சுகமான கனவுகள் எத்தனை முறை வந்து இருக்கிறது.இப்பொழுதெல்லாம் கனவுகள் அதிகம் தென் படுகின்றது.உண்மையில் சில விஷயத்தை நான் யோசித்து கொண்டு படுக்கைக்கு செல்லும் போது அந்த விஷயம் எதாவது ஒரு வகையில் என்றாவது வந்து தலை காட்டுகிறது.சில கனவுகள் சில விவாதம் போல் இருக்கும்,சில கனவுகள் கிளுகிளுப்பாக இருக்கிறது.சில கனவுகள் வாழ்கையை யோசிக்க சொல்லும்.சில கனவுகள் என் கனவுகளாக இருக்கும்.
கனவு மெய்பட வேண்டும் ,என்பான் பாரதி .கனவு காண்பது ஒரு சுகமான அனுபவம் என்று எடுத்து கொள்ள முடியாது.கனவுகளுக்கு நம் கட்டுப்பாடு எதுவும் கிடையாது.அதனால் கனவுகள் திசை மாறி உறவுகளை மீறி ஆச்சரிய படுத்தலாம்.பொய்யான எண்ணங்களை மேன்மை படுத்தலாம்.உன்னதமான விஷயங்களை அலங்கோல படுத்தலாம்.கனவுகள் தரும் கற்பனைகள் நம்மை விவரிக்க நமக்கே உதவும்.ஆனால் அதை எடுத்துரைக்க நினைவுகள் உதவ வேண்டும்.நம் நினைவுகளை கொண்டு செல்லும் ஒரு எழுதுகோல் போல் வைத்து கொள்ளலாம்.ஆனால் அதில் பல சிக்கல்கள் தோன்றும்.நம் வயதிற்கு ஏற்ற கனவுகள் தான் வரும் என்று நினைக்கிறேன்.
Interpretation of Dreams என்று ஒரு புத்தகம் இருக்கிறது .Sigmund Freud எழுதியது.அதை படித்து முடிப்பதற்குள் எனக்கு வயதாகி விடும் என்று நினைக்கிறேன்.ஆனால் கனவு என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.சில முறை நான் கனவு காணும் போது இதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்று கூட நினைத்து இருக்கிறேன்.ஆனால் நான் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்த பொழுது மட்டும் தான் என்னக்கு நினைவில் இருக்கிறது.மற்ற விஷயங்கள் மறந்து போய் விடுகிறது.அது என்ன செயல் என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை.யாராவது தெரிந்தால் தெரிவிக்கவும்.
இது ஒன்று ஏனோ தானோ என்ற பதிவு அல்ல,எழுத எதுவும் கிடைக்காத ஒரு பதிவும் அல்ல.கனவுகள் இப்பொழுதெல்லாம் என்னை மிகவும் ஆர்பரிக்கிறது.காரணம் காண்பதை விட அதை வடிவமாக கொண்டு வர முயற்சிக்கிறேன்.
.சென்ற வாரம் நடிகை சந்தியாவின் படத்தை ஏதோ ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன்.அதனால் நேற்றைய கனவில் அவள் தான் கனவு நாயகி ,தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.எனக்கு இருக்கிற நினைவுகளை வைத்து சொல்ல வேண்டும் , ஆனால் அந்த கனவில் சந்தியா ஒரு சின்ன பெண் .அந்த ஊரின் பெயர் பேகம் பேட் .அந்த இடத்திற்கு நான் ஏதோ ஒரு சர்வே செய்ய வந்து இருக்கிறேன்.என் இடம் ஒரு கொட்டகை போல் இருக்கிறது.அது ஒரு அழகிய மலை பிரதேசம்.அதில் ஒரு கொஞ்சும் ஆறு ஓடுகிறது.அங்கே ஒரு குதிரை பயிற்சி செய்யும் மைதானம் இருக்கிறது.அங்கே நடக்கும் சில செயல்கள் என்னை கொஞ்சம் அந்த இடத்தின் மீது மையம் கொள்ள வைக்கிறது.அந்த ஊரில் சில விவாதங்கள் நடக்கிறது.அங்கே ஒரு தபால் நிலையம் இருப்பது நினைவில் இருக்கிறது.
நேற்று கண்ட கனவு கண்டிப்பாக ஒரு இரண்டு மூன்று மணி நேரம் சென்று இருக்கும் என்று நினைக்கிறேன்.ஆனால் அதில் கண்ட காட்சிகள் நினைவில் இருக்கிறது.ஆனால் அந்த கோர்வையான சம்பவங்கள் எனக்கு வெளிக்கொணர முடியவில்லை .
இப்பொழுது என் நிகழ கால சம்பவங்களையும் என் கனவையும் கோர்த்து பார்க்கும் பொழுது தெரியும் சில ஆச்சர்யங்கள்.
1.பேகம் பேட் :இது எங்கு இருக்கிறது தெரியவில்லை.சிலரிடம் கேட்டு பார்த்தேன்.கர்நாடகா என்று கூறினார்கள்,நேற்று என் நண்பனிடம் கர்நாடகாவில் ஹாசன் என்ற இடத்திற்கு செல்லலாமா என்று கேட்டு கொண்டிருந்தேன் .
