யோகி !ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் யார் அவன் என்று தெரியவில்லை.இன்றுடன் நான் அவன் வீடிற்கு மூன்றாவது முறை செல்கிறேன்.அவனும் என்னை வந்து வீட்டில் பார்க்கிறான்.சில நேரம் என்னை மறந்து அவனிடம் லயித்து போகிறேன்.என் கதைகளை தோண்டி எடுக்க அவனுக்கு விருப்பம் இல்லை.அது எனக்கு பிடிக்கிறது.
நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன் அப்புறம் எல்லாம் தலை கீழ் ஆயிடுச்சு
ஹ்ம்ம்
நான் ஒரு விவாகரத்து ஆன பெண் என்பதை அவன் மிக சரியாக எடுத்து கொண்டான்.அவனுக்கு நான் ஒன்றும் பெரியதாக விளக்கம் சொல்லவில்லை.அவனும் கேட்கவில்லை.எங்கள் பேச்சுக்கள் ஓவியம்,நேரம்,லாஸ்,சமூகம் ,பெண்மை,ஆண்கள்,என்று எல்லாவற்றையும் தொட்டது.எனக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசுகிறான்.அது தான் என்னை ஒரு Comfort இல் வைத்து இருக்கிறது.
இந்த செக்ஸ் என்ன பெரிய பாவ செயலா என்ன ? எனக்குள் நேர்ந்த அதே எண்ணம் தான் அவனுக்கும் தோன்றி இருக்கிறது.அன்று இரவு நான் அவன் வீட்டில் தங்குவதாக இல்லை.ஆனால் என் வண்டி ரிப்பேர்,என்னை அங்கு தங்க செய்துவிட்டது.எனக்கு கண்ணியம் என்பதற்கு அர்த்தம் மனோவுடன் வாழ்ந்ததற்கு பிறகு தெரியாமலே போய் விட்டது.அதற்காக நான் ஒன்றும் கண்ணியம் இல்லாமல் ஒன்றும் காரியம் செய்ய மாட்டேன்.என் விருப்பம் மட்டும் அல்ல.இது எனக்குள் ஒரு பதிலை தருகிறது.
ஹ்ம்ம்
அவன் ஸ்பரிசம் என்னை தட்டி எழுப்பியது.அவனிடம் கேட்க வெட்கமாகவும் இருந்தது.ஆனால் என்னை புரிந்து கொண்டவனாக இருந்தான்.அடிக்கடி அந்த இரவு மனோ நினைவில் வந்தான்.அவன் செயல்களும் அவன் வெற்றி கொண்ட உடன் என்னை பார்க்கும் கோணங்களும் நினைவில் வந்தது.மனோவை யோகியின் காற்று தூர தள்ளி கொண்டு இருந்தது.எனக்கு ஒரு இரவு என்பதை விட அது ஒரு தீர்வு என்றே தெரிந்தது.என் தனிமைக்கு ஒரு முற்றுபுள்ளி போல் தெரிந்தது.நான் அவனை தடுக்க வில்லை.எல்லாம் ஒரு இமைபோழுதுக்குள் முடிந்து விட்டது.
யோகி எழும்பியவுடன் அவனை பார்த்து கொண்டிருந்தேன்.மெதுவாக எழுந்து சிகரட்டை பற்ற வைத்தான்.The best thing after sex is a fag .எவ்வளவு சரி என்பது அப்பொழுது எனக்கு விளங்க வில்லை.
யோகி நீங்க என்னைய தப்பா நினைக்க கூடாது
ஹே ஏன் அப்படி சொல்றே
தெரியல என்னகு தோணுச்சு அதான் சொல்றேன் !!
என்னை தழுவிகொண்டான்.எனக்கு அப்படியே எல்லாம் நின்று விட கூடாதா என்று தோன்றியது.
யோகி என்ற மனிதன் எனக்குள் தந்த தீர்வை நினைத்து கொண்டு நான் லாசுடன் அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தேன்.மணி பதினொன்று .எனக்கு பசிக்கவில்லை.
லாஸ் என் அருகில் தான் படுத்து இருக்கிறது.லாசை என் கைகள் தழுவி கொண்டுகின்றன.லாஸ் என்னை பார்த்து சிரிப்பது போல் இருக்கிறது.என் கண்கள் சொருகி கொண்டு தூக்கம் வருகிறது.
