எத்தனை விஷயத்தை உலகில் ரசித்து இருப்பாய் நீ .எத்தனை விஷயங்களை நீ தவற விட்டு விட்டாய் நீ.இந்த இளமையும் ,அழகையும் வைத்து நீ உன் மனதை காய படுத்திக் கொண்டாயே தவிர நீ பூரிக்கவில்லை.
பிரியா நீ என்ன பெரிய அழகியா!! இல்லை அழகு தான் உனக்கு முக்கியமாக என்றாவது பட்டு இருக்கிறதா.அந்த நாட்கள் எல்லாம் மறந்து போனாலும் அதற்க்கு முந்தைய நாட்கள் நினைவில் இருக்கிறதா? அப்பா அம்மா கல்லூரி ,பெண் என்ற ஒரு உணர்வு உனக்கு மேலிட்ட நாட்கள்.நீ உன் நிலையில் தெளிவு கொண்ட பொழுது தான் உன் பாதைகள் மாறி விட்டது.
கடந்த காலம் என்பதை ஒரு முடியாத உடலுறவு(Failed Orgasm) போல் மறந்து விடவேண்டும்.இந்த ஆண்கள் எல்லாம் ஒரு முறை கிளைமாக்ஸ் கிடைக்க வில்லை என்றால் தனக்கு ஆண்மை இல்லாதது போல் துவண்டு விடுவார்கள் அது போல் தான் உன் நிலையும்.அடுத்தும் உறவு இருக்கிறது என்பதை மறந்து விட்டு!! ஆண்மையும் பெண்மையும் இரண்டு பெரிய துருவங்கள் தான் .ஆனால் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை அந்த பிரிவுகள் தான்.பிரிவுகளையும் மாற்றுவது தான் உன் எண்ணங்கள்.
யாரோ தனக்கு உபதேசம் கொடுப்பது போல் இருக்கிறது அவளுக்கு.அவளுக்கு சிகரட் பழக்கம் இல்லை.குடித்தும் பழக்கம் இல்லை.ஒரு முறை பீர் அடித்து இருக்கிறாள்.அதற்கே அவள் தலை சுற்றி மயங்கியும் போய் இருக்கிறாள்.அவளுக்கு புத்தகம் படிக்க தெரியாது.கவிதை எழுத வராது.சினிமா பார்ப்பாள் ,ஆனால் என்றாவது ஒரு படம் நூறு நாள் ஓடினால் நூற்றி பத்தாவது நாள் போய் பார்ப்பாள் .இசை என்றால் அவளுக்கு தெரிந்தது இளையராஜா ,ரஹுமான்.வேறு அதிகமாக தெரியாது.அவளுக்கு அதிகமாக எதுவும் தெரியவில்லை என்று அவள் என்றும் நினைத்தது இல்லை.அவளுக்கு நன்றாக வரைய தெரியும்.தன் கற்பனை முகங்களை அவள் வரைந்து வைத்து இருப்பது வீடு முழுவதும் இரைந்து இருக்கும்.என்றாவது வரையலாம் என்று உட்காரும் போது மனோவின் பசி அவளை படுக்கைக்கு கொண்டு சென்றுவிடும்.
வாழ்க்கை மனோவை தாண்டி இருக்கிறது என்று இன்று தான் உணருகிறாள்.
நேராக வண்டியை கொண்டு போய் சர்வீஸ் விட்டுட்டு ஒரு ஆட்டோ எடுத்துட்டு ஆபீஸ் போய்ரலாம்.என்ன கருமம் ஒரு நூறு ரூபாய் கேட்பான்.சயந்திரம் அடையார் போய் பாக்கலாம் கண்டிப்பாக கிடைக்கும்.சிவா கிட்ட போன் பண்ணி அவனை வந்து செலக்ட் பண்ண சொல்லலாம்.இல்ல வேண்டாம் அவன எதுக்கு தொந்தரவு செஞ்சுக்கிட்டு.
நேராக வண்டியை கொண்டு போய் சர்வீஸ் விட்டுட்டு ஒரு ஆட்டோ எடுத்துட்டு ஆபீஸ் போய்ரலாம்.என்ன கருமம் ஒரு நூறு ரூபாய் கேட்பான்.சயந்திரம் அடையார் போய் பாக்கலாம் கண்டிப்பாக கிடைக்கும்.சிவா கிட்ட போன் பண்ணி அவனை வந்து செலக்ட் பண்ண சொல்லலாம்.இல்ல வேண்டாம் அவன எதுக்கு தொந்தரவு செஞ்சுக்கிட்டு.
