நானும் மாதவனும் அந்த வழியாக செல்லும் போது இருந்த பெண்கள் உண்மையில் சென்னை பெண்கள் மாதிரி தெரியவில்லை.மாதவன் சொன்ன அந்த கஜகாமினி அந்த கூட்டத்திலும் இல்லை.எனக்கு கொஞ்சம் வேர்த்து விடும் போலிருந்தது.அவர்கள் செய்து கொண்டிருந்த அட்டகாசங்கள் அந்த ரிசொர்ட் முழுவதும் ஒலித்து கொண்டிருந்தது.
மச்சி வா போய் பிரெஷ் ஆகிட்டு வரலாம்
ஹ்ம்ம்
உள்ளே சென்று ஷார்ட்ஸ் ,டி ஷர்டுக்கு மாறினோம் .
மச்சி We are going to Rock
டேய் என்னடா பீட்டர் உடுற
டக்குன்னு திரும்பாத ,அந்த கூட்டத்தில காமினி நிக்கிறா ,அவ என்னைய பார்த்துட்டா
அதுக்கு,
அதுக்கு ஒன்னும் இல்லை ஒரு Flirt தான்
கருமம்
நான் போய் அவகிட்ட பேச போறேன்
மாதவன் கிளம்பி விட்டான் .
ஹாய்
????
I am Madhavan
So?
I met you the other day in the hotel ?
oh !!
அவள் நம்பர் வாங்கலாம் என்று சென்றவன் வெறும் கையோடு திரும்ப வந்தான்.மூன்று ரவுண்டு தாண்டிவிட்டது ,எங்கள் அருகில் யாரோ அமர்ந்து கொண்டு இருப்பது போல் இருந்தது.
ஹாய்
ஹாய்
எங்க இருந்து வர்றீங்க
இங்க இருந்து தான் ...ஹி ஹி ஹி
அவரு ஓவர் அஹ குடிச்சு இருக்காரு போல இருக்கு
நான் என்ன சொல்ல நானும் அவ்வளவு தான் குடித்து இருக்கிறேன் .
நன்றாக பேசிகொண்டிருந்தான்,அவன் பெயர் குரு என்று சொன்னதாக நினைவில் இருந்தது.அவன் ஒரு பத்திரிக்கையில் வேலை பார்பதாக சொன்னான்,இருவரும் புகைத்து கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்,
சில பெண்கள் அங்கே புகைத்து கொண்டிருந்தார்கள்,அந்த கஜகாமினியை காண வில்லை.மாதவன் போதையில் தேடி கொண்டிருந்தான்.நாங்கள் மூவரும் நடந்து கொண்டு அந்த நீச்சல் குளம் அருகே சென்ற பொழுது பல பெண்கள் தங்கள் பெண் அழகை விளம்பரம் செய்வது போல் நின்று கொண்டிருந்தார்கள்.அந்த கல்லூரியில் இருந்து வந்த பெண்கள் தங்கள் மேஜையில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
என்னடா இது வெறும் போரா இருக்கு
ஆமாம் வந்த உடனே மூணு ரவுண்டு கல்ப் அடிச்சேன்னா ,இப்படி தான் இருக்கும்
ஹ்ம்ம் ஆமா ஆமா
" டோப் அடிக்கிறீங்களா " என்று குரு கேட்டது எனக்கு கேட்காமலே இருந்து
இருக்க வேண்டும் .
மாதவன் துள்ளி கொண்டு " இங்க இருக்குமா ?"
டேய் அதான் வாசம் வந்துச்சே !!
இங்க நான் தான் சப்ளை பண்றேன்
ஒ
எவ்வளவு
அது பார்த்துக்கலாம் .நீங்க அடிங்க முதல்ல
மாதவா வேணுமா
ஹ்ம்ம்
சரி கொடுங்க
அவனே ஒரு சிசர் பில்டர் சிகரட்டும் கொடுத்தான்.அது காய்ந்த இலைகள் போல் இருந்தது .
அந்த புதர் பக்கம் போய்க்கோங்க
ஹ்ம்ம்
இருவரும் சிகரட்டில் உள்ள துகள்களை வெளியே எடுத்து விட்டு ,குரு கொடுத்த இலைகளை அந்த சிகரட் துகள்களுடன் சேர்த்து கைகளால் பிணைந்து சிகரெட்டில் அடைத்தோம்.
மாதவா I am seeing stars man
யா யா
என்னடா மச்சி பீட்டர் பலமா இருக்கு
அதற்குள் அவன் பற்றவைத்து விட்டான்.
அடி மச்சி
மூன்று முறை இழுத்து விட்டு மாதவனிடம் கொடுத்தேன்.மாதவனும் நானும் மாறி மாறி இழுத்தோம்.கொஞ்ச நேரம் அந்த புதரின் அருகிலே அமர்ந்து இருந்தோம்.அந்த குருவை காண வில்லை.அவனிடம் நாங்கள் பணம் கூட தரவில்லை.
டேய் மச்சி அந்த பொண்ணுங்க ஏன்டா இப்படி மெதுவா குதிக்குது
டேய் மெதுவா எங்கடா குதிக்குது எல்லாம் தூங்கறாங்க
இருவருக்கும் சொருகி கொண்டு வந்தது.வானம் ரொம்ப அருகில் தெரிந்தது.யாருக்கும் தொந்தரவு தர கூடாது என்று நினைத்து கொண்டு நாங்கள் அந்த நீச்சல் குளம் அருகில் நின்று கொண்டு பெண்களை ரசிக்க சென்றோம்.
