அம்மா லாஸ் எங்க ?

இந்த கேள்வி ஒவ்வொரு தடவை பிரியா கேட்கும் பொழுதெல்லாம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பது அவர்களுக்கு வழக்கம்.ஆனால் இந்த தடவை அம்மா தெளிவாக பதில் சொன்னார் .

லாஸ் யோகியோட இருக்கான் !

யோகி எப்ப வந்தான்

நீ உள்ள இருக்கும் போது

ஹோ

சந்தானத்திற்கு அது சரி என்று தோன்றவில்லை.ஆனால் ராஜேஷ் நம்பிக்கையாக இருந்தான்.அவன் நண்பன் ஹேமாவின் உத்தியில் தான் இந்த மாதிரி ஒரு நாடகம் .ஹேமாவின் கணிப்பு சரியாக இருக்கும் என்று ராஜேஷ் நம்பி இருந்தான்.அதற்காக அவன் பல விதமாக ஏற்பாடும் செய்து விட்டான்.அவன் அரசு மருத்துவமனையில் தான் மருத்துவராக இருப்பதால் அவனுக்கு எல்லாம் ஒரு சேர ஏற்பாடு செய்ய முடிந்தது.சரியான நேரத்திற்காக காத்து இருந்தான்.

ராஜேஷ் வெளியே இருந்து வேகமாக உள்ளே நுழைந்து மிக பரபரப்பாக ப்ரியாவின் முன் நின்றான்.

"என்ன ஆச்சு ?" என்று மஞ்சு கேட்டாள்

பிரியா கிளம்பு

எங்க ?

கிளம்பு சொல்றேன்.சார் நீங்களும் கிளம்புங்க.

ப்ரியாவின் போக்கிற்கு அவளை விட்டு ஒரு மாதம் ஆகி இருந்தது.அவள் சந்தோஷமாக காணப்பட்டாள்.அடிக்கடி வெளியே செல்லும் பொழுதும் சந்தானம் அவளை தொடர்ந்து சென்று அவள் நடவடிக்கைகளை பார்த்து கொண்டு தான் இருந்தார்.அவள் எங்கும் செல்லவில்லை.யோகியை பார்க்க போகிறேன் என்று சொல்லி பார்க்கில் அமைதியாக அமர்ந்து விட்டு வருவாள்.பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவர் சகித்து கொண்டார்.எல்லாம் ஹேமாவை பார்க்கும் வரை.அவள் மும்பையில் பெரிய மனோதத்துவ நிபுணராக இருந்தாலும் அவள் ராஜேஷின் நட்பிற்காக ப்ரியாவை மூன்று முறை சந்தித்தாள்.அவள் நடவடிக்கைகளை இரண்டு நாள் அவளுடன் இருந்து கவனித்தாள்.

இது ஒன்னும் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி எல்லாம் இல்ல! hallucination தான்.cure பண்ணலாம்.நீங்க எல்லோரும் ஒத்துழைக்கனும் .இது ஒரு kind of Exocircism மாதிரி தான்.சும்மா சொல்றேன்.பயபடாதீங்க .

பிரியா கொஞ்சம் கலவரம் அடைந்தாள்.

என்ன ஆச்சு

யோகி !!

யோகி ?என்ன ஆச்சு

ராஜேஷ் தன் காரிலேயே எல்லோரையும் கூட்டி சென்றான்.அவர்கள் மருத்துவமனையில் நின்ற பொழுது இரவு நேரத்தை எட்டி இருந்தது.

என்ன ஆச்சு சொல்லுங்க

மஞ்சுவும் ப்ரியாவுடன் கேள்வி கேட்பது போல் நின்று கொண்டிருந்தாள்.

" யோகியும் லாசும் பார்க் கிட்ட ஒரு விபத்தில ?"

விபத்தில ?

Yogi had a severe head injury and he is !!!

உங்களுக்கு எப்படி தெரியும் ,அது யோகி இல்ல !

நீயே பாரு

நானா வேண்டாம் ! நான் நம்ப மாட்டேன்.

நீ பார்க்கணும் ,கண்டிப்பா பார்க்கணும்

எப்படி நடந்தது.

