மறுபடியும் வாழ்க்கை தொலைந்து விட்டதா என்ன ? என்னால் சாதரண வாழ்க்கை வாழ முடியாதா என்ன ? எல்லா தொடர்புகளும் அறுந்து போய் இருக்க நான் என்ன பாவம் செய்தேன்.ஒரு காதல் என்னை ஏன் சின்னாபின்னமாக ஆக்கி விட்டது.ஏன் என் நிலைமை எனக்கே புரியவில்லை.
என்னை எவனும் நம்ப வில்லை.யோகியும் ,லாசும் எனக்கு நிம்மதி தருகிறார்.லாஸ் இல்லாமல் என்னால் ஒரு நிமிடம் கூட யோசிக்க முடியவில்லை. கௌன் சிலிங் என்ற பெயரால் என்னை ஏன் சித்திரவதை செய்கிறார்கள்.புரியவில்லை.நான் ஒரு பெண் என்பதையே சில நேரம் மறந்து விடுகிறார்கள்.நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

ப்ரியாவின் நிலைமையில் ஒரு மாற்றமும் இல்லை.அதற்கு மருத்துவம் தந்த மருந்து காலம்.காலம் அவளை என்ன செய்யபோகிறது என்று பார்த்து கொண்டிருந்து ஒரு வருடம் ஓடி விட்டது.அவள் நான்கு வேலைகள் மாறி விட்டாள்.வீடு மாற வில்லை.மஞ்சு அவளை காலி செய்ய விடவில்லை.பிரியா மஞ்சுவை ஏற்று கொண்டதால் தான் அவள் சொல்லும் படி நடக்கிறாள்.

ராஜேஷ் அடிக்கடி ப்ரியாவுடன் பேசுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தான்.

" ராஜேஷ் நான் கிளம்பறேன்,யோகி வர்றேன்னு சொல்லிருக்கார் !'

பிரியா "யோகி " ! என்று ஆரம்பிப்பான்.பிறகு ஒன்றும் சொல்லாமல் விலகி விடுவான்.

இந்த நிலைமை தொடர்ந்தால் அவள் கண்டிப்பாக ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக முழுமையாக மாறி விடுவாள் என்று கண்டிப்பாக தெரிந்தது.ராஜேஷ் ,மஞ்சு இதை நன்கு அறிந்து இருந்தார்கள்.ப்ரியாவின் தந்தையை பார்க்க கிளம்பினார்கள்.எத்தனையோ முறை அவர்கள் வந்து இருந்த பொழுதெல்லாம் ப்ரியாவிற்கும் அவள் அம்மாவிற்கும் இருக்கும் ஒரு வித விரிசலால் அவர் அங்கு அவளுடன் இருக்க முடியாமல் கிளம்பி இருக்கிறார்.

ப்ரியாவின் அம்மாவிற்கு ஒரு வித பழக்கம் உண்டு,எதையும் ஒரு விதமாக குத்தி காட்டுவதில் அவருக்கு ஒரு வித திருப்தி .மனோவை தாண்டி பிரியா எவ்வளவோ ஒரு இன்னலில் இருந்தாலும் அவள் அம்மா மனோவை வைத்தும் அவர்களை தவிக்க விட்டு விட்டு வந்ததால் தான் இப்படி வந்தது என்று அடிக்கடி ப்ரியாவுடன் சண்டை போடுவார்.அவளால் அந்த எண்ணங்களை புரிந்து கொள்ளமுடியாவிட்டாலும் அவள் தன் பங்கிற்கு ஒரு விவாதம் நடத்துவாள்,அதில் அவள் எண்ணங்கள் தான் சீரழிந்து கொண்டிருந்தது.அதை பற்றி அறியாமல் அவள் அம்மா நடந்து கொண்டிருந்தாள்.இதனால் தன் மகளிற்கு உதவ முடியாமல் தன் மனைவியையும் கட்டுப்படுத்த முடியாமல் பல முறை திணறி இருக்கிறார் சந்தானம்.

இந்த முறை எப்படியாவது சந்தானத்தை அழைத்து வர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள் ராஜேஷும் ,மஞ்சுவும்.அதற்க்கு பலன் கிடைக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.ராஜேஷும் மஞ்சுவும் ப்ரியாவின் மீது அக்கறை எடுத்து கொள்ள காரணங்கள் எதுவும் இல்லாவிட்டலும் ஒரு வித நேசம் அவள் மீது இருவர்க்கும் இருந்தது.ராஜேஷ் மஞ்சு இருவரும் சேலத்தில் இருந்து இங்கு வந்து குடி ஏறியவர்கள்.இருவரும் வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்தவர்கள்.இருவரும் ப்ரியாவின் கதையை காதல் ஆரம்பித்த சமயத்தில் இருந்து கேட்டு கொண்டிருப்பவர்கள்.ப்ரியாவும் அவர்களை பெரிதும் மதித்தாள்

"சந்தானம் சார் நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும் ,பிரியவா நாம வெளிய கொண்டுவரலாம் ,ஆனால் அதுக்கு அவ கூடயே யாராவது இருக்கணும்.அவளுக்கு ஆனால் நீங்க இருக்கீங்க என்று தோன்ற கூடாது.நீங்க தான் அதுக்கு உதவனும்."

எனக்கு மட்டும் இங்க இருக்கிறது பிடிக்குதா என்ன ,அவளும் அழுதுகிட்டு தான் இருக்கா என்று தன் மனைவியை காட்டினர்,

புரிந்து கொள்ள முடிகிறது என்று தலை அசைத்தான் ராஜேஷ்.மஞ்சு சந்தனத்தின் மனைவியிடம் கொஞ்ச நேரம் தனியாக பேசிகொண்டிருந்தாள்.அவள் அழுகைக்கு கொஞ்சம் சமாதான படுத்தி கொண்டிருந்தாள்.

அடுத்தவாரம் சனிக்கிழமை நாங்க கிளம்பி வர்றோம் !

கண்டிப்பா சார் ,நாம பேசின படி நடந்தா தான் எல்லாம் சரி ஆகும் ,உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.

ஹ்ம்ம் ,எனக்கு புரியல இந்த நாடகம் இது எல்லாம் எவ்வளவு தூரம் சரி ஆகும்னு ஆனா அவள் திருப்பி வந்தால் அது வே போதும் எனக்கு.

கண்டிப்பா பிரியா தெளிவா வருவா கவலைய விடுங்க

அந்த நேரத்தில் பிரியா யோகியுடன் சினிமா போவதை பற்றி அந்த வீட்டில் தானியாக பேசிக்கொண்டு இருந்தாள்

6 comments:

Anonymous said...

selvi seriel paakura palakkam undaaa. btw i am coming to ur place for deepavali

Vinoth Pradeep said...

chewing gum :(

keeping my fingers crossed :)

Anonymous said...

Karthik,

You are supposed to publish your father's articles right?? When are you planning to do that?

Karthik said...

@CHRIS

ennada nakkala...mudicharren seekiram,:)

Karthik said...

@ Vinoth

Sure...this episode is a routine post and i cant avoid i can not jump for all the instances so it was like a chewing gum

Karthik said...

@ hussain

Yeah great that u remember mate...I have been bugging him daily to get the write up..He is just postponing.This diwali i am gonna get it from him for sure...100%