu ஏழு கறி தோசை ,ஐந்து முட்டை பொறியல்,ஐந்து லிவர் பிரை,மூளை குழம்பு,குடல் வறுவல் ஏழு,முட்டை தோசை பத்து.ஆர்டர் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கு இருந்தவரிடம் பேச்சு கொடுத்து வந்தேன்.அதில் சில


1.கோனார் மெஸ் ஆரம்பித்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது
முதன் முதலில் அதை நிறுவியவர் மாணிக்க கோனார் ,அதன் பிறகு சுந்தர கோனார் இன்றளவும் அதை நிர்வகித்து வருகிறார்.


2.பெரியார் சிம்ம கல் அருகில் உள்ள கோனார் கடையில் அவரை பார்க்கலாம்
3.கோனார் கடையில் உள்ள எல்லா கறி வகைகளும் அவர்கள் சொந்தமாக வளர்த்தவை.அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களால் சுத்தமாக கறி வகைகளை செய்ய முடிகிறது.


4.கோனார் கடை மதுரையில் மூன்று இடத்தில் மட்டுமே இருக்கிறது, மேல் கூறிய இடங்களை தவிர பெரியார் ரயில் நிலையம் அருகில் புதியதாக துவங்க பட்டுள்ளது .
5.ஒரு செய்தி.கோனார் கடையில் புரோட்டா கிடைகாது.இட்லி தோசை மட்டுமே.
6.கோனார் கடையில் உள்ள எந்த உணவிலும் வெங்காயத்தை காண முடியாது.அவை தெரியாத அளவிற்கு சேர்க்க பட்டிருக்கும்.


என்னடா இவன் ஏதோ விளம்பரம் போல் சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.கோனார் கடை ருசி அதை பற்றி கண்டிப்பாக பேச வைக்கும்.

அடுத்த பகுதியும் மதுரை தொடரும்

7 comments:

Anonymous said...

enna solla.....nyabagam varuthe nyabagam varuthe...

All first time visitors to Madurai and Non Vegeterians should tast Konar Kari Dosai........Its called taste......hmmmmmmmmmmm

Vinoth Pradeep said...

மச்சி, படிக்கும் போதே வாய்ல எச்சி உறுது டா...

machi sriram sorry da.. enga area ulla varatha :P.

Karthik said...

@Aslam

he he ...i know we are missing those MBA days

Karthik said...

@Vinoth

try once u will never forget it in life

Sriram said...

Hello karthik
Did you know that even i have tasted food in konar kadai in koripalayam opposite to american college. i really did not know that they are famous for non-veg.Somehow i thought its a good vegetarian mess and when i stepped it, i was alouded with all non-veg menu options. The persons who was listing these read my face expressions and immediately brought idli with sambar. He also told that its pure veg. that was very nice of him as he did all this perfectly without me uttering even a word. Thats really a good experience which is everlasting in me.......

Karthik said...

@Sriram

Surprising ? Thats Madurai for u...:)

Several tips said...

சூப்பர் பதிவு