அந்த அலைவரிசையில் அவள் சங்கமித்து செல்ல விருப்பம் இல்லை,ஆனால் ஒரு அளவிற்கு ஒரு தோய்வை போக்கி இருந்தது.அதற்கு அவள் ஒன்று யோகியை அவள் நன்றியோடு எல்லாம் நினைத்து பார்க்க வில்லை.அதற்க்கு அவளுக்கு தேவையும் படவில்லை.
யோகியை வீடிற்கு கூப்பிட்டதும் அவள் அவனிடம் பேசியதும் நடந்து இருக்க வேண்டிய ஒரு சம்பவம் தான் அதற்க்கு என்ன நன்றிகள் வேண்டி இருக்கிறது.
அவன் ஏன் என்னிடம் பேசினான் ! நாம் தானே அவன் பேசியதற்கு பதில் சொன்னோம்.ஆமா கேள்வி இருந்தால் பதில் இருக்கணும்.சரி நீ ஏன் இப்ப டென்ஷன் ஆகிற .ஆமா டென்ஷன் ஆகிறதுக்கு இதுல ஒன்னும் இல்ல.அவன் ஏன் எப்படி இருக்கான்.எப்படி நாம வரையறது எல்லாம் அவனுக்கு தெரிஞ்சி இருக்கு.அவன் ஏதோ சொல்லிட்டான்.அதனால நாம இம்ப்ரஸ் ஆகிட்டோமா என்ன ? இல்ல அவன பார்த்த கொஞ்சம் கரடு முரடான ஆளா தான் தெரியுது.ஆனால் ஏன் ஒரு மாதிரி சிரிக்கிறான்.முடிய வேற வளர்த்து போட்ருக்கான்,எனக்கு கூட அவ்வளவு முடி இல்லை.அவன் பக்கத்தில ஒரு நல்ல ஸ்மெல் வந்துச்சு.I POD வைத்து இருந்தான்.எதாவது ஒரு இங்கலிஷ் பாட்டு கேட்பான்னு நினைக்கிறேன்.அவன பார்த்த பார்க்ல வாக்கிங் வந்த மாதிரி தெரியல .நீ என்ன லாஸ் பாக்கிற ? நான் செஞ்சது ஓகே தானே ? இல்லையா ?
ஏன்டா எதுவும் சொல்லாம படுத்து இருக்க ? எனக்கும் தூக்கம் வருது போ !!
தூங்கிட்டேன் தூங்கிட்டேன்,இன்னைக்கி சண்டே தானே !! வாக்கிங் வேண்டாம்.ஆனால் யோகி வந்து இருப்பானோ ,அவன் தான் வீட்டுக்கு வர்றானே,எத்தனை மணிக்கி வர்றான் தெரியலையே !
அந்த ஒரு முறை அவன் வரும் பொழுது அவளது நடவடிக்கைகள் எதுவும் அவன் பக்கம் இல்லை.அவனிடம் அவன் வீட்டு விலாசம் கொடுத்து கூட ஒரு படபடப்பில் தான் .ஆனால் அவன் மிக மிக சாதரணமாக வந்து சென்று விட்டான்.பெரியதாக அலட்டி கொள்ளவில்லை.பிரியா அவன் வருகையில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள்.அந்த வீட்டில் பல மாதங்களுக்கு பிறகு பேச்சு குரல் இருப்பக்கம் இருந்து ஒலித்தது.
லாஸ் யோகியிடம் தஞ்சம் புகுந்து இருந்தான்.லாஸ் ப்ரியாவை அடிக்கடி பார்த்து ஒரு நமட்டு பார்வை வீசுவது போல் இருந்தது.
அங்க போய் உட்கார்ந்து கிட்ட நீ ? என்று பிரியா சொன்னது கண்டிப்பாக லாசிர்க்கு புரிந்து இருக்கும்.
