எதுவும் செய்யவில்லை,என்னை பார்த்தாலே எனக்கு கொஞ்சம் வேறு மாதிரி தெரிகிறது.வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறேன்.மீனாக்ஷி ரெட்டி மாதவனின் " யு ஆர் ஹீயர் " என்ற புத்தகத்தை முடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறேன்.சாய்வு நாற்காலி என்ற புத்தகத்தை வாங்கி வைத்து கொண்டு படிக்காமல் தினமும் புரட்டுகிறேன்.வாரணம் ஆயிரம் பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருக்கிறேன்.என் துணிகளை அயர்ன் செய்ய கூட தரவில்லை.

ஜிம்மிற்கு ஒழுங்காக செல்கிறேன்.அங்கே ஒரு அழகான பெண்ணை பார்த்து கொஞ்சம் தடுமாறி இருக்கிறேன்.பேசியும் விட்டேன்.காபி ஷாப்பிற்கு அழைத்தும் விட்டேன்.பொது இடத்தில் சிகரட் குடிப்பது இல்லை.காலை ஏழுமணிக்கு எழுந்து விடுகிறேன்.கொஞ்சம் ப்லாக் எழுதுகிறேன் ,கொஞ்சம் படிக்கிறேன்.ப்ரீ பெயிட் கார்டுக்கு மாறி விட்டேன்.ஷேர் மார்க்கெட் பக்கம் சென்றால் அழுகை வருகிறது.லட்ச கணக்கில் இழந்து இருக்கிறேன்.மூன்று வருடத்தில் சம்பாதித்தது எல்லாம் திவாலாக ஆகி கொண்டிருக்கிறது.தீபாவளி விற்பனையில் ஒன்றும் வாங்க போவது கிடையாது.

இன்டர்நெட் இல் புக் செய்து படம் பார்ப்பது இல்லை.அருகில் இருக்கும் அரங்கத்தில் நேராக சென்று அறுபது ரூபாய் டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறேன்.அதிகம் எதுவும் ஊர் சுற்றுவது கிடையாது.அண்ணா நகர் பார்க் பக்கம் சென்று வருகிறேன்Perfume brand கூட விஸ்கி பிராண்டில் இருந்து ஹாட் பிராக்நன்ஸ்க்கு மாற்றி விட்டேன்.ஒடிந்த மொபைல் போனிற்கு பேணல் மாற்றி பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.

கையில் முதன் முறையாக பணம் இல்லாதது போல் ஒரு எண்ணம் தோன்றுகிறது.இந்த மாதம் முதல் என் புது வீடிற்கு EMI count down starts.........

7 comments:

Pilani Pictures said...

Adappaavi....apdiya matter?! :(

Karthik said...

he he ...amam machi,,,konjam kadiya thaan erukku

Vinoth Pradeep said...

ahhaa "EMI life" ahahha.. You will love that dude.. can't stop laughing ehhe

Nice one dude.. i liked it

Anonymous said...

pudhu veedu?
kalakura chandroooooo

Karthik said...

@ Vinoth

:((( padupaavi athula oru santhoshama :(( en nadum nattu makkalum nashamaga pogattum

Karthik said...

@ Chris

amam sir.. near tirunelveli..probably siva wants to meet u and joseph there...he was discussing this yesterday..he has already made plans for diwali

Sivaram said...

Ammam we all will meet up there and we shall go for the movie Vaaranam Ayiraam