டேய் தண்ணி என்னைய துரத்துற மாதிரி இருக்குடா
எனக்கும் தான்
வா கொஞ்சம் அந்த பக்கம் நிக்கலாம்
மச்சி உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தையடா தையடா தையடா
தையடா தையடா தையடா
டேய் என்னடா பாடிக்கிட்டே இருக்கே மவனே மவனே மவனே மவனே
மவனே
இருவரும் சொன்ன வார்த்தைகளையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தோம்.அது என்னகு தெரியவில்லை.மாதவனுக்கும் தெரியவில்லை.
வாடா சாப்பிடலாம்
ஆமாம் டா பசிக்குது .
What do you have to eat?
சார் க்லொஸ்ட்.
என்ன சொல்றீங்க
மணி ஒண்ணு சார்
எதாவது இருக்கா !!
சாண்ட்விட்ச் இருக்கு சார்
கொடுங்க
இருவருக்கும் மீதம் இருக்கும் சரக்கும் அடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.சாப்பிடோம் சாப்பிடோம் .இருவரும் சேர்ந்து ஆளுக்கு பத்து சாண்ட்விட்ச் சாப்பிட்டு இருந்தோம் .அவன் திணறி விட்டான்.எங்களுக்கு இன்னும் பசி இருந்தது.
மறுபடியும் கொஞ்சம் டோப் அடித்தோம் .இந்த முறை இருவரும் சித்தர்கள் ஆகி விட்டோம்.
மச்சி இந்த பாட்டு கேட்டு இருக்கியா
எதுடா ?
மெய் தன் அரும்பி விதிர் விதிர்த்து உன்விறையார் களர்கன் கைதான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி வெள்ளம் பொய்தான்'
டேய் நிறுத்து என்ன பாட்டு இது இது செய்யுள் டா ..
நான் பாடுறேன் வா
எங்க டா
ரூமுக்கு
எனக்கு குளிக்கணும்
ஆமாம்டா நம்ம குளிக்கவே இல்ல .இல்ல இல்ல இலா
"இலா வுக்க்காகக " காக்க காக்க வசனம் எல்லாம் வந்தது.எங்களுக்கு தெரியாது நீச்சல் குளத்தில் ஒரு மணிக்கு மேல் குளிக்க முடியாது என்று.
எங்களை தடுத்தவன் எங்கள் ரூம் நம்பரை கேட்டான் .
What irkes for you man,,we want to take bath!!!
கிளம்புங்க சார் டைம் ஆச்சு
ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே
எவ்வளவு ஓகே
@@$@#)$#%(#_%#(%(#_#_%*#*%#)$#(%#!%*#(@)$(*@
அவனுக்கு புரிய வில்லை .இருவருக்கும் ரூம் நம்பர் நினைவில் இருந்தது,
ரூமுக்கு சென்று விட்டோம் .எங்கள் தலை மீது காத்தாடி விழுவது போல் இருந்தது.தூங்கி விட்டோம் ,பயந்து கொண்டே.
எழுந்து பார்க்கும் போது மணி இரண்டு .கதவை திறந்து கொண்டு நான் குளிக்க சென்றேன்.சிலர் குளித்து க்கொண்டிருந்தார்கள்.நான் குளித்து கொண்டு திரும்ப வரும் போது மாதவன் எதையோ தேடி கொண்டிருந்தான்.
என்னடா தேடுற ?
டேய் கேமரா ,மொபைல் இரண்டையும் காணும் டா
என்னடா சொல்ற
ஆமாம்டா ,நேத்து வரும் பொழுது கதவு திறந்து இருந்துச்சா டா
டேய் என்னடா ,எனக்கு ஞாபகம் இல்லடா
உன் செல்போன் இருக்கா பாரு
என் செல்போன் என் பாக்கெட் ல தான் இருந்துச்சு ,நீ ஏன் எடுத்துட்டு வராம
இங்க வட்ச?
டேய் அத பத்தி யோசிக்க முடியாது இப்ப .
அந்த கஞ்சவ அடிச்சி எப்படி ஒரு நிலைமை.மச்சி S.L.R கேமரா டா
ஆமாம் டா
டேய் வா Reception ல கேட்போம்
நாங்கள் செல்லும் போது எங்களை போல் கஜகாமினியும் Reception இல் கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருந்தாள்.
Reception இல் கையை விரித்து விட்டார்கள்.அந்த நபர் காலையிலேயே கிளம்பி விட்டதாக கூறினார்கள்.அவன் கொடுத்து இருந்த மொபைல் நம்பரும் போலியானது.அவன் கிரெடிட் கார்டு பயன் படுத்தவில்லை.அவன் தாடி வைத்து இருந்தது கூட இப்பொழுது தான் நினைவில் வருகிறது.கண்டிப்பாக அந்த தடியை வழித்தால் அவனை அடையாளமும் கண்டுபிடிக்க முடியாது.இதற்க்கு மேல் அவன் தான் எடுத்தான் என்று எங்களுக்கு தெரியாது.
உங்களுக்கு எதாவது நியுஸ் தெரிஞ்ச சொல்லுங்க !! என்று கஜகாமினி கெஞ்சினாள்.இது தான் என் நம்பர் .
இருவரும் கிளம்பினோம்.மாதவனிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.
மச்சி பாத்தியா விதி ,நேத்து நீ போய் நம்பர் வங்கணும்ன்னு நினைட்சி போன ,ஆனால் கிடைக்கல,இன்னைக்கி கிளி தானா வந்து நம்பர் கொடுக்குது,இது தான் விதி,Chaos theory.
ரொம்ப முக்கியம் .போடா போ

0 comments:
Post a Comment