யோகியை அவளுக்கு பிடித்து இருந்தது.அந்த பிடித்ததிற்கு அவன் குரலும் ஒரு காரணம்.அவன் குரல் அவளை ஏதோ செய்து விட்டது உண்மை.அவன் தேர்ந்து எடுக்கும் வார்த்தைகளும் ஒரு வித்தியாசமாக தான் இருந்தது.
' இந்த லாசிர்க்கு என் ஸ்பரிசம் ரொம்ப பிடிச்சு இருக்குன்னு நினைக்கிறேன்"
'பொண்ணுங்க தொடுற கலர்ஸ் கொஞ்சம் அள்ளிட்டு போற மாதிரி தான் இருக்கு"
"எத்தனையோ பார்த்தாலும் அந்த ஆளில்லாத ரோட்டில் ஒரு பெண் கொஞ்சம் எனக்கு ஏதோ செய்ற மாதிரி இருக்கு "
ஆனால் அவன் அந்த வார்த்தை ஜாலத்தில் விழுந்து விட ஒன்றும் முட்டாள் இல்லை.பிரியா ஒரு தெளிவானவள் என்று அவளுக்கு ஒரு நினைப்பு உண்டு.பிரியா உண்மையில் யோகியின் திடீர் சிநேகத்தை ரசிக்கிறாள்.ஆனால் அதில் ஒரு எச்சரிக்கை இருக்கிறது என்பதையும் உணர்கிறாள்.அந்த எச்சரிக்கை அவளை நிலை கொள்ளாமல் தவறு செய்ய தூண்டு விடுமோ என்று கூட நினைக்கிறாள்.தான் என்ன செய்தலும் தவிறில்லை என்ற நினைப்பு கூட அவளிடம் தெரிகிறது.
யோகி நீங்க ஏன் இவ்வளவு முடி வளர்கிறீங்க ?
ஓகே எனக்கு முடி வைக்கிறது ஒன்னும் பெருசா விருப்பம் இல்ல ,ஆனால் இந்த முடிக்கு காரணம் ஒரு ஆழ்ந்த சிந்தனைன்னு வட்சுக்கலாம்,ஏன் னா இதுக்கு காரணமே இல்ல !!
யோகி எப்பவும் எப்படி தானா
எப்பவும் இப்படி இல்ல ,யாரையாவது என்னை பார்த்து ரொம்ப impressஆகிட்டா இப்படி பேசுவேன் !!
யாரு Impress ஆனா இப்ப ?
நீங்க impress ஆகல ,அப்ப லாஸ் Impress ஆகிட்டான் ன்னு வட்சுக்குவோம்
லாஸ் ஒன்னும் Impress ஆகல
அவன் கிட்டயே கேட்போம்
மெதுவாக கிண்டலும் கேலியும் லாசை சாக்காக வைத்து ஆரம்பித்தது.
"பிரியா இன்னைக்கி ஒரு ஷோ இருக்கு ,இட்ஸ் எ கலேரி ஆர்ட் ஷோ ,போய் பாருங்க நான் டிக்கெட் அனுப்புறேன் " என்று ஒரு டிக்கெட் மெயில் அனுப்பி வைத்தான் யோகி.
"இன்னைக்கி கண்டிப்பா போகனுமா ? அவன் வர மாட்டான் ஒரு டிக்கெட் தான் இருக்கு.நாம என்ன பண்ண போறோம் போகலாம் !!"
அழ்வர்பேட்டையில் உள்ள ஒரு அரங்கத்தில் அந்த ஆர்ட் ஷோ நடந்தது.அவளுக்கு பரிச்சயம் இல்லாத கூட்டமாக தெரிந்தது.ஆனாலும் அவன் யோகி சொன்ன வார்த்தைகளை நம்பி உள்ளே சென்று பார்த்தாள்.அத்தனையும் ஓவியங்கள் .பல தரப்பட்ட ஓவியங்கள்.அதில் பல ஓவியங்கள் புரியாத வண்ணமாக இருந்தன.
