நான் கிளம்பினேன்
என் தெரு முனையில் ஒரு வயோதிகர் கிளம்பினார்
இருவரும் பொது சாலைக்கு வந்து சேரும் போது
எங்களுடன் பத்து பேர் வாகனத்தில் சேர்ந்திருந்தார்
கூட்டமாக போருக்கு கிளம்புவது போல்
ஓர் ஆயிரம் பேர்
என் முன்னே பின்னே -பத்து நிமிடத்தில்!
நான் காலை உண்னாத களைப்பில் !
பலர் செல்போனில்
பலர் ஏதோ நினைவில்!
அந்த மஹாபலிபுரம் சாலை ஸ்தம்பித்து வழிந்தது.
ஏதோ ஒரு பெண்
என் காதில் வானொலி மூலமாக கொஞ்சி கொண்டிருந்தாள்
ஒருவன் கிடைத்த நேரத்தில்
ஒரு சிகரெட் புகைத்து முடித்து விட்டான்
பொறாமையாக இருந்தது
எத்தனையோ வேற்றுமைகள்
ஆனால்
எங்கள் அனைவரையும் ஒன்று இணைத்து இருந்தது
"ஏதோ ஒரு முகம் தெரியாத
அமெரிக்ககனுக்கு
ஊழியம் செய்ய கிளம்பி விட்டோம்"


2 comments:
hooooo.. good.. liked the way u presented..
-:)
Post a Comment