சயந்திரம் ஐந்து மணி அளவில் பிரியா கிளம்பும் போது பலர் அவளை ஓர் பரிதாப கண்ணோடும்,ஒரு சிலர் ஒரு இனம் புரியாத கவர்ச்சியுடனும் பார்த்தார்கள்.ஆபீஸில் பலர் அவளிடம் வழிவது இப்பொழுதெல்லாம் அதிகம் ஆகி விட்டது.விவாகரத்து ஆன மூன்றாவது நாளில் இருந்து இந்த நிலை தான்.அவளுக்கு மற்றவர்கள் எல்லாம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்தது.விவாகரத்து ஆன பெண் என்றால் தேவடியா என்று அர்த்தமா என்ன ?
ஆட்டோ அடையார் அம்பிகா அப்பளம் டிபோட் அருகில அவளை இறக்கி விட்டு சென்றது.அவள் ஒரு நூறடி தூரம் நடக்க வேண்டி இருந்தது.அடையார் அவளுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இடம்.
" எஸ் மேடம் "
ஐ அம் ப்ரியா
ஆமா நீங்க தான் கூப்பிட்டு இருந்தீங்க இல்ல?
எஸ் எஸ்
திஸ் வே மேடம்
ஐ அம் ப்ரியா
ஆமா நீங்க தான் கூப்பிட்டு இருந்தீங்க இல்ல?
எஸ் எஸ்
திஸ் வே மேடம்
இவன் ஏன் ஒரு பெண் மாதிரி பேசுகிறான்.இவன் ஆளுக்கும் இவன் Bodylanguageக்கும் சம்பந்தமே இல்லை .இவன் குரலும் ஏன் இப்படி.என்னவெல்லாமோ யோசிக்கிறேன்.வந்த வேலையை தவிர ஏன் இந்த சிந்தனை.
யப்பா என்ன அழகா மெயின்டைன் பண்றீங்க ,எல்லாம் அவ்வளவு அழகா இருக்கு.ஏன் எல்லாம் எவ்வளவு அமைதியா இருக்காங்க .
அவங்க கிட்ட தான் கேட்கணும்.
ஓகே.நான் உங்க உதவி வேணும்னா கூபிட்றேன்.நான் ஒரு தடவை சுத்தி பார்த்துக்கிறேன்.
ஓகே ஓகே
ஹே ஹவ் ஆர் யு.
ஹே ஹே
சுப் சுப்
அந்த இடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது.ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு வந்து நின்றாள்.மறுபடியும் பார்த்தாள்அவளுக்கு அமைதியாக கருப்பாக ஓரமாக அமர்ந்து இருந்தவர் தான் பிடித்து இருந்தது.
ஐ வில் ஹவ் ஹிம் (I will have him)
ஆன மேடம் அவர் கொஞ்சம் முசுடு ,பட் ஹி இஸ் வெரி ஸ்வீட்.
எஸ்.ஹி இஸ் வெரி ஸ்வீட்.I feel he is looking at me with a intimacy.
அந்த இளைஞன் கூண்டை திறந்த போது அந்த கருப்பு நாய் அவளை பார்த்து வாலாட்டியது அவளுக்கு சந்தோசத்தை தந்தது.
எவ்வளவு நாள் ஆச்சு.
ஒரு இருபத்து நாள் இருக்கும் ,கரெக்ட் ஆன DOB சொல்றேன்
எஸ்
எவ்வளவு அழகா இருக்கான்,என்னைய அப்படியே புரிஞ்சிகிட்டு அமைதியா நிக்கிற மாதிரி இருக்கு.
Do you know me ? என்று ப்ரியா அந்த சிறிய நாய்குட்டியை எடுத்து கொஞ்சினாள்.அது அவளை நக்க ஆரம்பித்தது.அவளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் நேர்ந்தது.
அவளை கையில் எடுத்த வுடன் அந்த இளைஞன் விளக்குகள் எல்லாவற்றையும் அழுத்தினான்.அவள் உலகமே பிரகாசமாக தெரிந்தது போல் இருந்தது.
யு ஹவ் காட் லைட்
எஸ்
what are you going to name him?
லாஸ்
அப்படின்னா
வெளிச்சம்
கிரேட் ,suits perfect for him.
அப்படின்னா
வெளிச்சம்
கிரேட் ,suits perfect for him.
அவள் லாஸ் க்கான பணத்தை கட்டி கொண்டு வெளி ஏறினாள்.
லாஸ் அமைதியாக ஆட்டோ வில் அவள் மடியில் தூங்கி கொண்டு வந்தது.

4 comments:
anna...kalkuringa....naaval padikra maathiri iruku....
dirty minds... ;) twist was good...
So u liked it...Good..thanks man...
Dirty mind? I didnt intend to confuse but i wanted to keep Laz as a surprise...it so gave different thoughts.:)
நண்பா கார்த்திக்
கதை மிக சுவராஸ்யமாக நடை போடுவது உண்மை. ஒரு சின்ன வேண்டுகோள். ஒரு சில வார்த்தைகளை வரைமுறை படுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.
@ sriram...i agree i got the same feedback from many..will try to do that for sure
Post a Comment