Sep 18, 2007

withoutக்கள்


மதுரையில் உள்ள மாப்பிளை விநாயகர் அரங்கத்தை போல் எனக்குள் ஒரு விதஉலக அறிவை (திரைப்படம் உட்பட) தினமும் புகட்டும் இடம் வடபபழநி நிறுத்தகம்
எத்தனை மனிதர்கள்,எத்தனை வாகனங்கள் ,எத்தனை உணர்ச்சிகள்,எத்தனை கனவுகள் திரை பட சுவரொட்டிகள்,அரசியல் கூத்துக்கள்.ஏ வி ம் ஸ்டூடியோ அருகில் இருப்பதாலோ என்னவோ எனக்குள் மனிதர்களின் ஒவ்வொரு அசைவையும் ஒரு குறும்படமாகவே பார்க்க தோன்றும்.காலை 8 மணிக்கு தினமும் அந்த சிக்னலில் நிற்கும் போது தான் புரிகிறது,இன்று உலகத்தில்எத்தனை விதமான தேடல் உள்ளது?! கொஞ்சம் வாகனத்தை நிறுத்தி விட்டு ரசிப்பதுஎனக்கு 2 வருடமாக வழக்கமாகி விட்டது.இந்த முறை நான் என் கண்களை செலுத்தியது அங்கே புதிதாக முளைத்திருக்கும் தமிழ் எம் ஏ திரை படத்தின் சுவரோட்டியை நோக்கி!!.அதில் இருக்கும் கவிதையை வாசிக்க நான் சிரமப்பட்டது என் வாகனத்துக்கு மட்டும் தான் தெரியும்.ஏன் என்றால் அது ஒட்டி இருப்பது சரியாக சிக்னலின் நேர் மேலாக.வாசிப்பது கொஞ்சம் சிரமான இடம் . அதனால் முழுதாக வாசிக்க ஒரு வாரம் ஆகி விட்டது.ஆனாலும் அந்த கவிதை என்னை ஏமாற்றவில்லை
இதோ அந்த கவிதை

"முடியாமல் நீளும் இரயில் பயணங்களில் காதலும் கவிதையும் மட்டும் தொடர்வதில்லை இரத்தமும் கொலையும் கூடவே தொடரும் புறக்கணிக்கப்பட்ட unreserved வகுப்புகளைப் போலவே ********************************************************* ஆனால் இதில் ஒரு குட்டி advantage என்னவென்றால்
இந்த பயணத்தில் இரத்தச் சுவடு உள்ளவர்களிடம்யாரும் டிக்கெட் கேட்பதே இல்லை
சில நேரம் without எல்லாம் உண்மையில் withoutகளே இல்லை

நான் இந்த கவிதையை இன்று மனப்பாடம் செய்து வந்தாலும் ஒரு வரியை மறந்து விட்டேன்.இந்த கவிதையின் பொருள் ஆயிரம் விளக்கம் தரும்.
தமிழ் எம் ஏ வின் கதை ஒரு எம் ஏ படித்த வேலை இல்லா பட்டதாரியை பற்றியது.
சொல்லவே வேண்டாம் அந்த புலவன் சொல்ல முனைந்ததுருப்பது எதை பற்றி என்பதை.

சமுதாயத்தின் அவலம் ,ஏமாற்றம் ....!

4 comments:

Vinoth Pradeep said...

Karthick.. good work.. i wonder how u still can steal time in our busy schedules...

Many tamil words that u have used still reminds me our School days (golden past)..

Really Good.. Keep going..

Karthik said...

நன்றி நண்பா! அப்போது எழுத பல தடை ! இப்போது எழுத ஒரே தடை. நேரம் ! கொஞ்சம்
சமாளித்து கொள்கிறேன்...:)

Deepa said...

///முடியாமல் நீளும் இரயில் பயணங்களில்
காதலும் கவிதையும் மட்டும் தொடர்வதில்லை
இரத்தமும் கொலையும் கூடவே தொடரும///

அருமையான கவிதை.. இதை கவனித்த உங்களுக்கு ஒரு சபாஷ்..!
//இரத்தமும் கொலையும் கூடவே தொடரும//
எவ்வளாவு தாக்கம் இருக்கு... சில நேரத்தில் literally ( bihar -UP போல்).. பல நேரத்தில் figuratively (middle class பெற்றோற்கள் போல்)..பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்.. அவர்களை வேறுக்கவும் மனம் வராமல்.. அப்பப்பா... தினம் தினம் கண்ணாடியில் பிரதிபலிக்கும் சோகம்

Karthik said...

நன்றி தீபா !தாக்கம் நிறைந்த கவிதைகளில் சோகமும் பீறிக்கொண்டு வருவதை தடுக்க முடிவதில்லை.