"ஒரு தண்ணி லாரி மேல மோதி தலையில அடி பட்ருச்சு.யோகிக்கு யாருமே இல்லாததால் அவங்க அவன் மிஷன் க்கு சொல்லிருக்காங்க.அவன் கடைசியா என் கூட தான் பேசினான்.அதனால எனக்கு கூப்பிடாங்க .நான் அவன இங்க அட்மிட் பண்றதுக்கு உள்ள He is dead."
நோ நான் நம்ப மாட்டேன்.நீங்க எல்லோரும் நடிக்கிறீங்க

மஞ்சு அக்கா ,நீங்க பார்த்து சொல்லுங்க.

மஞ்சு உள்ளே சென்று விட்டு திரும்பும் வரை பிரியா திடமாக இருந்தால்.அவள் அழுகை அவளை எட்டி பார்க்க என்னும் நிமிடங்கள் பிடிக்கும் என்று அவள் கண்கள் சொல்லியது.

லாஸ் ?

லாஸ் Was crushed
என்ன சொல்றீங்க ?நீங்க ஏன் இப்படி பேசறீங்க

மஞ்சு ஆமாம் என்று சொன்ன பொழுது அவள் உடைந்து கொண்டிருந்தாள்.அதை அவர்கள் யாரும் உணரவில்லை.அந்த மனம் மறுபடியும் உடையும் கணத்தில் அவள் எண்ணங்கள் எப்படி எல்லாம் அடைபட போகிறது என்று அவர்கள் உணரவில்லை.

'யோகி" என்று அவள் தரையில் அமர்ந்தாள்.

ராஜேஷ் ஷிப்ட் டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு வெத்து காகிதத்தில் கைஎழுத்து போடுவது போல் நடித்து விட்டு கிளம்பினான்.

'நான் அவனை பார்க்க மாட்டேன்.இது உறுதி .லாஸ் லாஸ் லாஸ் "

பிரியா கொஞ்சம் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.அவளது எண்ணங்களும் சில முடிவுகளும் சீக்கிரமாக எழுதபடுவதை நினைத்து அவள் கனமாகி கொண்டிருந்தாள்.
அழுதாள் அழுதாள் .அவள் தன்னை உணரும் வரை அழுதாள்.இழப்பை நினைத்து அழாமல் அந்த தனிமை மீண்டும் வரப்போவதை நினைத்து அழுதாள்.தனிமையில் தான் எப்படி மீள போகிறோம் என்று பயந்து போய் அழுதாள்.யாரும் அவளை நெருங்க வில்லை.
ஹேமா சொல்லியது போல் தான் நடந்தது.அவள் இழப்பை உணர்த்து கொண்டாள் .லாஸ் யோகி இப்பொழுது இல்லை என்பதை ஒரு வாரம் கழித்து அவள் ஒத்துக்கொண்டாள்.அது வரை சந்தானதிற்க்கும் ராஜெஷிர்க்கும் சந்தோஷம் தான்.ஆனால் அவளது அடுத்த நடவடிக்கைகளை பற்றி அவர்கள் தெரியாமல் குழம்பி கொண்டிருந்தார்கள்.
அவர்கள் குழும்பும் படி தான் எல்லாம் நடந்தது.

4 comments:

Anonymous said...

mudiyuma mudiyaadhaa. mudiyalana un pechu kaaa. where do you come up with such ideas?

Vinoth Pradeep said...

machi so quick.. but almost 80% the characters are not touching my heart.. donno why :).

Looks like a mega serail coming to an end.. within 10 episodes director kills almost 80% characters to conclude.. seems that has been used here as well :P

But i know u will keep gng for few more posts.. lets see :) Keep going..

Karthik said...

@ Chris
dai...unnai thaan thedikkittu erukken...un last comment eh sema effect koduturuchu...Mega serial nnu sonna...ellorum enakku mail anuppi " I abide by chris comment ngranga " padupavi...eppo tempo va mathina udane eppadi pannittey...:(

Karthik said...

@ Vinoth

Machi,Yeah machi...it was quick

since it was all with priya las and yogi .u forgot santhanam who is her father...he comes in the second episode...And ofcourse there are only very less characterss..Hema is a notional character which is only for support.I didnt want to kill Yogi and laas its a happening thats it...And BTW...iT WILL END VERY SOON