லாஸ்
லாஸ்
லாஸ்
லாஸ்
கத்தி பார்த்து விட்டேன்.என் வீடு அவனுக்கு புதிதாக தெரியவில்லை.உள்ளே ஓடினான் .ஏதோ ஒரு இடத்தில் வழுக்கி விழுந்தான்.அவன் என்னும் ஒழுங்காக கூட நடை பழக வில்லை.அவனுக்கு அந்த மொசைக் தரைகள் கஷ்டமாக இருந்தது.ஓடி சென்று என் படுக்கை அறைக்கு சென்றான்.

ஹலோ எங்க இருக்கீங்க என்று கத்திய உடன்,கட்டிலில் அடியில் இருந்து ஓடி வருகிறான்.கொஞ்சம் பிஸ்கட் போட்டேன்.சாப்பிட்டு விட்டு துப்பி விட்டான்.சாப்பிட தெரியவில்லை.பால் தட்டில் வைத்தால் குடித்தான்.அவன் குடிக்கும் பொழுது சத்தம் வந்தது.

லாஸ்

என்றால் கொஞ்சம் தலையை நிமிர்ந்து பார்த்தான்.ஒரு முறை குளைத்து பார்த்தான்.சத்தம் அதிகமாக இருந்தவுடன் நிறுத்தி விட்டானோ என்னவோ.என் அருகில் வந்து என் கால்களை நக்கி பார்த்தான்.நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்று பார்த்து கொண்டிருந்தேன்.

அவன் இதோ அந்த பத்திரிக்கையை ஏதோ செய்கிறான்.கிழித்து விட்டான்.அவன் பற்கள் ஊறுகிறது என்று நினைக்கிறேன்.வளரும் பற்கள்.அவன் துடைக்கும் நாபை கடித்து பார்த்தான்.அது அவனுக்கு சரி வரவில்லை.

அந்த வீடு அவனுக்கு பெரிய மைதானம் போல் இருந்தது.தீம் பார்க்கில் விட்ட குழந்தை போல் சுற்றி கொண்டிருந்தான்.அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தான்,

அவன் போக்கில் விட்டு விட்டு பார்த்தேன்.எல்லாம் ஆடி முடிந்த வுடன் என் அருகில் வந்து நின்றான்.அவனுக்கு என்னை தெரிந்தது போல் தன்னை தூக்கி கொள்ளுமாறு நின்று கொண்டிருந்தான்.

நான் அவனை என் மடியில் வைத்து கொண்டு அவன் மீது என் கைகளை வைத்து கொண்டிருந்தேன்.தூங்கி இருக்கிறேன்.மணி பதினொன்றை தாண்டி விட்டது .

லாஸ் லாஸ்

லாஸ் என் மடியில் இல்லை.தேடி பார்த்தால் அவன் செருப்புகள் வைக்கும் இடத்தில் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தான்.

இங்க என்ன பண்ற ?

மனோவின் செருப்புகளை துண்டு துண்டாக கிழித்து கொண்டிருந்தான்.எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.என் கைகளால் தொட வேண்டாம் என்று இருந்த பொருட்களை லாஸ் கிழித்து எரிந்தது எனக்கு ஒரு திமிரை கொடுத்தது.

டேய் என்ன பண்ற ?

ஒரு முறை என்னை பார்த்து மறுபடியும் ஏதோ குளைத்து விட்டு சொன்னது போலிருந்தது.

நான் படுக்க சென்றேன்.என் பின்னே வந்தான்.

குட் நைட் லாஸ் ! என்று அவனை ஒரு சிறிய தலை மெத்தையில் படுக்க வைத்தேன்.அன்று தான் பல நாட்கள் கழித்து ஒரு சிரிப்புடன் தூங்க முடிந்தது.

சிவா நீ வந்து பார்க்கவே இல்லை ?

எஸ்

என்னைக்கி வர்றியா

இல்ல பிரியா அப்புறம் வரேனே

லாஸ் என்ற நண்பனின் அருகாமை நன்றாக இருந்தது,அவனிடம் நான் பேசி கொண்டிருப்பது ஒரு வழக்கமாக இருந்தது.யாரும் லாசை இதுவரை பார்த்து இல்லை.ஏன் என்றால் யாரும் என் வீட்டிற்க்கு வரவில்லை.லாஸ் இருப்பதால் எனக்குள் ஒரு நிமதியும் இருக்கிறது.தைரியமும் இருக்கிறது.

தினமும் அவனுடன் வாக்கிங் செல்லலாம் என்று திர்மானித்து கொண்டேன்.அவனுக்கு ஒரு ரப்பர் பெல்ட் வாங்கி மாட்டினேன்.நன்றாக வளர்ந்து விட்டான்.இரண்டு மாதம் ஆகி விட்டது.என்ன கொடுத்தாலும் சாப்பிடுகிறான்.என்னும் தரை அவனுக்கு வழுக்கி தான் விடுகிறது.என் செருப்புகளை எல்லாம் ஒன்றும் கிழிப்பது இல்லை.பத்திரிக்கைகளை துண்டு துண்டாக கிழித்து எறிகிறான்.

வா போகலாம்

நானும் ஒரு டி ஷர்ட் ஜீன்ஸ் போட்டு கொண்டு லாசை கூட்டி கொண்டு கிளம்பினேன்.அருகில் உள்ள பலர் ஒரு வித்தியாசமாக பார்த்தார்கள்.லாசும் என் அருகிலே நடந்து வந்தது.நான் பார்க் வந்து சேரும் பொழுது மணி ஆறாகி இருந்தது.

ஹே நைஸ் டாக்

?????

யாரிவன் ,எதற்கு லாசை கொஞ்சுவது போல் என்னை பார்த்து கொண்டிருக்கிறேன்.லாசும் அவனை பார்த்தால் கொஞ்சுகிறது.

லாஸ்
ஒ லாஸ் !

கொஞ்சம் அருகே உட்கார்ந்து பார்த்து விட்டு,ஹி இஸ் எ மேன்.
லாஸ் அவனுக்கு கால்களை வைத்து வாழ்த்து சொல்லியது வித்தியாசமாக இருந்தது.

நான் லாசை இழுத்து கொண்டு நடந்தேன்.அவனை எனக்கு பிடிக்கவில்லை.அவன் ஏதோ ஒரு ராக் மியூசிக் படுபவன் போல் இருக்கிறான்.அவன் குரலே ஏதோ ஒரு மயக்க மருந்து போல் இருக்கிறது.கிறங்கி கிறங்கி பேசுகிறான்.யாரிவன் எதற்கு என்னை இப்படி நின்று பார்த்து கொண்டிருக்கிறான்.

ப்ரியா கூல் கூல்

ஓர் சுற்று பார்க்கில் நடந்து வந்தேன்.ஒரு மணி நேரம் ஆகி விட்டது.அவனை காணவில்லை.லாஸ் யாரையோ பார்த்து கூப்பிட்டான்.அவன் தான் ,அவனே தான் ,ஏதோ புகைத்து கொண்டிருக்கிறான்.
என் அருகில் வந்து நிற்க்கிறான்.

ஹாய் ஐ ஆம் யோகி !

0 comments: