மனோ கொஞ்சம் மெலிந்து இருந்தான்.என்னவோ புதியதாக ஒரு கண்ணாடி அணிந்து இருந்தான்.சிகப்பு கலரில் இருந்தது.அவன் பைக்கை மாற்றி விட்டான்.என்னை அவன் பார்க்க வில்லை.என்னால் வீட்டிற்க்குள் இருந்து கொண்டே மறைந்து இருக்க முடியும்.எதற்கு நான் அவனிடம் இருந்து மறைந்து இருக்க வேண்டும்.அவன் என்னை யோகியை பற்றி தெரிந்து வந்து இருப்பானா .எல்லாமே கொஞ்சம் சீக்கிரமாக போய் கொண்டிருக்கிறதா என்ன?
அவனை மூன்று மாதம் கழித்து பார்ப்பது கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது.எப்படி எல்லாம் இந்த உருவத்தை காதலித்தேன் ? என்னவெல்லாம் உருகினேன்.இன்று என் மனதில் அடியோடு ஒரு எண்ணமும் எழ வில்லையே .ஏன்?
இதோ வந்து விட்டான் !
ஹாய்
ஹே
ஹொவ் ஆர் யு
நல்லா இருக்கேன் ! "
எதற்கு வந்து இருப்பான்,எதாவது பிரச்சனை பண்ண வந்து இருப்பானா என்ன ?இருக்காதே
என்ன விஷயம்
நீ ஒழுங்கா இருக்கியா என்னனு பார்த்து ட்டு போகலாம்னு வந்தேன் !
"வாட் ?" எனக்கு கோபம் வருகிறது
அவன் நமட்டுச் சிரிப்பு எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.நான் ஆரம்பிப்பதற்குள் இதோ இந்த காகிதத்தை என்னிடம் தருகிறான்.அதில் என்ன வெல்லாமோ எழுதி இருக்கிறது.
நேஹா வ நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் ,அவளுக்கு விவாகரத்து வாங்கினது பத்தல! நீ என்னை எந்த விஷயத்திலும் இனி தொந்தரவு பண்ண மட்டே என்று கை எழுத்து வாங்க சொல்லி இருக்கா.அதாவது என் மேல ஒரு நிலம் வாங்கினோம் இல்ல ! அந்த பணம் முழுவதும் உன் பேங்க் அக்கௌன்ட் இல் இருந்து தான் கட்டினோம்.அதனால் அதில எதாவது பங்கு கேட்க அந்த மாதிரி பயப்படுறா?
எனக்கு எரிச்சல் வந்தது.
ஏன் மனோ உனக்கு மனசாட்சியே கிடையாதா,உனக்கு வேணும்னு கேட்டு வாங்கிக்கோ ,நான் தான் அன்னைக்கே சொல்லிட்டேன் இல்ல ,இதுக்கு மேல உனக்கு எனக்கும் எந்த தொடர்பும் கிடையாதுன்னு ,ஏன் மனோ நீ திருந்தவே மாட்டியா.
இப்பொழுது அவன் நேஹா பேரை வைத்து இங்கு வந்து இருக்கான்.அவனை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.அவனுக்கு காயத்தை கொஞ்சம் மீண்டும் மீண்டும் கிழித்து விட்டு பார்ப்பதில் அலாதி சுகம் .அவனிடம் இதை போல் பல முறை பட்டு விட்டேன்.இன்று எப்படி தான் ஆரம்பிப்பான்.நேஹா பெயரை சொல்லி மறுபடியும் வருவான்.அவன் வீட்டிற்க்கு இப்படி தான் முதலில் எல்லாம் எதாவது ஒரு பெயரை சொல்லி மிஸ்ட் கால் கொடுப்பான்.அடிக்கடி எரிச்சல் படுத்துவான்.அவனை காதலித்த காரணங்களையே இப்பொழுதெல்லாம் நினைத்தால் எரிச்சலாக வருகிறது.சில நேரம் பாவமாக முகத்தை வைத்து கொண்டு அருகில் வந்து விடுவான்.அவனுக்கு உருவங்களையும் ,கட்டுபாடுகளையும் மீறுவதில் அலாதி சுகம்.அதற்கு அவன் வருத்தமும் பட மாட்டான் .
'இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோப படுற " என்று பரிதாபமாக கேட்டான் .
பரிதாபமாக நடித்தான்.ஆண்கள் பரிதாபமாக நடித்தால் எவ்வளவு ஆகோரமாக இருக்கிறது.ஆண்களுக்கு இது ஒரு கை வந்த கலை.இழந்து போனதை பற்றி பீற்றி கொள்ளவும் ,வருத்த பட்டுக்கொளவும் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்.ஆண் ஒரு விஷயம் முடிந்து விட்டது என்றால் அது இனியும் தொடர்கிறது என்று அர்த்தம் ,ஆனால் பெண்களுக்கு ஒன்று முடிந்து விட்டது என்றால் அது முடிந்தது.ஆண்கள் அதற்கு Comma போடுவார்கள் ,பெண்கள் Fullstop வைப்பார்கள்.இது சரி இது தவறு என்று இருவரும் நினைக்காத போது ஆணுக்கு இந்த கட்டுபாடுகள் எங்கு புரிய போகிறது,
சாரி மனோ ,நீ கிளம்பலாம்.நேஹா எங்கிட்ட பேச சொல்லு,நானே ஒரு கைஎழுத்து போட்டு அனுப்புறேன் .
பிரியா
ப்ளீஸ்
மனோ கிளம்ப தயாரானான் .நான் எழுந்தேன்.வீட்டை ஒரு முறை பார்த்தான்.செருப்பு வைக்கும் இடத்தை பார்த்தான்.யாராவது தங்கி இருக்கிறார்களா என்று பார்க்கிறான் என்று நினைக்கிறேன்.
மனோ கிளம்பி விட்டான்.லாசை பற்றி அவனிடம் நல்ல வேளை சொல்லவில்லை.லாசிர்க்கு அவனை கண்டிப்பாக பிடிக்காது.அவன் ஒன்றும் மோசமானவன் இல்லை.ஆனால் அவனுடன் வாழ முடியாது.அவனுக்குள் ஒரு கொடுரமான ஒரு சுதந்திரம் இருக்கிறது.கோட்பாடுகள் என்பது அவன் அகராதியில் கிடையவே கிடையாது.மனோவின் செயல்களுக்கு அவன் என்றுமே விளக்கம் தேட மாட்டான்.எத்தனையோ பெண்களை காதலித்து இருப்பான்.அவன் பிரிந்த பெண்கள் யாரும் அவனை ஒரு நட்புடன் கூட அவனை நினைத்து பார்க்க மாட்டார்கள்.நான் வந்த உடன் அவன் நிலைமை ஒன்றும் மேன்மை அடையவில்லை.
நேரம் ஆச்சு
யோகிய பாக்கலாம்
என்னதான் வரைஞ்சி வைத்து இருக்கான்னு போய் பார்ப்போம் ,இந்த மனோ வந்தது என்னை கொஞ்சம் தொந்தரவு செய்து விட்டது.மனோவும் யோகியும் வேறு துருவங்கள்,யோகியை பற்றி எனக்கு என்ன தெரியும்.ஆனால் அவன் ஒரு ஒழுக்கமானவனாக இருக்கிறான்.அது போதும்.ஆண் ஒழுக்கமாக இருந்தால் எந்த பெண்ணிற்கும் பிடிக்கும்,அவன் சிகரட் பிடிப்பான்,எப்பாவது தண்ணி அடிப்பான் ,சொல்லி இருக்கிறான்.அவனுக்கு பல விதத்தில் ஆர்வம் இருக்கிறது.அவனுக்கு இயற்கை பிடிக்கிறது .கொஞ்சம் அமைதியாக இருக்க பிடிக்கிறது.அவனுள் ஒரு ஆழமான ஒரு ஆண்மை என்னை தொந்தரவு செய்கிறது.அவன் கடந்த காலம் மிக மிக சாதரணமாக இருந்தது என்று அவன் சொல்லி இருந்தான்.
நான் லாசை கூட்டி கொண்டு அவன் வீட்டிற்க்கு ஆட்டோவில் போய் சேர்ந்தேன்.அவன் என் வருகைக்காக காத்து இருந்தான்.தனியாக ஒரு பிளாட்டில் குடி இருக்கிறான்.முகப்பில் ஏதோ ஒரு வாசகம் இருக்கிறது.அவன் வீட்டின் உள் நுழைகிறேன்.
ஒரு ஆனால் எவ்வளவு அழகாக வீட்டை வைக்க முடியுமா ? எனக்கு இவனை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கிறது.அது என்னால் உணர முடிகிறது.அந்த உணர்விற்கு நான் தடை போட விரும்பவில்லை.என்னால் எந்த உறவை தாங்கி செல்ல முடியும்.அதற்கு நான் என்ன தயாராக வேண்டுமா என்ன ?
வீட்டில் பல இடங்களில் கவிதை கொட்டுகிறது.எனக்கு கவிதை தெரியாது,ஆனால் அது ஒரு Poetic location மாதிரி இருக்கிறது.அவன் வீடு அவனை பற்றி சொல்லுகிறது.அவன் எண்ணங்களை பிரதி பலிக்கிறது. லாஸ் கூட அமைதியாக வாயடைத்து போய் தான் இருக்கிறது .
ஹே லாஸ் வாலை ஆட்டி அவனுக்கு ஹாய் சொல்லுகிறது.அவன் என்னிடம் இருந்து லாசை வாங்கி கொள்கிறான்.அவன் மடியில் லாஸ் எவ்வளவு அழகாக அமர்ந்து கொள்கிறது?
நான் அவன் புகைபடங்களை பார்க்கிறேன்,அவனை புகைபடத்தில் பார்க்க வேறு மாதிரி இருக்கிறான்.நேரில் தான் அழகாக இருக்கிறான்.அவன் வீட்டில் பல விதமான புத்தகங்கள் இருக்கின்றன.என்ன என்னவெல்லாமோ சேர்த்து வைத்து இருக்கிறான்.காலிங் பெல் கூட வித்தியாசமாக ஒரு மணியின் வடிவில் உள்ளே இருக்கிறது.அழகை ஒரு மேட் போட்டு தரையை மறைத்து இருக்கிறான்.உள்ளே ஒரு வாசம் இருக்கிறது.அவன் படுக்கை அறையை எனக்கு பார்க்க கூச்சமாக இருக்கிறது.அங்கே ஒரு லேப் டாப் மட்டும் தெரிகிறது.படுக்கைகள் மடித்து வைக்க பட்டு இருக்கிறது.இந்த ஒழுக்கம் தான் யோகி ,இது தான் அவன் ! அவனை பற்றி வேறு எதுவும் சொல்ல தேவை இல்லை.
யோகி !
சொல்லுங்க பிரியா
எனக்கு கொஞ்சம் உங்க ஓவியங்கள பார்க்கணுமே
பார்க்கலாம்
அதுக்குள்ள நாம சாப்பிடலாம்.என்னால முடிஞ்ச அளவு ஏதோ செஞ்சு இருக்கேன் !

6 comments:
bit slow machi..Top Gear needed again :)
appadiya...pakkuren machi....:)
hey. going good. but i guess Picturising Yogi as real yogi looks very storish. might have added more colors to yogi's character than just touching only his good notches..... But i am guessing that all those will follow. i didnt really think that its slow. keep going.....
@ sriram...thanks for reading the story man...yeah u will know why yogi is portrayed as such ....
கார்த்திக்....
நான் இந்த கதைய ஆரம்பத்துல இருந்து படிச்சுட்டு வரல...
ஒரு நாள் வேற ஏதோ site தேடிகிட்டு இருக்கும் போது
இதை படிச்சேன்...
ஆரம்பத்துல.... i feel its going too wierd.....
ஆனா இந்த முடிவு ரொம்ப பிரமாதம்.....
ஆசை.... கனவு ......... கற்பனை.....
உங்களோட மற்ற எழுத்துக்களும் அருமை.....
ஏதோ கண்ணாடிய பாக்கற மாதிரி இருக்கு.... !
@ Chikku
ரொம்ப நன்றி.நான் என்னை சார்ந்த உண்மைகளை எழுத நினைக்கிறேன்.நானும் ஒரு சாதரண மனிதன் உங்களை போல் ,அதனால் தங்களுக்கு கண்ணாடி போல் தெரிகிறது.தொடர்ந்து வாசிக்கவும்.
Post a Comment