பிரியா பிரியா பிரியா பிரியா
கதவை பக்கத்து வீட்டு ராஜேஷ் மனைவி தட்டும் பொழுது அந்த குடியிருப்பே வெளியே வந்து விட்டது.ராஜேஷ் ப்ரியாவின் பிளாடிற்கு எதிர்த்த வீட்டில் இருக்கிறான்.ப்ரியாவின் விவாகரத்து அன்று அவனும் அவன் மனைவியும் தான் அவளை சமாதான படுத்தி அழைத்து வந்தார்கள்.மனோவையும் ப்ரியாவையும் நன்கு அறிவார்கள்.ப்ரியாவின் தனிமையை அவர்கள் என்றும் தொந்தரவு செய்ததே கிடையாது.தினமும் அவளது செய்யல்களை ராஜேஷின் மனைவி மஞ்சு பார்த்து கொண்டு தான் வந்தாள்.அடிக்கடி அவள் ஒரு நிலை இல்லா உருவம் போல் தனியாக பேசி கொண்டு வந்ததையும் அவள் ரச்ஜெஷிடம் அடிக்கடி கூறுவாள்.
என்ன ஆச்சு
பிரியா நேத்து நைட் ல இருந்து கதவ திறக்கல
36 மணி நேரமா ஒரு பெண் தூங்குவா
பிரியா பிரியா
அவ மொபைலுக்கு அடிங்க
அது அடிட்சுகிட்டு தான் இருக்கோம்.
பக்கத்து வீட்டில் இருந்து எல்லோரும் வந்தார்கள்.வாட்ச்மேன் அறுபது வயசுக்காரர் என்பதால் அவரால் பெரிய அளவில் உதவி எதுவும் செய்ய முடியாமல் நின்று கொண்டிருந்தார்,ராஜேஷ் தன் மகன் கௌதமை ஜன்னல் வழியாக ஏறி பிரியா படுத்து இருக்கும் படுக்கை அறை வழியாக அவளை எழுப்ப அனுப்பினார்.கெளதம் பதினாறு வயது சிறுவன் என்பதால் சுலபமாக ஏறி ஒரு கம்பை வைத்து ப்ரியாவை தட்டினான் .
பிரியா திடுக்கிட்டு எழுந்தாள்.
அக்கா எழுந்துறீங்க
ஹ்ம்ம் ஹ்ம்ம்
அக்கா நான் கௌதம் கதவ திறங்க
ஹ்ம்ம்
அக்கா அக்கா ,இரண்டு நாளா நீங்க தூங்குறீங்க
பிரியா பயந்து போய் கதவை திறந்தாள்.அந்த கூட்டம் அவளை திடுக்கிட வைத்து விட்டது.
ஹே பிரியா என்ன ஆச்சு
ஹ்ம்ம் ஒன்னும் இல்ல ,தூங்கிட்டேன்
எப்படியா தூங்குவே சாப்பிடாம ? நாங்க பயந்து போய்ட்டோம்
ராஜேஷ் எல்லோரையும் அனுப்பி வைத்தான்.மஞ்சு ப்ரியாவை உள்ளே அழைத்து சென்றாள்.வீடு அலங்கோலமாக இருந்ததை பார்த்து அவள் திடுக்கிட்டாள் .பிரியா எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்து இருப்பாள்.ஆனால் அவள் அப்படி வீட்டை வைத்து இருந்தது மஞ்சுவிற்கு வித்தியாசமாக இருந்தது.
என்னடி என்ன ஆச்சு
ஒன்னும் இல்ல ? தூங்கிட்டேன்.
நானும் உன்னை இரண்டு வராம பார்த்துட்டு தான் வர்றேன்,கூபிட்டா கூட திரும்ப மாட்டிக்கிற ?
அப்படி எல்லாம் இல்ல.இந்த லாஸ் கூட இருந்தேனா அதான் !
லாசா ?
ஆமாக்கா லாஸ் என் குட்டி நாய்
என்ன சொல்ற ? நான் பார்கவே இல்ல ?
நீங்க பார்க்கல ?
இல்ல
லாஸ் லாஸ் லாஸ்
என்று பிரியா எழுந்து சென்று லாசை தேடினாள்.லாஸ் இல்லை !
எங்க போனான் ?இங்க தான் இருப்பான்
மஞ்சு அவளை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தாள்.அவளுக்கு பயம் வந்துவிட்டது.ராஜேஷ் ப்ரியாவின் செயல்களை பார்த்து கொண்டு தான் இருந்தான்.ராஜேஷ் ஒரு டாக்டர் என்பதால் அவனுக்கு அவள் என்ன செய்கிறாள் என்று தெரிந்து இருந்தது.

4 comments:
Story is progressing very well machi. That too now a days u r daily posting the episodes, expectations r increasing day by day..
Cheers
Hussain
hey thanks mate....:)
machi enna da.. yet another pyscho storya??
Waiting for the next post..
PS: "The best thing after sex is a fag ".. Machi chumma pinnita da :P
@ vinoth...
experience gives words...ha ha ha
Post a Comment