2.குதிரை பயிற்சி மைதானம் : திருச்செந்தூர் செல்லும் போது ரயிலில் தூங்குவதற்கு முன் நாங்கள் விவாதித்து கொண்டிருந்த விஷயம் ராமசாமி செட்டியாரின் குதிரை Race course பற்றி .
3.தபால் நிலையம் : போன வாரம் என் பெட்டியில் இரவு எதையோ துலவி கொண்டிருக்கும் பொழுது எனக்கு அகப்பட்டது என் தபால் நிலைய பாஸ் புக்
4.சந்தியா : அவர் உடல் மெலிந்து காணப்படுகிறார் என்ற செய்தி அவரை ஒரு சிறு பெண்ணாக காட்டி இருக்குமோ ?
5.கொஞ்ச நாளாகவே எனக்கு இயற்கையான இடத்திற்கு செல்ல மனம் சொல்லிகொண்டிருக்கிறது.
கண்டிப்பாக என்னால் இதை வைத்து ஒரு கதை எழுத முடியும்.நானும் அதற்கு தான் அதை நினைவில் வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.உண்மையில் அந்த கனவில் ஒரு அழகிய கதை ஒன்று மெலிதாக வீசிகொண்டிருந்தது.அதில் ஒரு காதல் இருந்தது,சில சோகம் இருந்தது,உண்மை இருந்தது.அழகு தெரிந்தது.ஆனால் நினைவில் இல்லை.காலையில் இருந்து இதை தான் யோசித்து கொண்டிருந்தேன்.யாருக்காவது எப்படி நேர்ந்து இருந்தால் என்னக்கு பின்னூட்டவும் .
மேலும் கண்டிப்பாக இது கதை ஆகிறது.தொடர்கதையாக சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

10 comments:
Anna,
Nallathor muyarchi...ella kathaiyum..naavalum...kanavil irunthu elutha paduvathu thaan....
ur writing made u to dream...your vision has expanded...continue to dream and make it as words....make the dream to live in the blog.
I have read some where - Dreams are reflection of what we see and nt fulfilled in our day today...correlation will always exist...
Good thought and start...continue ....waiting for posts on same line..
yeah man...i discussed a lot abt this to u..and its really great...i get now..begam pet is in hyderabad and i booked tickets for mmy brother and he said abt that begam pet airport.its really shocking now..
i was curious to write abt it as a post...i am thinking aloud to get hold of some instances..let me think
நண்பா கார்த்திக்
இது போன்ற கனவு பயணம் என் நினைவிலும் பல முறை உலா வந்துள்ளது. இது தொடர்பாக கவிதை கூட எழுதயுள்ளேன். இதோ சில வரிகள்
" நினைவுகளின் நிழல்படம் கனவாய் கடக்க
கனாக்களின் உலாவில் கைகோர்த்து நடந்தேன்
கம்பனும் ஷெல்லியும் கவித்தீர்த்தம் பாய்ச்சினர்
பருகிய எனக்கு சிவனார் கருணையில்
கசிந்த அமுதமும் கசந்தது
வெறுமையை கடந்த ஏதோ பெருமிதம்
-----(மீதி வரிகள் நினைவில் இல்லை..)...... "
உன்னை போலவே என்னுடைய கனவுகளும் நினைவில் நிலைப்பதில்லை. பெரும்பால கனவுகள் ஏதோ உயரத்தில் இருந்து விழுவது போலும் கீழுருந்து உயரத்தில் மிதப்பது போன்றும் நினைவில் உள்ளது. Think i have read Sigmon Fraud stating "Some dreams are reflection of Mind stress" மனசோர்வு(Stress) - இது அந்த வகையை சேரலாம். சில கனவுகள் ஏதோ சொந்த அன்றாட வாழ்க்கையை ஒட்டி இருந்திருக்கிறது. சில கனவுகள் துளியும் சம்மந்தம் இல்லாத சுவாரஸ்ய நிகழ்வை கதை போல் தொனித்தது உண்டு. அவை பலமுறை தொடர்கதை போல் தொடர்ந்ததும் உண்டு. இது ஒரு சுவரஸ்யமான தலைப்பு தான். நினைக்க நினைக்க சுவைக்க சுவைக்க வியப்பாக தான் உள்ளது.
u are true karthick, dreams are sometimes co-relation of actual happenings in your past time..
I have tired reading Sigmund's book about this.. for christ sake i cant understand lot of things :P..
but there are some which can be called/categorized as Déjà vu.
God i have had this experience many times. u cant belive it but i have even by-passed years thru this experience.
Good nice thought, u could develop lot of stories thru dreams, try to watch it(dreams).. Sure u will love all.
machi...piri....super da...continue
SK
Sriram
கண்டிப்பாக.சில கனவுகள் அன்றாட வாழ்வை ஒட்டி இருக்கிறது.அந்த கனவுகள் தான் நம் எண்ணங்களை சில நேரம் தூண்டி விடுகிறது.
நீ எழுத ஆரம்பி நண்பா.எழுதுவது நன்றாக இருக்கிறது.உன் பதிவை எதிர்பார்க்கிறேன் .Personally writing is giving lots of fun and clarity
Yeah vinoth i second ur thoughts...its true that we cant beleive some time of what we had dreamt off.
thanks for ur encouragement
S.K
:)thanks man
Sweet dreams!
@Sundar
Yeah da....
Post a Comment