மெதுவாக ஒவ்வொரு ஓவியமாக பார்த்து கொண்டு நடந்தாள் .யார் வரைந்து இருக்கிறார்கள் என்று மெதுவாக தன் தலையை குனிந்து படித்தாள்.சில பெரிய மனிதர்கள் சில குறிப்பு எடுத்து கொண்டிருந்தார்கள்,சிலர் விளக்கம் சொல்லி கொண்டிருந்தார்கள்.அவன் தனியாக நகர்ந்து கொண்டிருந்தாள்.
ஒரு ஓவியத்தில் ஒரு பெண் தன் தலை முடியில் ஒரு பூவை சூடி கொண்டிருக்கும் பொழுது அந்த பூக்கள் கீழு விழுவதும் அதை அவன் தடுக்க முனைவதும் போல் இருக்கும் ஓவியம் எதையோ சொல்ல வருவது போல் இருந்தது.அதற்கு தடங்கள் என்று பெயர் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.அவன் அதை முழுவதும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.சுற்றி பார்த்தும் அவளுக்கு தெரிந்த உருவங்கள் எதுவும் தென்படாமல் இருந்தது.கிழே குனிந்து யார் வரைந்து இருக்கிறார்கள் என்று பார்த்தாள் . "யோகி " என்று தெளிவாக எழுதி இருந்தது.நம்ம யோகியா ?
அது என்ன நம்ம யோகி ? எப்ப இருந்து நம்ம யோகி ஆனான் !
ஹலோ
திடுக்கிட்டு திரும்பினாள்.
யோகி ஒரு கிளாஸ் பழ ஜூஸ் கையுமாக நின்று கொண்டிருந்தான்.
நீங்களா வரைஞ்சீங்க
ஹ்ம்ம் அப்படி தான் போட்டு கிட்டேன்
நீங்க இவ்வளவு பெரிய ஓவியரா ?
உங்க அளவுக்கு இல்லங்க
ஹலோ என்ன கிண்டலா
உண்மைய தான் சொல்றேன்
ஹ்ம்ம் போதும் போதும்
எப்படி இருக்கு இந்த ஷோ
சிம்ப்லி சூப்பர்
எனக்கு என்னவோ நிம்மதியா இருக்கு
ஹ்ம்ம்
ரொம்ப ரசிட்சேன்
ஒரு டின்னெர் இருக்கு நீங்க கண்டிப்பா வரணும்
ஐயோ டைம் ஆச்சு ,லாஸ் க்கு வேற சாப்பாடு வைக்கணும் ,சம் அதர் டைம் ப்ளீஸ்
லாஸ் பேர சொல்லி தப்பிக்கிறீங்க ,அப்ப நாளைக்கி என் வீட்டுக்கு வர்றீங்க ,டின்னெர் நீங்களும் லாசும்
பாக்கலாம்
பிரியா கிளம்பும் வரை யோகி கூடவே இருந்தான்.
பிரியா கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தாள்.அதற்கு காரணம் அவன் யோகியின் அருகாமையை ஏன் இவ்வளவு சீக்கிரமாக ஏற்று கொள்கிறாள் என்று தெரியாமல்.
அடுத்த நாள் அலுவலகம் முடிந்து வரும் பொழுது யோகியின் நினைவு அவளுக்கு சரியாக வந்தது.லாஸ் அவன் வருகைக்காக காத்து இருந்தது .அவன் வந்த உடன் அவளை பார்த்து வாலாட்டிக்கொண்டு வந்தது.அதற்கு அவன் பகல் நேர பிரிவு கொஞ்சம் அதிகமாக தான் பட்டது.அவளும் லாசை கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு தன் ஆடைகளை களைந்தாள்.
கொஞ்சம் இளைப்பாறி விட்டு பால்கனி அருகே வந்து நின்றாள்.மனோ கண்ணில் தெரிந்தான்.

2 comments:
machi.. now-a-days you have started keeping some superub statements here and there.. for eg;பல மாதங்களுக்கு பிறகு பேச்சு குரல் இருப்பக்கம் இருந்து ஒலித்தது.. nice da.. loved that words.. Good Keep Going.
oh thanks...great man,u have noted that...Love ur motivation always :)
Post a Comment