பாரதியாரின் "மாலை பொழுதினிலே மேடை மிசையே"கவிதையில் கவிதயை தழுவியது (நடை)


ஆற்றங்கரை மீதினில்
அழகிய ஒரு பொழுதினில்
தென்றல் காற்றை நுகர்ந்து இருந்தேன்
அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள்
சித்தம் தளர்ந்தது உண்டா
பித்து பிடித்தது போல்..!
வெற்று கோப்பை நிறைந்த நிலை என்னிடம்
அறிய வாய்ப்பும் இல்லை
கவிதை வடிவமும் இல்லை
முகம் படியும் முன் மறைந்திருந்தாள்
தீயில் எரித்த தேகம் போல் இறுத்த நிலை
மோகமா என்று பிரிக்க முடியவில்லை
தேடி அலையும் திறன் இல்லை
வலியாக தோன்றவில்லை
ஆனால் தேடியது மாதுவை அல்ல
உணர்வாய் மெய்யாய் தேடும் மூலம்
எங்கு கிளம்பியது என்னிடம்?
ஒவ்வொரு பொழுதும் கேள்விகளுடனே கழிகிறது
கனாவுக்கு விதைகள் எங்கே முளைக்கின்றன?
கவிதை,மெய்,வலி,திறன்,விடை,விதை
தேடி செல்வது நான் தான்
நான் தெளிந்து விட்டேன்
ஆனால்
எனக்குள் இருக்கும் நிலை தான் தெளிய மறுக்கிறது..!

0 comments: