பல நாட்கள் யோசித்து உண்டு,இந்த பண்டிகை காலங்கள் எப்படி சீரழிந்து போய் விட்டன என்று.
எல்லாம் தனியார் தொலைக்காட்சிகளில் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ற விஷயத்தை பார்க்க அமர்ந்து விடுகிறோம்.அன்று போல் முதல் நாள் படம் பார்க்க நண்பர்களை பார்க்க செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இப்பொழுது இல்லை.இப்பொழுது பல விஷயங்கள் மாறி விட்டன.தீபாவளி அன்று பத்து மணி வரை குளிக்காமல் அசின் பேட்டியை பார்க்கும் எத்தனையோ பேர் என்னும் இருக்கிறோம்.குற்றம் சொல்ல வில்லை,சில பழக்கங்கள் மாறும் போது எவ்வளவு வித்தியாசமாக தெரிகிறது கடந்த காலம்.
எனக்கு நன்றாக நினைவில்
இருக்கிறது,தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தூர்தர்ஷனில் வரும் பழைய படமாக இருந்தாலும் அது ஒரு இனிப்பாக தெரிந்தது.இன்றைய
மனிதனின் அறிவின் ஆரம்பம் அன்றைய
தூர்தர்ஷன்.நான் பார்த்து ரசித்த நிகழ்ச்சிகள்.அந்த LOGO வை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.இரண்டாவது தூர்தர்ஷனின் ஸ்க்ரீன் சர்வர் .
சூர் மேரா துமாரா வில் கமல் வரும் காட்சிக்காக எங்கு இருந்தாலும் ஓடி வந்து பார்க்கும் காலம் அது.இன்று பல நாட்கள் கழித்து பார்
க்கும் போது அந்த இசை புல்லரிக்க வைத்து விட்டது.எத்தனை மொழிக
ள் எத்தனை மனிதர்கள் ,அதிலும் கல்கத்தா வரும் பொழுது அந்த கல்கத்தாவின் அடையாளமாக மெட்ரோ ரயிலை காட்டியது அருமை.
பிரணாய் ராய் வரும் வேர்ல்ட் திஸ் வீக் என் தந்தை
யின் பிடித்த நிகழ்ச்சி.எனக்கு மால்குடி டேய்ஸ் ,சுரபி .சுரபி ரேணுகா ஷானே ,சித்தார்த் கக் சொல்லும் விஷயங்களை பற்றி விவாதித்த காலங்கள் பல .அந்த காம்ப்ளன் பாய் மற்றும் காம்ப்ளன் கேர்ள் ? ஹிந்தி நாடிகள் ஷகித் கபூர் மற்றும் அயேஷா தகியா .
இன்று பல விஷயங்கள் மாறி விட்டன.பழையவற்றை திரும்பி தான் பார்க்க முடியும்.வேண்டும் என்று நிற்க முடியாது.

1 comments:

Pilani Pictures said...

lovely da :) quite true!

by chance i got to be held up with just DD before a few weeks.. ya..just waited for Kamal in "Mile sur...". :) it took me back to school days..